ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


சென்னை: சென்னையில் உள்ள லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை 423 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பிரபல தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஓட்டல் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது. அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஓட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி சென்னை மற்றும் கோவையில் உள்ள அவருக்கு சொந்தமான லீ மெரிடியன் ஓட்டல்களையும், கும்பகோணத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சொத்துகளின் மதிப்பை கணக்கிடுவதற்கும், அவற்றை வாங்குவதற்கான நபரை கண்டறிவதற்கும் தீர்வாளரை நியமித்தது. இந்த சொத்துகளின் மதிப்பு 730.88 கோடி ரூபாய் எனவும், 569.33 கோடி ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு விற்கலாம் எனவும் தீர்வாளர் முடிவெடுத்தார். அவற்றை  வாங்குவதற்கு மாதவ் திர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே. ராஜகோபாலன், கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த 423 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்கலாம் என்று தீர்வாளர் அளித்த பரிந்துரையை ஏற்ற தீர்ப்பாயம், அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் உள்ளிட்ட 4 சொத்துகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனிடம் மாற்ற அனுமதித்து. இதை எதிர்த்து அப்பு ஓட்டல் நிறுவனத்தின் இயக்குனர் பழனி ஜி.பெரியசாமி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம்.வேணுகோபால், தொழில்நுட்ப வல்லுநர் உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, பழனி ஜி.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், தீர்வாளர் தர்மராஜன் ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்.கே.ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆஜராகினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அர்விந்த் பாண்டியன், 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் கடனை அடைக்க மற்ற வங்கிகள், நண்பர்கள் மூலம் 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளோம். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.தீர்வாளர் ராதாகிருஷ்ணன் தர்மராஜன் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ராஜகோபாலன் ஆகியோர் தரப்பில் மதிப்பீடு முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க எதுவும் இல்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள்,”அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் வழக்கு குறித்து தீர்வாளரும், எம்ஜிஎம் ராஜகோபாலனும் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை அப்பு ஓட்டல்ஸ் சொத்துகளை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த தீர்ப்பாய உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர். 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடனை அடைக்க 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளோம்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_44096011.jpgலீ மெரிடியன் ஓட்டல் சொத்துகளை ரூ.423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு மாற்ற தடை: நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை: அதிமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு குற்றவாளிக்கு அப்போதைய சிபிசிஐடி டிஜிபி உத்தரவின்பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில், ஆளும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பதவியில் இருந்த உயர் அதிகாரிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளின் தவறுகளை, அதிகாரிகள் மூடி மறைத்து வந்தனர். இருவரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் நிர்வாகம் முழுமையாக சீட்கெட்டு போய் விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.அதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசியல்வாதிகள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள், மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள், தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், போலீசுக்கு உளவு சொல்பவர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு புரோக்கராக இருப்பவர்கள் ஏன் குற்றவாளிகளுக்கு கூட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இதுபோன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.வழக்கமாக சிலருக்கு நீதிமன்றம் அல்லது உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில்தான் பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி வழங்கினாலும், காவலர்களின் சம்பளத்தை அவர்கள் அரசுக்கு கட்டணமாக கட்ட வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியின்போது பலருக்கும் அவ்வாறு கட்டணம் வசூலிக்காமல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஒரு சிலர் மற்றும் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு தற்போதும் அதே பாதுகாப்பு தொடருவதாக கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக குற்றவாளிகள் பலருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆதரவுடன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அதில் சென்னை திரிசூலம் பகுதியில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புகார் எழுந்ததால் அப்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நில ஆக்கிரமிப்பு செய்த குயின்டன் தாசன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.ஜாமீனில் வெளியில் வந்த பிறகு, சிபிசிஐடியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுடன் அவர் நெருக்கமானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்போதைய சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தைத் தொடர்ந்து குயின்டன்தாசுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நில அபகரிப்பு குற்றவாளியான குயின்டன்தாசிடம் புகார் வாங்கித்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் பல முறை கூறியது. ஆனாலும், ஒரு குற்றவாளியிடம் புகாரை வாங்கி ஜெகத்ரட்சகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசாருடன் குயின்டன்தாஸ் நெருக்கமாக இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் டிஜிபி பிரதீப் வி.பிலிப் பரிந்துரையின்பேரில் குயின்டன் தாசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல, அதிமுக ஆதரவு நிலை எடுத்த பல குற்றவாளிகளுக்கும், வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கும் தற்போதும் பாதுகாப்பு தொடருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும். போலீசாரை பொதுமக்கள் பாதுகாப்புக்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_44771976.jpgஅதிமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு குற்றவாளிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: அதிர்ச்சியில் அதிகாரிகள்


சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாமல் 50 சதவீதத்திற்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.

https://ift.tt/2V0VGr3 50%இருக்கைகளுக்கு மேல் அனுமதித்தால் ஓட்டல்களின் தொழில் உரிமம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் நேற்று 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1,60,897 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,178 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவையில் 28ம் தேதி 179 ஆக இருந்த பாதிப்பு 29ம் தேதி 188, 30ம் தேதி 230, நேற்று 246 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 28ம் தேதி 140 ஆக இருந்த நிலையில் 29ம் தேதி 166 பேர், 30ம் தேதி 171 பேர், நேற்று 165 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் 109 பேராக இருந்த நிலையில், நேற்று 122 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் 29ம் தேதி 102ல் இருந்து  30ம் தேதி 105 ஆகவும், நேற்று 124 ஆகவும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளது. 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஜூலை 1ம் தேதி 90031 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 93689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு மாதத்தில் 3,658 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_47275943.jpgதமிழகத்தில் 1,986 பேர் பாதிப்பு 23 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: சென்னையில் பாதிப்பு குறைவு


சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (2ம் தேதி) நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லார், வால்பாறையில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_60778446.jpgசென்னை, திருவள்ளூர், காஞ்சி உட்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார துவக்க விழாவை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில் குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் தாரேஷ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேக்கை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் SHARECHAT செயலியினையும் கொரோனா பேட்ஜினையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பின்பு கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, எல்.இ.டி பொருந்திய வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான தீவிர பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒருவார காலம், தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, துண்டு பிரசாரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு, கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு, வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள், மாணவர்களுக்கிடையே குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு, நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில் 100% கொரோனா தடுப்பூசியை செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கவுரவித்து பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_15995425.jpgகொரோனா 3ம் அலையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்


சென்னை: சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,  பகிர்மானப்பிரிவின் இயக்குநர் செந்தில்வேல் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.  பிறகு அவர், ‘தமிழகத்தில் முதற்கட்டமாகக் குறைந்த மின்னழுத்தம் உள்ள மின்மாற்றிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு ரூ.625 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5,705 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவி மின்பளுவைக் குறைப்பதற்கும், 3,200 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி குறைந்த மின்னழுத்தத்தை ஏற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். * 1.59 லட்சம் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை‘மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 1,71,344 புகார்கள் வரப்பட்டுள்ளன. அதில் 1,59,186 புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் 12,158 புகார்கள் நடவடிக்கைகளில் உள்ளன.* தமிழகத்தில் மின்தடை ‘பூஜ்ஜி’யமாக மாற்றுவோம்மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்படாத பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும் வகையில் 2.30 லட்சம் பணிகள் திட்டமிடப்பட்டு 2.72 லட்சம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார். 14 லட்சத்து 69 ஆயிரம் பேர் மின்கட்டணத்தை தாங்களாகவே மாற்றியமைத்துள்ளனர். மே மாதத்திற்கு முன்பு வரை மின்தடையே இல்லாமல் இருப்பது போன்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க எதிர்கட்சி முயற்சிக்கிறது. 30 நிமிடங்களுக்கு மேலாக மின்தடை இருக்கும் இடங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. இதை படிப்படியாக குறைத்து பூஜியம் என்ற இலக்கை அடையும் முயற்சியில் உள்ளோம் என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_25439090.jpgகுறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றிகளை 3 மாதத்தில் மாற்ற வேண்டும்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு


சென்னை: ஜோஸ் ஆலக்காஸ், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தங்களது ஸ்டோர்களில், புதிய சிறப்பு ஆடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது தங்கத்தின் மார்க்கெட் விலையில் ரூ.50 தள்ளுபடி பெறலாம். இதுமட்டுமின்றி, ஜோஸ் ஆலுக்காஸ் தற்போது தினசரி அணியும் நகைகளின் புதிய கலெக்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சேதாரம் 4% முதல் தொடங்குகிறது. இந்த புதிய கலெக்ஷனில் செயின்கள், வளையல்கள், காதணிகள் அனைத்தும் உள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்க நகைகளை எக்சேஞ்ச் செய்து புதிய BIS ஹால் மாாக் 916 நகைகளை பெறவும் ஜோஸ் ஆலுக்ககாஸ் ஒரு வாய்ப்பளிக்கிறது. தற்போது தங்க நகைகளுக்கு BIS ஹால்மார்க் கட்டாயமாக்கப்ட்டு விட்டதால், உங்கள் பழைய நகைகளை மிகச் சிறந்த மார்க்கெட் விலையில் எக்சேஞ்ச் செய்ய இதுவே மிக சிறந்த தருணம். இந்த ஆஃபர்களை தவிர, வைரங்களுக்கு 20% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷோரூம்களில் ஆடிப்பெருக்கு (ஆகஸ்ட் 3) முன்பதிவு தொடங்கிவிட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_1028079.jpgஜோஸ் ஆலுக்காஸில் சிறப்பு ஆடி ஆஃபர்


சென்னை: திருவிடந்தையில் சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்காக ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்போரூர் தாலுகா திருவிடந்தையை சேர்ந்த ஜி.ராஜா மற்றும் கே.சுந்தர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்போரூர் தாலுகாவில் திருவள்ளிகுட்டை, அம்பாள் ஏரி ஆகிய 2 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பியே திருவிடந்தை கிராம விவசாயிகள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 43.68 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனது விவசாய நிலமும் இந்த ஏரியை நம்பியே உள்ளது. கடந்த 2018ல் சென்னையை சேர்ந்த அரிஹந்த் ஹோம்ஸ் என்ற நிறுவனம் ஏரிகளின் நடுவில் சாலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பொதுமக்கள் அதை தடுத்துவிட்டனர். தற்போது இந்த ஏரிகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் அந்த நிறுவனம் மீண்டும் ஏரியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏரியில் சாலை அமைக்கும் வேலைகள் நடந்தன. மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் நகர நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தோம். உலகத்தரம் வாய்ந்த சாட்டிலைட் நகரை அமைக்க அரிஹந்த் நிறுவனம் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலித்த நகர நிர்வாக ஆணையர் மற்றும் மாமல்லபுரம் திட்ட அதிகாரி பரிந்துரையின் அடிப்படையில் 60 அடி சாலை அமைக்க வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை 2017 ஜூலை 17ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏரியில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி 2020 ஜூன் 5ம் தேதி முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே சாட்டிலைட் சிட்டி அமைக்க போதுமான சாலை வசதி உள்ள நிலையில் வணிக நோக்கத்திற்காக விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரியில் சட்ட விரோதமாக சாலை அமைக்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும்  சாட்டிலைட் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_88059634.jpgதிருவிடந்தையில் சாட்டிலைட் சிட்டி ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை:குரு நானக் கல்லூரி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ்ஜி அவர்களின் 500 வது பிறந்ததினம் நினைவாக குரு நானக் கல்விச் சங்கத்தால் (GNES) 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. குரு நானக் கல்லூரி தென்சென்னை, வேளச்சேரியில் பசுமை நிறைந்த 25 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது. குருநானக் கல்லூரியின் உன்னத நோக்கம் சமூக-பொருளாதார பின்புலம், ஜாதி, இனம் அல்லது மதம் பாகுபாடின்றி, அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதே ஆகும். இதை கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் பலன்’ என்ற பொருள் தரும் சீக்கிய பிரார்த்தனை வாசகமான ‘புரோ போனோ பப்ளிகோ’ என்பதே கல்லூரியின் கோட்பாட்டு வாசகமாகும்.குரு நானக் கல்லூரி எஸ்.ஏ.எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெடுடன் இணைந்து தரவு பகுப்பாய்வில் பி.எஸ்சி., பட்டப் படிப்பை தொடங்கியிருக்கும் சென்னை மாநகரில் முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். எஸ்ஏஎஸ் தங்கள் பட்டத்துடன் சர்வதேச சான்றிதழ் வழங்கும். எஸ்ஏஎஸ் கருவி உலகில் வெற்றிகர முதன்மை 500 நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டில் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி தகவல் தொழிற்நுட்பம் பயிற்சிகளுக்கான தரமான புலத்துறை ஆசிரியர்கள் மற்றும் உலகத்தர கட்டமைப்பை கொண்டிருக்கிறது. கல்லூரியில் பி.எஸ்சி. (சிஎஸ்), பிசிஏ, எம்சிஏ, பி.எஸ்சி.(ஐடி), பி.காம் (ஐஎஸ்எம்) போன்ற பல்வேறு தகவல் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த பயிற்சி பகுப்பாய்வு துறையில் உள்ளகப் பயிற்சி மற்றும் பணியமர்வினை பெறுவதற்கு இளம் பட்டதாரிகளுக்கு வசதியாக அமையும். உயர்ந்த சம்பளத்தில் உலகில் மிகவும் நாடப்படும் தொழில்முறையாளர்களாக திறன்சார் தரவு பகுப்பாய்வாளர்கள் விளங்குகிறார்கள். வர்த்தக வளர்ச்சியை தூண்டுவதற்கு தரவு பகுப்பாய்வுகளை சார்ந்து அனைத்து வகை வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களில் தரவுகளின் தேவை வளர்ந்து வருகிறது. எனவே, தரவு பகுப்பாய்வு என்பது தகவல் தொழிற்நுட்பம் துறையில் மட்டுமின்றி உற்பத்தி, விற்பனை, சுகாதாரநலம், தொலைத்தொடர்பு, வங்கி சேவை மற்றும் நிதி, கட்டுமானம், போக்குவரத்து, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பிற அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_1_2021_14420718.jpgகுருநானக் கல்லூரி சார்பில் தரவு பகுப்பாய்வு பயிற்சி: கல்வி நிறுவனம் தகவல்
2 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் சர்வேயர்கள் பணியாற்றக்கூடாது என்ற உத்தரவு ரத்து: அப்பீல் மனுவை ஏற்றது ஐகோர்ட் கிளை https://ift.tt/3j7sxlU
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி https://ift.tt/2WviXl1
திருச்சி அருகே கிராமத்தில் சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்: வனத்துறையினர் முகாமிட்டு தேடுதல் https://ift.tt/3ldFLAc
மதுவிலக்கு அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை கருத்து https://ift.tt/3fj8xvr
ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டரை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு https://ift.tt/2V3lPp8
மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவினுக்கு ரூ.4.32 கோடி இழப்பு: தமிழக அரசு விசாரணை நடத்த கோரிக்கை https://ift.tt/3lhPbL6
புதுவையில் தியேட்டர்கள் செயல்பட அனுமதி https://ift.tt/3jcSz7r
செம்பாக்கம் கிராமத்தில் 51 இருளர் குடும்பங்களுக்கு பசுமை வீடுகள்: அமைச்சர்கள் வழங்கினர் https://ift.tt/3rJffzZ
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பிடிஓக்கள் பணியிடமாற்றம்: கலெக்டர் உத்தரவு https://ift.tt/3rINJm2
கரூர் டிஎன்பிஎல் ஆலைக்கு நிலக்கரி வாங்குவதில் முறைகேடு 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் https://ift.tt/2VnWPZc
கணவனுடன் சேர்த்து வைக்ககோரி மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம் https://ift.tt/3zXsmQM
போதை பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம் https://ift.tt/3C3O9s4
ரசாயனம் கலந்த கழிவுநீர் ஏரியில் கலப்பதாக புகார் https://ift.tt/3zNl6Hg
பிளஸ்2 துணைதேர்வுக்கு இணையத்தில் இன்று ஹால்டிக்கெட் https://ift.tt/3zRLwaP


சென்னை: ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், நிதித்துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாக திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்து குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன்,  தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை  கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், கருவூல கணக்கு  துறை ஆணையர் வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் எம்.வடநேரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின்படி, 8.05.2021  முதல் 28.07.2021  வரை ரூ.500  கோடிக்கும்  அதிகமாக  நன்கொடை  பெறப்பட்டு,  ரூ.305 கோடிக்கு  கொரோனா தொற்று  தொடர்பான  பணிகளுக்கு  செலவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நிதி  மற்றும்  மனிதவள  மேலாண்மை  திட்டத்தின்  செயல்பாட்டு நிலை,  பயன்பெற்று  வரும்  பயனாளிகளின்  விவரங்கள்,  சார்நிலை  கருவூலங்களின் செயல்பாடுகள்,  அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற வேண்டும்.   தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கை தடைகள் எழாத வண்ணம்,  சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்திட வேண்டும்.  நிலுவையில் உள்ள தணிக்கை  பத்திகளின் தற்போதைய நிலையினை கண்காணித்திட வேண்டும்.  அரசின் வரவு - செலவு திட்ட நடவடிக்கைகளில் மற்றும் வரவு - செலவு திட்டம் தயாரிப்பதில்  நவீன வழிமுறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு-செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை  மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர்கள் மற்றும்  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின்  மூலம்  நிர்வகிக்கப்படும்,  திட்ட   தயாரிப்பு  நிதியின்  கீழ்  செயல்படுத்தப்பட்டு  வரும்  திட்டங்களின்  தற்போதைய  நிலை குறித்தும்  முதல்வர் கேட்டறிந்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_27517337.jpgநிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்


சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் 15 தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.09.2006 முதல் கலைஞரால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டதுடன், 15.9.2009 முதல் இணையதளம் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாகவும் வழிவகை செய்யப்பட்டது.விழாவில், முதல்வர் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 50,000 தொழிலாளர்களுக்கு, 10 கோடியே 69 இலட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக 24 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

https://ift.tt/3le40OB 50,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34.78 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: கொரோனா 2வது அலை காரணமாக, சங்கங்களின் பொதுக்குழு கூட்டத்தை இணையவழி மூலம் நடத்த அனுமதி அளித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பிரிவு 26ன்படி ஆண்டுதோறும் சங்க பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். கொரோனா  முதல் அலையின் போது 2019-20 நிதியாண்டிற்கு சங்கங்களின் பொதுக்குழு கூட்டங்கள் இணையவழி நடத்திட அனுமதி வழங்கப்பட்டது போன்று 2ம் அலை கொரோனா  காரணமாக 2020-21 நிதியாண்டிற்கு பொதுக்குழு கூட்டங்கள் இணையவழி நடத்திட அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில், இணையவழி சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையவழி சங்க கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. *  இணையவழி கூட்டம் நடத்தப்படும் நிகழ்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்து திருத்தம் செய்யப்படாத இரண்டு சிடிக்களில் சேமிக்கப்பட்டு சங்க பதிவாளருக்கு கோர்வைக்கு தாக்கல் செய்யப்படும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூட்ட நிகழ்வு முழுமையாக திருத்தம் செய்யப்படாத ஒளி மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு குறுந்தகட்டில் சேமித்து வழங்கப்பட வேண்டும்.* ஆள் மாறாட்டம் ஏதும் நடைபெறாத வண்ணம் தகுந்த சரிபார்ப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுக்குழு மற்றும் தேர்தல் நடத்தும் போது சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் லாக் இன், பாஸ்வேர்டு, லிங்க் அளிப்பது சங்க நிர்வாகிகள் கடமை ஆகும். தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் புகார்களுக்கு சங்கமே பொறுப்பேற்க வேண்டும்.* இவ்வாறான இணையவழி கூட்டம் நடத்துவதற்கான அனுமதியானது. தற்போது நிலவும் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அனுமதி 2020-21ம் நிதியாண்டுக்கு நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_57709903.jpgகொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக சங்கங்களின் பொதுக்குழு கூட்டத்தை இணையவழி மூலம் நடத்த அனுமதி: ஆள்மாறாட்டம் நடந்தால் நிர்வாகிகள்தான் முழு பொறுப்பு ; பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவு


சென்னை: அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தில் கோயில்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் கோயில்கள் பற்றிய பொதுவான விவரங்கள், சொத்து விவரங்கள், வரவு செலவு திட்டம், கேட்டு வசூல் நிலுவை மற்றும் இணையவழி சேவைகள் முதலியவற்றை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின்படி மென்பொருள் நிக் நிறுவனம் மூலம் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கோயில்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது, அது தொடர்பான அறிக்கைகள் பெறுவதில் இடர்பாடுகள், சிரமங்கள், சந்தேகங்கள் முதலியவற்றை தெளிவுபடுத்திடவும், கோயில் பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய உதவிடவும் ஒருங்கிணைப்பு குழு தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக வேலை நேரங்களில் ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தை பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்ேதகங்களை கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_69120425.jpgநிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கோயில் விவரத்தை இணையத்தில் பதிவேற்ற ஒருங்கிணைப்பு குழு: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு


சென்னை: தமிழகத்தில் புதியதாக 120 உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் 2021-22ம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் ஆனையர் சமயமூர்த்தி, வேளாண் செயலாளர் ஆப்ரகாம், வேளாண் இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:  வேளாண் சார்ந்த உழவர்களை மதிக்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. இதன் காரணத்தால் புதிய எதிர்பார்ப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கிறது. வேளாண் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது குறித்தும், விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள், அதை தீர்ப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்தோம். நல்ல கருத்துகளை வர்த்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வழங்கி உள்ளனர்.  உழவர் சந்தைகளில் நியாயமான விலை கிடைப்பதற்காக தான் கலைஞர் முதல்வராக இருந்தபோது 180 உழவர் சந்தைகளை அமைத்தார். அதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற வேளாண் பொருட்களுக்கு உழவர் சந்தைகளில் நல்ல லாபம் கிடைத்தது. இடைத்தரகர்கள் இல்லாமல் செய்யக்கூடிய முறைதான் உழவர் சந்தை, அதை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஏற்கனவே உள்ள 180 உழவர் சந்தைகளில் கிட்டத்தட்ட 160 தற்போது செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் அதை சரியாக கவனிக்காத காரணத்தால் இந்த குறைகள் ஏற்பட்டு இருக்கிறது. அதை நாங்கள் நிவர்த்தி செய்து வருகிறோம்.  அதன்படி, இந்த ஆண்டு புதியதாக 120 உழவர் சந்தைகளை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதை படிப்படியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேரூராட்சி பகுதிகளில், உழவர் சந்தைகள் அவசியமாக தேவைப்படும் பகுதிகளில் அமைக்க போகிறோம்.  இவ்வாறு கூறினார்.

https://ift.tt/3yh0oiv உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி


சென்னை: அடுத்து வரும் 10 ஆண்டுகளில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர், பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய ஆலோசகர்களை நியமனம் செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், திருத்தணி முருகன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருச்செந்தூர் முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உடப்ட 530 பெரிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு  உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நலன் கருதி கோயில்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள், அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி மாஸ்டர் பிளான் எனப்படும் பெருந்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டனர். அதன்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிக்காக அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் கோயில் சார்ந்த பகுதிகளில் பெருந்திட்ட வரைபடம் வளர்ச்சி பணிகளுக்கான அறிக்கை தயார் செய்வதற்கு இத்துறைக்கென கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆலோசகர்களுக்கு தகுதியுடைய பட்டியல் தயாரிக்க முன் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரும் ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூலம் விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.  குறிப்பாக, அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக தங்கும் விடுதி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் 47 முதுநிலை கோயில்கள் மூலம் பெருந்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதே போன்று மற்ற கோயில்களில் மாஸ்டர் பிளான் தயாரிக்க ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் கோயில்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. அதன்பேரில், அந்த கோயில்களில் மாஸ்டர் பிளான் அடிப்படையில் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படுகிறது’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_90359134.jpgகோயில்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய ஆலோசகர்கள் நியமனம்: பக்தர்களின் நலன் கருதி அறநிலையத்துறை நடவடிக்கை


சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கடந்த 2018 மே 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை கவனிக்க கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் நியமிக்கப்பட்டார்.  அவரது கண்காணிப்பின் பேரில் இப்பணிகள் நடந்தது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் 2 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் தான் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த நினைவிட கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் மேலானதால், முன்னாள் முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி, ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சென்னை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் பலர் கட்டுமானத்துறைக்கு பணியிட மாற்றம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையேற்று கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ஆயிரத்தரசு ராஜசேரை நியமனம் செய்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை பொறியாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். இதை  தொடர்ந்து நேற்று மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக பொறியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_86059207.jpgமருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ராஜசேகர் நியமனம்: ஜெயலலிதா நினைவிட பணி தாமதம் என டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டவர்


சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.  திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை. தனக்கு எதிராக குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை. தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதை தெரிந்துதான் தன்னுடன் உறவு கொண்டார். இதனால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது. கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை. நடிகையின் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் என்று தெரிவித்துள்ளார்.  இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மணிகண்டனிடம் பணம் பறிக்க முயன்ற போது அதற்கு இணங்காததால் நடிகை அவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரான மணிகண்டனின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அளிக்கப்பட்ட புகாரின்மீது பதிவு செய்யப்பட்ட  இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று  மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததுடன் இந்த  மனுவுக்கு பதிலளிக்கும்படி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_59934634.jpgதனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு


சென்னை: ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை மூலம் சுகாதாரத்துறை, வருவாய், வணிகவரி, பதிவு, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியும், இந்த மருத்துவமனைகளில் பராமரிப்பு பணிகளும் இந்த துறை மூலம் செய்யப்படுகிறது. இதற்காக, ஒவ்வெரு ஆண்டும் ரூ.3 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை கொண்டு டெண்டர் விடப்பட்டு, தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பணிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியாமல் இருந்தது. அவ்வாறு புகார் அளித்தால் கூட அதிகாரிகள் சிலர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடும் நிலைதான் இருந்தது. இதனால், பல நேரங்களில் தரக்குறைவான கட்டுமான பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விசாரிக்க நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நோடல் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்க பொதுப்பணித்துறையின் www.tnpwd.com என்கிற இணையதளம் வாயிலாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், புகார் அளிப்பவர் பெயர், அவரது மின்னஞ்சல் முகவரி, தொலை பேசி எண், புகார் குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம். இந்த புகார்கள் மீது நோடல் அதிகாரி உரிய விசாரணை நடத்துவார். விசாரணையில் கட்டுமான பணியில் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒப்பந்த நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறை கட்டிட பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால், இனி வருங்காலங்களில் டெண்டர் எடுத்த நிறுவனங்கள், டெண்டர் எடுத்த மதிப்பு, ஒப்பந்த காலம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஒப்பந்தம் யார் எடுத்தார்கள், வேலை தரமாக நடக்கிறதா, அப்படி இல்லையெனில் அந்த நிறுவனம் பெயரை குறிப்பிட்டு புகார் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_19291324.jpgஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பில் பணிகள் நடக்கும் நிலையில் ஒப்பந்த நிறுவன கட்டுமான பணியில் குறைபாடு இருந்தால் புகார் தரலாம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு


சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை:   தமிழ்நாடு முதல்வரை தலைவராக கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கடந்த 20ம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர்  நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களுடன்  சட்டமன்ற உறுப்பினர்களையும்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   இக்குழுவின் முதல் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ்  வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின்  பங்கு,   பணி மற்றும்   மாநில   அரசால்   பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் ஆய்வு  செய்யப்படவுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_88930911.jpgஆதிதிராவிடர், பழங்குடியினர் கண்காணிப்பு குழு ஆகஸ்ட் மாதம் முதல் கூட்டம்
அரசாணை வெளியீடு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவருக்கு தேர்ச்சி சான்றிதழ் https://ift.tt/3zSwRfp


சென்னை:  27 சதவீத இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக பெற்றுத் தந்ததற்காக பல்வேறு மருத்துவ சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர்கள் ரவீந்திரநாத், சாந்தி, ரமேஷ், ஹரிகணேஷ், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் டாக்டர்கள் சுந்தரேசன், சக்திராஜன், சந்திரபோஸ் அம்பேத்கர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் டாக்டர் கீர்த்திவர்மன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவர் கலைஞரின் வழியை பின்பற்றி சமூகநீதியை  காப்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்’’ என்றார்.பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழபாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாளில் பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாள். பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்’ எனத்தெரிவித்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_9916324.jpgசமூகநீதியை காப்பதில் மிகப்பெரிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் பாராட்டு


சென்னை:  1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று வங்கதேசம் என்ற  தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின்  பொன்விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இந்திய ராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பினைச் செலுத்தி வருகிறார்கள். தாய்நாட்டிற்காக ராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும்   தியாகம் செய்ய தயங்குவதில்லை. அவர்தம் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.  1962ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ  திடலில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டு பாதுகாப்பு  நிதி வசூல் கூட்டத்தில், அப்போது திமுக பொருளாளராக திகழ்ந்த முத்தமிழறிஞர்  கலைஞர் சில மணி நேரங்களில் 35 ஆயிரம் ரூபாய் நிதி  திரட்டி பேரறிஞர் அண்ணாவிடம் வழங்கி, அவர் மூலம் அன்றைய முதல்வர் காமராசரிடம் வழங்கப்பட்டது. மேலும், 1971ல் போர் நிகழ்ந்தபோது, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை சென்னைக்கு அழைத்து தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கினார். அன்றைய சூழலில் இந்தியா முழுமைக்கும் வசூலான 25 கோடி ரூபாயில், தமிழ்நாடு வழங்கிய 6 கோடி ரூபாய் என்பது நான்கில் ஒரு பங்கு நிதியாகும். ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே ராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம். நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.  இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்த வெற்றி தீபம் தென் மண்டல ராணுவத் தளபதியால் தமிழ்நாடு முதல்வரிடம்  வழங்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான்  போரில் வான்வெளி தாக்குதலை தடுத்து வணிகக் கப்பல்களை சிதறடித்து வெடிக்கச் செய்து 93,000  படைவீரர்கள் சரணடையக் காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த  ராம்சாகர், தன் சுய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் படைக்குழுவினருடன் பதுங்குக் குழியின் வழியாக முன்னேறி எதிரிப் படையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, படைகள் சரணடைய காரணமாக இருந்த கர்னல் கிருஷ்ணசாமி, இப்போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த 3 வீரர்களின்  குடும்பத்தினரையும், போரில் பங்கேற்ற 6 போர் வீரர்களையும் பாராட்டி நினைவுப்பரிசாக இந்தியா-பாகிஸ்தான் போரின்  நினைவு முத்திரைப் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர் தட்டினை முதல்வர் வழங்கி கவுரவித்தார்.  இவ்விழாவில், தென் மண்டல ராணுவத் தளபதி அருண், தலைமைச் செயலாளர் இறையன்பு,  பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ஜகந்நாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தமிழக மக்கள் கொடுக்கும் மரியாதை, செய்யும் உதவிகள் விலை மதிப்பற்றவை தென் மண்டல தளபதி அருண் பெருமிதம் விழாவில்,  தென் மண்டல தளபதி அருண் பேசியதாவது: ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் மரியாதை, செய்யும் உதவிகள் விலை மதிப்பற்றவை. 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ரூ.6 கோடி பணம் வசூலித்து போருக்கான நிதியை வழங்கினார். 1971ம் ஆண்டிலேயே அவ்வளவு பெரிய தொகையை வசூலித்துக் கொடுத்தார். அப்போது இருந்த ராணுவத்திற்கும் தமிழகத்திற்குமான பிணைப்பு இப்போதும் தொடர்கிறது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றிகள். பாகிஸ்தானின் அட்டூழியத்தால் வங்கதேசத்தில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் அகதிகளாக இந்தியா வந்தனர். அதன் காரணமாக போர் தொடங்கியது. இந்தியா அப்போது மிகவும் இளமையான நாடாக இருந்தது. சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படையான தேவைகளுக்கு நிதியை ஒதுக்கி செயல்பட்டு கொண்டிருந்தபோது போர் வந்தது. ஆனாலும் இந்திய மக்களின் பேராதரவில் நாம் வெற்றி பெற்றோம். இந்திய ராணுவம் சார்பில் பல இளம் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தால் நாம் இன்று அமைதியாக வாழ்ந்து வருகிறோம். 

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_57020206.jpgஇந்திய ராணுவத்திற்கு தமிழர்கள் தொடர்ந்து பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்: முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு


சென்னை: கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், அவைத்தலைவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு  4வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி  திருத்த மனு தாக்கல்  செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை நீதிபதி, வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_64545841.jpgஅதிமுக பொதுக்குழு செல்லாது சசிகலா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4க்கு ஒத்திவைப்பு: உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் https://ift.tt/3lfjvFW


சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று (31ம் தேதி) மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: வேளச்சேரி - ஆவடி இடையே இன்று காலை 10.15 மணி, ஆவடி - மூர்மார்க்கெட் இடையே காலை 11 மணி, ஆவடி - வேளச்சேரி இடையே பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேப்போல், மூர்மார்க்கெட் - கடம்பத்தூர் இடையே பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் - ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மூர்மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 12.20, 1.15 மணிக்கும், மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே பிற்பகல் 1 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் இடையே காலை 10.30 மணிக்கு, திருவள்ளூர் - வேளச்சேரி இடையே காலை 11.05 மணிக்கு, திருத்தணி - மூர்மார்க்கெட் இடையே காலை 10.15 மணிக்கு மற்றும் பிற்பகல் 12 மணிக்கு, கடம்பத்தூர் - வேளச்சேரி இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி, அன்னனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.அதேப்போல், அரக்கோணம் - மூர்மார்க்கெட் இடையே காலை 10 மணிக்கு, திருவள்ளூர் - மூர்மார்க்கெட் இடையே காலை 10.50 மணிக்கு, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் இடையே காலை 11.25 மணிக்கு, திருவள்ளூர் - மூர்மார்க்கெட் இடையே காலை 11.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_81486148.jpgபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு


சென்னை: காஞ்சிபுரம் மளிகைசெட்டி தெருவை சேர்ந்தவர் நவ்ஷத் (40). ஆட்டோ டிரைவர். கடந்த 2008ம் ஆண்டு சித்தேரி மேடு பகுதியை சேர்ந்த ரேவதியை (35), காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரேவதி, இஸ்லாமிய மதத்துக்கு மாறி, தனது பெயரை ரஷிதா என மாற்றி கொண்டார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவ்ஷத் தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நவ்ஷத், போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியால் ரஷிதாவை வெட்ட முயன்றார். அப்போது, வாசல்படியில் கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். கையில் இருந்த கத்தியும் கீழே விழுந்தது. கணவனின் கொடுமையை தாங்க முடியாத ரஷிதா, திடீரென அந்த கத்தியை எடுத்து, நவ்ஷத்தை சரமாரியாக வெட்டினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் வழக்குப்பதிவு செய்து ரஷிதாவை கைது செய்தனர்.

https://ift.tt/3BYMXpP கணவனை சரமாரி வெட்டி கொன்ற காதல் மனைவி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு


சென்னை: காற்றின் தரத்தை அளவிடவும், பொதுமக்களுக்கு மாசு அளவுகளை  உடனுக்குடன் தெரியப்படுத்தவும் சென்னை மாநகருக்குட்பட்ட 50 இடங்களில்  காற்றுத் தர அளவீட்டு கருவிகள் வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் வாகன நெரிசல்கள்,  தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளின் காரணமாக காற்று மாசு  அதிகரித்து வருகின்றது. காற்றின் நுண்துகள்கள் சிலிக்கான், மாங்கனீசு  நிக்கல் அளவும் அனுமதிக்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள்  உறுதிப்படுத்துகின்றன. சென்னையில் காற்றின் தர அளவீடு பி.எம் 2.5  அனுமதிக்கப்பட்ட அளவை விட 1 முதல் 3.8 மடங்கு அதிகமாக இருப்பது  தெரியவந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் காற்று மாசுகளை கட்டுப்படுத்த  புதிய செயல் திட்டங்களை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி, அதனை தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளன.  மேலும் எல்.இ.டி திரையுடன் கூடிய காற்றின் தரம்  அளவீடு கருவி சென்னையில் 50 இடங்களில் வைக்கப்பட உள்ளன. மக்கள்  அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலை  சிக்னல்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த அளவீட்டு கருவிகள்  வைக்கப்பட்டு புறகாற்றில் உள்ள ஆக்சிஜன் கார்பன்டை ஆக்சைடு நுண்துகள்கள்  போன்றவை கணக்கிடப்படுவதோடு அங்குள்ள எல்இடி திரையிலும் வெளியாகும்.  காற்றின் தரம் மற்றும் மாசு அளவுகளை பொதுமக்களும் நிகழ்நேரத்தில்  தெரிந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நகரின் எந்தெந்த இடங்களில் காற்று  மாசு அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு அங்கு மாசு குறைப்பு  நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தரஅளவீட்டு கருவிகள்  பொருத்தப்பட்டு பரிசோதனை தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_8407230.jpgமாசு அளவுகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த சென்னையில் 50 இடங்களில் காற்று தர அளவீட்டு கருவிகள்: டெண்டர் விட்டு 2 மாதத்தில் பரிசோதனைக்கு திட்டம்


சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி வருகிற 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிக அளவில் கூட்டம் சேரும் இடங்களை மூடவும் கலெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வரும் சூழலில், நோய்த்தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி இன்று முதல் வருகிற 9ம் தேதி (வெள்ளி) காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.  கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த்தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.மேலும்,அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம். அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.*  கடைகளின் நுழைவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். * கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.* அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  * கடைகளின் நுழைவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.* மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:* நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.* கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். * பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வருமுன் காத்தலே விவேகம், இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்  அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.* மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய  பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.* தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடுவீடாக  கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_31_2021_50848026.jpgகூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்கள், போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
துறைமுக பணியை கமிஷனர் ஆய்வு https://ift.tt/2V0nGLo
தமிழகத்திற்கு 2,70,350 கோவிஷீல்டு வருகை https://ift.tt/3yaNx1k
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் https://ift.tt/3BYEIu0
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு https://ift.tt/3fb7b5U
அதிமுக நிர்வாகி தலைவராக உள்ள கூட்டுறவு நகர வங்கியில் அதிகாரி அதிரடி ரெய்டு: திருவில்லிபுத்தூரில் பரபரப்பு https://ift.tt/2WAEEAn
போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை சஸ்பெண்ட்: முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை https://ift.tt/3fb7aPo


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்ஆர்எம்யூ சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.கன்னையா தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு தொழிற்சங்க அங்கீகார தேர்தல், தொழிலாளர் நலனுக்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான முறைகள் உள்ளடக்கிய புதிய சட்ட விதிகளை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்துள்ளது. இச் சட்டத்தில்  தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் தொடர்பாக 2 சரத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பது அந்நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் 51 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களாக இருந்தால் அந்நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் 20 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தொழிற்சங்கங்களே பேச்சுவார்த்தை குழுக்களில் இடம்பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சரத்துக்களை அமல்படுத்தவே முடியாது. பதிவான மொத்த வாக்குகளில் அதிகம் பெற்றவர்களே வெற்றி பெற்றதாக அறிவிப்பது வழக்கம். அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்பது இதுவரை சட்டமாக்கப்படாத நிலையில், இந்த சரத்துக்கள்,  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக உள்ள இந்த புதிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, வக்கீல் சி.ேக.சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_30_2021_25300235.jpgதொழிற்சங்கங்கள் அங்கீகாரம் தொடர்பான புதிய சட்ட விதிகளை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை