அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


தாம்பரம்: பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் போதிய டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, சட்டமன்ற தேர்தலின்போது உறுதி அளித்தார். அதன்படி, தொகுதி முழுவதும் 63 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 100 கிலோ வாட்ஸ் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக 7 இடங்களில் அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_50710696.jpgபல்லாவரம் தொகுதியில் ரூ.2 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளரான இவர், கடந்த 26ம் தேதி பாரிமுனை ராஜாஜி சாலையில் பைக்கில் சென்றபோது, திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, தண்டையார்பேட்டை தாண்டவராயன் கிராமணி தெருவில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று சுந்தரராஜன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, எம்எல்ஏக்கள் எபினேசர், ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சுந்தரராஜன் உடல் நேற்று மாலை காசிமேடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த சுந்தரராஜனுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், பிரபாகரன், சத்தியநாராயணன் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_91119022.jpgதிமுக பொறுப்பாளர் மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி


பல்லாவரம்: பல்லாவரம் அருகே பம்மல் பிரதான சாலையில் கமலேஷ் ஜெயின் (37) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி, தனக்கு பெரிய தங்க செயின் வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கமலேஷ் ஜெயின், தன்னிடம் இருந்த 6 தங்க செயின்களை அவரிடம் காட்டியுள்ளார்.  அவற்றை கழுற்றில் அணிந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென நகையுடன் வெளியே ஓடியுள்ளார்.அங்கு, பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் மின்னல் வேகத்தில் தப்பினார். தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் திருடிய நகைகள் 30 சவரன் என்று கூறப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_99520511.jpgநகை வாங்குவது போல் நடித்து 30 சவரனுடன் ஆசாமிகள் ஓட்டம்


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் வெளியிட்ட அறிக்கை:  தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். பேரறிஞர் அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார்.எனவே நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என மாற்றிட, 1967 ஜூலை 18ம் நாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த ஜூலை 18ம் நாளை, ‘தமிழ்நாடு நாள்’ அன்று கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_64950198.jpgஜூலை 18 தமிழ்நாடு மலர்ந்த நாள் தமிழ்நாட்டு பெரு விழாவாக கொண்டாடுவோம்: வைகோ அறிக்கை


சென்னை: கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.  மீதமுள்ள நிலங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. அதன்படி தற்போது வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நில அளவைத்துறை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் கண்டறியும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களில் புதிதாக கட்டிடம் கட்டவோ, பத்திரம் பதிவு செய்யவோ தடுக்கும் வகையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * கோயில் நிலங்களில் சட்ட விரோதமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.* கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சொத்து வரி மற்றும் வீட்டுவரி ஆகியவற்றிற்கான ரசீதுகளை கோயில் பெயரில் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனி நபர்கள் பெயரில் ரசீது வழங்கக் கூடாது.* குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் வரி கேட்பு ஆகியவை அனைத்து ஆவணங்களும் கோயில் பெயரில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும். தனிநபர் பெயரில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.* தனி நபர்களால் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்படும்போது, அச்சொத்து கோயிலுக்குச் சொந்தமானதா என்பதை கண்டறிந்து, கோயில் பெயரில் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் மின் இணைப்பு பெற முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.       * கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு என்பதையும், அதனை அளவீடு செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நில நிர்வாக ஆணையரகத்துடன் இணைந்து ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட வேண்டும். தனி நபர் பெயரில் பட்டா வழங்குவதை தவிர்த்தல் வேண்டும். மேலும், நில நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்கள் உதவியுடன் வருவாய்த் துறையும் மற்றும் அறநிலையத்துறையும் இணைந்து, கோயில் நிலத்தினை வருவாய்த்துறை ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் தனி நபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்களை கண்டறிந்து அவற்றை கோயில் பெயரில் மாற்றம் செய்தல் வேண்டும். வருவாய்த்துறையில் நடைபெறும் வருடாந்திர ஜமாபந்தியில் யாவும் களஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். மேலும், அத்தகைய நிலங்களில் கோயில் நிலங்கள் ஆய்வுக்கு ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களைப் பட்டியலிடுதல் வேண்டும்.* மாவட்டம்தோறும் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோயில் நிலங்கள் தொடர்பான பதிவேடுகளை முறையான கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_11617679.jpgசொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு தனி நபர்கள் பெயரில் பெறுவதில் கிடுக்கிப்பிடி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?...ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம்
வாணியம்பாடி அருகே பரபரப்பு நடுரோட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் எஸ்ஐயுடன் கட்டிப்புரண்டு சண்டை: பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர் https://ift.tt/3bqmxkT
திருமாவளவன் எம்.பி. பேச்சு ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வேண்டும் https://ift.tt/3BuHlC3
ரயான் நூல் விலை உயர்வு: விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி https://ift.tt/3nR5ONs
புதுவையில் 100% பார்வையாளருடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதி https://ift.tt/2ZJ42pi
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை தண்ணீரில் மிதக்கும் வாழை தோட்டங்கள் https://ift.tt/3EBTSpx
தினசரி அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் லாரிக்கு ஏற்று, இறக்கு கூலி கொடுக்க இயலாது: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு https://ift.tt/3GGloDQ
கன்டெய்னர் லாரி மோதி தூய்மை பணியாளர் பலி மற்றொருவர் சீரியஸ் https://ift.tt/3GGlnzM


சென்னை: காவலர் வீர வணக்க நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்திடும் வகையில் நேற்று 7 கிலோ மீட்டர்தொலைவு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 125க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 தேதி பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்  போலீசாருக்கு “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில் கடந்த 21ம் தேதி முதல் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு அப்போது பணியின்போது இறந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. மேலும், காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சென்னையில் பல்வேறு இடங்களில் காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு, சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று தரமணி காவல் உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், ராமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் எஸ்ஆர்பி சந்திப்பில் இருந்து  திருவான்மியூர் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 7 கி.மீ தொலைவு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் 125க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள், போலீசார், தன்னார்வாலர்கள் கலந்து கொண்டனர். மேலும் சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமை காவலர் ராஜா ஏற்பாட்டில் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

https://ift.tt/3pTKnxD காவலர் வீர வணக்க நாள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிய 7 கி.மீ.தொலைவு சைக்கிள் பேரணி: 125க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு


சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் 23ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. திரையரங்குகளில் 100 சதவீத பர்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பஸ்களில் பயணிகள் 100 சதவிகித இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கலாம். தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் நடத்தலாம். படப்பிடிப்புகளில் பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறக்கப்படுவதை முன்னிட்டு, பார்களை முழுமையாக சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபடுத்தப்பட்டனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. பார்களின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். இதற்காக தனியாக குறிப்பேடும் இன்று முதல் பராமரிக்கப்பட உள்ளது. பார்களுக்கு உள்ளே வரும் அனைவருக்கும் வெப்ப அளவீட்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.  முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி தென்படும் நபர்கள் பார்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கைகளில் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோய் தொற்று விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_99702091.jpgடாஸ்மாக் பார்கள் இன்று முதல் திறப்பு: கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் அபராதம்


சென்னை, நவ.1: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசும்  சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தப் போவதாக  வேளாண் நிதிநிலை அறிக்கையில்  அறிவித்திருக்கிறது. சிறுதானிய உணவு வகைகளில் பயன்கள் குறித்து யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில்  வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் சிறுதானிய உணவு வகைகளை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

https://ift.tt/3w0eGE2 சத்துணவு திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்க வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்


சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புற கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு சுமார்ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.50% மேல் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் அந்த பணிகளை  சென்னை மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். நமக்கு நாமே திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களின் விவரம் திட்டப்பணி முடிவுற்றவுடன் அவ்விடத்தில் பெயர் பலகையில் காட்சி படுத்தப்படும்.நமக்கு நாமே” திட்டத்தில் பங்கேற்று விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்டத்தை தேர்வு செய்து சென்னை மாநகராட்சி ஆணையர்,துணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம்.மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 9444100198 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_82156009.jpgநமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பங்களிப்பு வழங்கலாம்:சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னை: காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள ‘மணற் சிற்பத்தை’ போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் துப்பாக்கிகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறை சாாபில் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒரு வாரம் வீர வணக்கம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனால் மாநகர முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரையில் காவல் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாநகர போக்குவர்துது காவல் மற்றும் ஐசிஏடி மீடியா கல்லூரி இணைந்து ‘மணற் சிற்பம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணற் சிற்பத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை திறந்து வைத்தார். முன்னதாக மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள பணியின் போது மரணமடைந்த காவலர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவர்தது கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார், இணை கமிஷனர் லோகநாதன், செந்தில் குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_97866458.jpgகாவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ‘மணற் சிற்பம்’: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்


சென்னை: அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில்ரூ.1000க்கு கீழ் மாத ஊதியம் பெறும் பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 4ம் தேதி சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது, ஒரு கால பூஜை நடைபெறும் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகைரூ.1000 வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியரர்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் தோறும் 5ம் தேதியன்று தலைமை அலுவலகத்தில் இருந்து தலாரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் மூலமாக நேரடியாக செலுத்தப்படும். பணியாளர்களின் சேமிப்பு கணக்கு எண் எஸ்பிஐ வங்கியில் இருத்தல் வேண்டும். கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர்ரூ.1000க்கும் கீழ் மாத தொகுப்பூதியம் பெறுவதாக அறியப்படுகிறது. இவ்வாறானா மாத ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிந்து வரும் பணியாளர்களின் விவரங்களை வரும் 2ம் தேதிக்குள் அனுப்பி வைகக வேண்டும். அதில்,ரூ.1000க்கு கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் பெயர், கோயில் பெயர், பணியிட பெயர், நிரந்தரம், தற்காலிகம், பணி, பணியாளர் பெறும்மாதவூதியம், வருகை பதிவேட்டினை ஒப்பு நோக்கி பணியாளருக்கு நாளது வரை மாத ஊதியம் வழங்கப்பட்டதற்கான சான்று உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_56443424.jpgஅறநிலையத்துறை கோயில்களில் ரூ.1000க்கு கீழ் மாத ஊதியம் பெறும் பணியாளர்கள்: அறிக்கை அனுப்ப கமிஷனர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு


சென்னை: தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இதனமான பருவசூழ் நிலவியதாலும், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை நேற்று களைக்கட்டியது. விதவிதமான புத்தாடை, பட்டாசு, சுவீட் வாங்க மக்கள் திரண்டதால் மாநிலம் முழுவதும் பஜார் வீதிகள் குலுங்கியது. தீபாவளி பண்டிகை வருகிற 4ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி  ‘பர்சேசை’ கடந்த ஒரு மாதமாக செய்ய தொடங்கினர். இதனால், பஜார் வீதிகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டு வந்தது.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை வேறு. மேலும் காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூரியனையே பார்க்க முடியாத அளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காற்றுடன் ரம்மியான பருவநிலை காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை முதல் தீபாவளி இறுதி ஷாப்பிங்கில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பம், குடும்பமாக வந்து கடைவீதிகளுக்கு பொருட்களை வாங்க வந்தனர். இதனால், நேரம் ஆக, ஆக மக்கள் வெள்ளத்தில் பஜார் வீதிகள் திக்குமுக்காடியதை காணமுடிந்தது. இரவு 10 மணி வரை இந்த கூட்டம் அப்படியே களையாமல் காணப்பட்டது.சென்னையை பொறுத்தவரை   வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை புறநகர்வாசிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களும் பொருட்களை வாங்க படையெடுத்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்தெடுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. மேலும் பஜார் வீதிகளில் மாஸ்க் அணியாமல் ஜாலியாக உலா வந்தவர்கள் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் மாநகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஜவுளி, நகை, பாத்திர கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்ட காட்சியை காணமுடிந்தது.பொதுமக்கள் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆங்காங்கே உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர். இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தி.நகரில் மட்டும் கண்காணிப்புக்காக 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். தீபாவளி பொருட்கள் வாங்க இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பையும்  மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பகுதிகளில் பிரமாண்ட பட்டாசு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முதல் விற்பனை சூடுபிடித்தது. மேலும் தீபாவளிக்காக பல்வேறு முக்கிய வீதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் மக்கள் பட்டாசுகளை தேர்ந்தெடுத்து வாங்கி சென்றனர். இதனால், பட்டாசு விற்பனை நேற்று விறுவிறுப்படைந்தது. சுவிட் கடைகள், தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்யும் இடங்களில் ஆர்டர் கொடுப்பதற்காக நேற்று நிறைய பேர் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் கொடுத்து சென்ற காட்சியை காண முடிந்தது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_42710513.jpgதீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நாளில் ஷாப்பிங் படுஜோர் தமிழக பஜார் வீதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடியது: நவீன ரக பசுமை பட்டாசு; சுவீட் விற்பனை மும்முரம்


சென்னை: தமிழகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் நீர், உணவு சம்பந்தமான நோய்கள் மற்றும்  டெங்கு போன்ற நோய்களை கட்டுபடுத்தவும், நோய் தடுப்பு பணிகளை  தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். லண்டன்,  மகாராஷ்டிரா, இந்தூர் ஆகிய இடங்களில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா பரவி  வருவதால் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் வருடத்தின் கடைசி மூன்று  மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.  குறிப்பாக  சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் மற்றும் பல இடங்களில் அதிகரித்துள்ளது.  எனவே கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர் தேங்கும் இடங்கள், டயர்கள்,  பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்ைப தொட்டி உள்ளிட்ட பல்வேறு முறைகளில்  கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். மேலும் கொசு  ஒழிப்பில் மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை  மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது உள்ளாட்சி அமைப்புகள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான  மருந்துகளையும், பாம்பு மற்றும்  பூச்சிகடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.  அடுத்து வரும் இரண்டு மாதங்களும் சுகாதாரத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்த மாதங்களாக கருதப்படுகிறது. எனவே நோயை தடுக்கும் வகையில் மாவட்ட  அளவில் குழுக்களை ஒன்றிணைத்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா  மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_45176334.jpgவழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றி புதிய வகை கொரோனா பரவலை தடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு


சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3ம் தேதி வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும்: சென்னை கோயம்பேட்டிலிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லும். வழக்கம் போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. இதேபோல், கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது. கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களை தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் சொல்லலாம். அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சென்னை போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_1_2021_1133365.jpgதீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: பயணிகளுக்கு காவல்துறை கோரிக்கை
ஜி.கே.வாசன் வாழ்த்து நவ.1ம் தேதி குமரி மாவட்டத்தின் பொன்நாள் https://ift.tt/3mu4EYp


சென்னை: மனிதர்கள் ஒழுக்கத்தில் மட்டுமே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என முழங்கியவர் என முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என்று சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர். பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோயிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகு வர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டை போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாக காண்பான் என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர். தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்று சொன்ன தத்துவஞானி. நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும், அதேநேரத்தில் எறும்பு கடிக்கும்போது கோபம் வராமல் வருடி கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளை பின்பற்றி நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_4549808.jpgஅனைவருக்குமான தலைவர் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் முத்துராமலிங்க தேவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் விரட்டியடிக்கப்பட்ட நரிக்குறவப்பெண்ணுடன் அமர்ந்து அமைச்சர் உணவு சாப்பிட்டார்: சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி சம்பவம் https://ift.tt/3bx1gFT


சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்   நேற்று1,021 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளது. 1,172 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்த எண்ணிக்கை 26,53,832 ஆக உயர்ந்துள்ளது. 14 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 36,097 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 11,685 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_230045.jpgதமிழகத்தில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை: அமெரிக்க நீதிமன்றத்தின் கோரிக்கையைடுத்து, பாங்காக் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ஹமீத் இப்ராஹிம் அன்ட் அப்துல்லா மெரிலாக் ஏவியன் சர்வீஸ் என்ற நிறுவனம், பெல் 214 என்ற ஹெலிகாப்டரை மாத வாடகை அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த ஏஏஆர் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து, 2019ல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள இந்த ஹெலிகாப்டரை இயக்க தடை விதித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு இந்திய அமலாக்கத் துறைக்கு அமெரிக்காவை சேர்ந்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறை வேண்டுகோள் விடுத்தது.இதையடுத்து, இந்த ஹெலிகாப்டரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வந்தனர். மெரிலாக் ஏவியன் சர்வீஸ் இயக்குநர்களின் வீடுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தும் இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பெல் 214 ஹெலிகாப்டர் சென்னையில் உள்ள ஜெ மாதாதீ இலவச வணிக கிடங்கு மண்டலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் பல்வேறு பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, பெல் 214 ஹெலிகாப்டரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_25211734.jpgஅமெரிக்க கோர்ட் உத்தரவு பாங்காக் நிறுவன ஹெலிகாப்டர் பறிமுதல்


* ஆன்லைனில் 72,597பேர் முன்பதிவு  * நாளை சிறப்பு பஸ் சேவை துவக்கம்சென்னை:  தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திட ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 72,597 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை  (1/11/2021) முதல் 3ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவோரின் வசதிக்காக 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து    செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே. நகர் மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்தில் இருந்து  இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் , திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், மற்றும் காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி  மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர,  இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்  (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  துhத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  அரியலூர், திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும்.முன்பதிவு மையங்கள்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-    10, தாம்பரம் சானிடோரியம் - 2    என மொத்தமாக 12 இடங்களில் செயல்படுகிறது. மேலும் www.tnstc.in, tnstc official app மற்றும் தனியார் ஆப் மற்றும் வலைதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு உள்ளது.24 மணிநேர கட்டுப்பாட்டு அறைபேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கார் மற்றும் இதர வாகனங்கள்கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது  ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும்.வழித்தட மாற்றம்முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இணைப்பு பேருந்துகள்மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_5985660.jpgதீபாவளி பண்டிகை ‘ஸ்பெஷல் சர்வீஸ்’தமிழகம் முழுவதும் 34,259 பேருந்துகள் இயக்கம்


சென்னை:  மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு மநீம ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறது. தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டம் 84ன்படி உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. இந்த ஆண்டில் இருந்தாவது இதுபோன்ற விதிமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_39249820.jpgவிபத்தில்லாத தீபாவளி மநீம வலியுறுத்தல்


சென்னை: பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக தற்போதைய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு கடந்த 2005 ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தியதுடன் காரை சேதப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறி அதிமுக பிரமுகர் சந்தோஷ் என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் முன் விரோதம் காரணமாக இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினர் முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதா என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_36323184.jpgபொது சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
தடுப்பூசி போட்டவர்களுக்கு 25 கிலோ அரிசி இலவசம் https://ift.tt/3pRsWh7
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு https://ift.tt/3bqfZm5
`மழை பெய்தால் மாணவர்கள் அமர முடியாது’ மாமண்டூர் துவக்கப் பள்ளியை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் https://ift.tt/2XXQBku
போந்தவாக்கம் கிராமத்தில் சமுதாய வளைகாப்பு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு https://ift.tt/3BySqCe
பேருந்து மோதி விபத்து https://ift.tt/3BrNDT3


சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரியும் 1,221 தினக்கூலி ஊழியர்களை பணிவரன்முறை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை  செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தினக்கூலி/தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக 1,221 தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த பணியாளர்களில் 35 வயதிற்குட்பட்டவர்கள் 265 பேர், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 956 பேர் உள்ளனர். கோயில்களில் பணியாளர்கள் விதிகள் 2020ன்படி கோயில் பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கு வயது வரம்பு, காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை முதல் தேதியில் 35 வயது நிறைவு செய்தவராக இருத்தல் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, 35 வயதிற்கும் மேற்பட்ட பணியாளர்களை அவர்களின் பணி, தகுதி, நன்னடத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்வதற்கு வயது வரம்பு குறித்த விதியை தளர்வு செய்து அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் கேட்டு கொண்டார். அதன்பேரில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தகுதியான பணியாளர்களை  சில நிபந்தனைகளுக்குட்பட்டு பணி வரன்முறை செய்ய அனுமதி வழங்க அரசு ஆணையிடுகிறது.* 31.7.2019 அன்று 5 ஆண்டு காலம் தொடர்ந்து தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளராக பணிபுரிந்து இருக்க வேண்டும். நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும்.* சம்பந்தப்பட்ட பணிக்கு உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு உடையவராக இருக்க வேண்டும். அரசாணை வெளியிடப்படும் தேதியில் இருந்து பணி வரன்முறை செய்யப்பட வேண்டும்.* பணிவரன்முறைக்கான முன்மொழிவு அனுப்பும் போது நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.* பணிவரன்முறை காலியிடத்தில் மட்டுமே நிரப்பும் வகையில் அமைய வேண்டும். * சான்றிதழ் உண்மையா என்பதை செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.* கோயிலில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை ஒவ்வொரு இனமாக கோயிலின் ஆண்டு செலவினம் வரம்பிற்குள் வரப்பெறுகிறதா என்பதையும், கல்வி, வயது வரம்பு குறித்த தளர்வு ஏதும் செய்வது அவசியம் தானா என்பதையும் பரிசீலித்து ஒவ்வொரு பணியாளராக ஆய்வு பணி வரன்முறை செய்ய வேண்டும்.

* கோயில்களின் சம்பள செலவின சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

பணிவரன் முறைக்கான முன்மொழிவு அனுப்பும் போது நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_62263126.jpgஅறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் 1,221 தினக்கூலி ஊழியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு


சென்னை: நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், செயலாளர் தீரஜ்குமார், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட  திட்டம் இயக்குனர் பாஸ்கரன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டஇயக்குனர் கணேசன்,  பூம்புகார் கப்பல் கழக தலைவர் சிவசண்முகராஜா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அனைத்து நெடுஞ்சாலைத்துறை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டுமானங்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஓஎம்ஆர் சாலையில் 5 பாலங்கள் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எண்ணூர், தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், பெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலை பணிகள் விரைவில் தொடங்க வேண்டும். அரசு ஒவ்வொரு திட்டங்களுக்கும் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவு செய்ய வேண்டும். உலகத்தரம் வாய்ந்ததாக பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும்.அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து அவர், சென்னை மாநகர  எல்லைக்குள் நடைபெறும் பெருங்களத்தூர், மேடவாக்கம் மேம்பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர்  முதல் அக்கரை வரை நிலம் கையகப்படுத்தும் பணி குறித்தும் ஆய்வு செய்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_56220645.jpgநெடுஞ்சாலை துறையில் டிசம்பருக்குள் 70% பணிகளை முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இது தொடர்பாக கடந்த 26ம் தேதி சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தார். இந்த அறிக்கையின் படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள உத்தரவில் 33 உதவி வருவாய் அலுவலர்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 முதல் 7 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_68386478.jpgசென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு


சென்னை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து தொழில் தொடங்குவதற்கு, ஆன்லைன் மூலம் கூட்டு ஒப்பந்த பதிவு செய்யும் நடைமுறை சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் செய்ய விரும்பும் பட்சத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்காக, மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இதற்காக, மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு அவர்கள் ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும். இதனால், கால நேரம் வீணாவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தொழில் தொடங்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டதிருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்படது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் கூட்டு ஒப்பந்த பதிவுக்கு மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வர வேண்டிய அவசியமில்லை. மாறாக ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் கூட ஆன்லைனில் செலுத்தி கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் கூட்டாண்மை நிறுவன பதிவை கட்டாயமாக்குவதுடன் சட்டரீதியாக எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_81316776.jpg2க்கும் மேற்பட்டோர் இணைந்து தொழில் தொடங்க ஆன்லைனில் கூட்டு ஒப்பந்த பதிவு செய்யலாம்: தமிழக அரசிதழில் வெளியீடு


சென்னை:  தமிழகம் முழுவதும் 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாமை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவத்துறை  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 7-வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், இதுவரை 5.73 கோடி பேருக்குதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 87% முதல் தவணையும், 48% 2வது தவணையும்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை. நவம்பர் மாதத்திற்காக 1. 40 கோடி தடுப்பூசியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி நவம்பர் மாத இறுதிக்குள் 100%, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள்  பட்டியலில் தமிழகம் இடம் பெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் மையங்களில் கூடுதலாக  பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களின் விவரம்  கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ஆட்கள் குறைக்கப்பட்டு, மாற்று இடத்தில் பணி வழங்க ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எழும்பூர் தாய் சேய்நல மருத்துவமனையில் சீலிங் பேன் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_31_2021_28065128.jpgமக்கள் ஒத்துழைப்புடன் நவம்பர் இறுதிக்குள் 100% முதல்தவணை தடுப்பூசி செலுத்திய மாநில பட்டியலில் தமிழகம் இடம்பெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
ஈரோடு எஸ்கேஎம் நிறுவன ரெய்டில் ரூ.200 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் https://ift.tt/2XZAovc
தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி https://ift.tt/3Bx96tT
தமிழகம் முழுவதும் மழை நீடிப்பு திருவாரூரில் 25,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது: குமரியில் வீடுகள் இடிந்தன https://ift.tt/3CqOJzM
டெல்டாவில் விடிய விடிய பலத்த மழை 4,000 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது https://ift.tt/2ZxW9CX
பவானி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் அரசு பெண் டாக்டர் உட்பட 3 பேர் சாவு https://ift.tt/3mpv1yK
ஆவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 3 கோடிக்கு தீபாவளி இனிப்பு விற்பனை: அமைச்சர் நாசர் தகவல் https://ift.tt/3nK5RdC
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி 1ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும்: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை https://ift.tt/3bloEWW


சென்னை: சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீராமன் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தின், தி.நகர் தலைமை தபால் நிலையம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பார்சல் பேக்கிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்ப விரும்பும் பரிசுப் பொருட்களை துரிதமாக அனுப்பி பயன்பெறலாம். இதற்காக வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பும் பொருட்களை மட்டும் கொண்டு வந்து எங்களிடம் உள்ள பேக்கிங் வசதியை பயன்படுத்தி பேக்கிங் செய்து அனுப்பலாம். பார்சலின் எடைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக பிரத்தியேகமான பிரிவு மேலே குறிப்பிட்டுள்ள தபால் நிலையங்களில் உள்ளது. குறுஞ்செய்தி மூலமாக பார்சல் நிலை மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலை ஆகியவை தெரிவிக்கப்படும். இணையதளம் மூலம் பட்டுவாடா நிலையை கண்காணிக்கும் வசதியும் உண்டு. பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_30_2021_23353214.jpgமத்திய அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பண்டிகை கால சிறப்பு பார்சல் சேவை தொடக்கம்


சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் லோகாம்பாள் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். ஏழை, எளிய மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து கட்சிப் பணியாற்றியவர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_30_2021_99877567.jpgமுன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ லோகாம்பாள் மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்


சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறங்காவலர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில், சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, நிர்வாக அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் முடிவுற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளன.  நிச்சயம் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நிச்சயம் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். நீதிபதிகள் முன்னிலையில் கோயில் நகைகளை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.மேலும், தற்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு முன்பாகவே மாவட்ட அளவிலான மற்றும் ஒவ்வொரு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே அறங்காவலரை நியமித்த பின்னரே நகைகளை உருக்கும் பணிகள் தொடரும். அம்மா உணவகத்தில் ஊழியர்களின் ஆட்குறைப்பு என்பது நிர்வாக காரணம் மட்டுமேதான். அரசியல் காழ்ப்புணர்ச்சி  கிடையாது. மறைந்த தலைவர்கள் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மறைக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_30_2021_5968875.jpgஅமைச்சர் சேகர்பாபு தகவல் கோயில் அறங்காவலர்களை நியமிக்கும் பணி தொடக்கம்


சென்னை: தமிழகத்தில், நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 (நாளை மறுதினம்) வெளியிடப்படுகிறது. 1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்தவர்களின் மனுக்கள் மீது 20.12.2021 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வருகிற 1ம் தேதி (திங்கள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது மற்றும் நவம்பர் மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் சிறப்பு முகாம் குறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன் (திமுக), பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் (அதிமுக), தாமோதரன், நவாஸ்கான் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜ), பத்ரி, ராஜசேகரன் (மார்க்சிய கம்யூனிஸ்ட்), வீரபாண்டியன், ஏழுமலை (இந்திய கம்யூனிஸ்ட்), தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமபஜ், திரிணாமுல் காங்கிரஸ் என 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அரசியல் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் எந்த தேதி வரை வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தாமோதரன் (காங்கிரஸ்): வாக்காளர் பட்டியலில் போலிகளை ஒழிக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். கரு.நாகராஜன் (பாஜ): தமிழகத்தில் வர இருக்கிற நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல், அதற்காக மாநில தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்போகிறதா? அல்லது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கொடுக்கும் வாக்காளர்  பட்டியலை வைத்து அவர்கள் தேர்தல் நடத்தப்போகிறார்களா? என்று கேட்டபோது  அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. பத்ரி (மார்க்சிய கம்யூனிஸ்ட்): ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல்  திருத்தம் என்பதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். நவம்பர் மாதம் தமிழகத்தில் பண்டிகை காலம்,  வடகிழக்கு பருவ மழை காலம். அதனால் 4 நாட்கள் சிறப்பு முகாமை, 6 நாளாக  அதிகப்படுத்த வேண்டும். வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்குச்சாவடிகளை அதிகரிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாமல் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கிற கட்சிகளையும் அழைக்க வேண்டும். பார்த்தசாரதி (தேமுதிக): வாக்காளர் பட்டியலில் அதிகப்படியாக குளறுபடி ஏற்படுகின்ற காரணத்தினால் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். அனைத்துக்கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம். இதேபோல மேலும், கலைவாணன் (திரிணாமுல் காங்கிரஸ்), ராஜேஷ்கண்ணா (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_30_2021_26459903.jpgநவம்பரில் சிறப்பு முகாம் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை போலி வாக்காளரை ஒழிக்க ஆதார் எண்ணை வாக்காளர் ஐடி கார்டுடன் இணைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை