டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மெரினா கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்.பி.ஆர்.ராசா, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டடோரும் மரியாதை செலுத்தினர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_884136378765107.jpgபுத்தாண்டை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை


சென்னை: குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு நேற்றுடன் முடிவடைந்து இன்று 2021-ம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள்  கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் சென்று இறைவனை வழிப்பட்டு 2021-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.இதற்கிடையே, 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_968136012554169.jpgஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி மலர்க்கொத்துடன் புத்தாண்டு வாழ்த்து கடிதம்.!!!


சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_769436061382294.jpgகுடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 பைக்குகள் பறிமுதல் https://ift.tt/3pHknCy
தஞ்சை பெரிய கோயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு https://ift.tt/2WYUz8D
ரேஷன் டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு; வெளிநபர்கள் வழங்க அனுமதி இல்லை- ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சுற்றறிக்கை https://ift.tt/3n27v8g
68 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை உயர்கிறது: கூடுதல் மையங்களை அடையாளம் காணும் பணி தீவிரம் https://ift.tt/2MfOXEC
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேட்டில் கடல் சீற்றத்தால் மீன்வளத் துறை கட்டிடங்கள் சேதம் https://ift.tt/2KUT5tn
9 மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம் https://ift.tt/3o6QfQj
பாஜக எழுச்சி திமுகவுக்கு பிடிக்கவில்லை: மாநில தலைவர் எல்.முருகன் கருத்து https://ift.tt/3n42Dzp
மணமக்களின் வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவுக்கான வசதி https://ift.tt/2JyNbgW
தமிழகத்தில் 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் வலியுறுத்தல் https://ift.tt/3o49JW1
லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சுரானா நிறுவன முன்னாள் இயக்குநரிடம் விசாரணை https://ift.tt/38OLO6l
செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நிரப்புவது பற்றி தலைமைச் செயலர் ஆய்வு  https://ift.tt/3rIdXok
தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி நிறைவு பாராட்டு விழா: டிஜிபி ஜே.கே.திரிபாதி பங்கேற்பு https://ift.tt/35h2SRN
சென்னையில் ஹுக்கா பார் நடத்திய 8 பேர் கைது https://ift.tt/3aVfxgI


சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்த்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழகத்தின் பல கோயில்களிலும்  கூட்டம் களைகட்டியது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_237209498882294.jpgஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பக்த்தர்கள் தரிசனம்
ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் போலீஸார் வாகன தணிக்கை: புத்தாண்டு தினத்திலும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை https://ift.tt/2X3rI2E
கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்த சுற்றுச்சூழல் துறை உத்தரவு: உத்தரவை மதிக்காமல் பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார் https://ift.tt/34Wiiub
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைவு: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம் https://ift.tt/3o5zsNL
சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம்: பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு https://ift.tt/3n3G1iC


ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி சத்தியமூர்த்தி நகரில் துணைமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இருந்து அண்ணனூர், திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி, அம்பத்தூரில் ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் நிலையத்தில் நேற்று மாலை 6.30மணி அளவில் திடீரென்று ஒரு  டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வந்தனர். இதனால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.   இதனையடுத்து, மேற்கண்ட பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. பின்னர், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு, அவர்கள் தீயணைப்பான் கருவிகளுடன் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயை அணைத்தனர். அதன் பிறகு, மாற்று ஏற்பாடுகளை செய்து மின் வினியோகம் செய்தனர். இதனால், ஒன்றரை மணி நேரம் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.  புத்தாண்டு முன்னிட்டு பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும், சி.டி.எச் சாலையும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இதோடு மட்டுமல்லாமல், மேற்கண்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_645321071147919.jpgடிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி


சென்னை: தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் கூறிய வாழ்த்துக்கள் பின்வருமாறு:  * ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: புதிய 2021ம் ஆண்டானது ஒவ்வொருவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 2021ம்  ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும்  தரும் ஆண்டாக அமைய வேண்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். * முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.  தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். * திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும்-தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020ம் ஆண்டின் தாக்கம் ஒரே நாளில் தணிந்துவிடாது. அவற்றை நீக்குவதற்கும்-மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைப்பதற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அத்தகைய அறப் பணிகளில் அனைவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும். நம் கடன் பணி செய்து கிடப்பதே-என்ற நன்னெறி ஏந்தி, நாளும் உழைத்திட-ஊழியம் செய்திட, திமுக எப்போதும் போல் இப்போதும் தயாராகவே இருக்கிறது. புத்தாண்டைத் தொடர்ந்து தை முதல் நாளாம்-தமிழர் திருநாளாம் - நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் நன்னாள் வருகிறது. மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், வழக்கம் போல திமுகவினர் அவரவர் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ‘சமத்துவப் பொங்கல்’ விழாவினை, தமிழ்ப் பண்பாடு தவழ்ந்திடக் கொண்டாடிடவும், குதூகலம் கொண்டிடவும் வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை தொடருவோம்.* கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.* ராமதாஸ் (பாமக நிறுவனர்): 2021ம் ஆண்டு இனிப்பாக அமையும். அனைத்து மக்களுக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்.* வைகோ (மதிமுக பொது செயலாளர்): ஊழல் ஆட்சி அகற்றப்படவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையவும் உறுதி எடுத்துக்கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். * முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள்  மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு 2021ம் ஆண்டு வருகின்றது. * கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்): எதிர்வரும் ஆண்டு போராட்டங்களின் ஆண்டாக அமையும் என்பது திண்ணம். இந்தப்  போராட்டங்கள் சாதி, மத பேதம், போதை, வன்முறையற்ற தமிழகம் உருவாவதற்கான  அடிக்கல் நாட்டட்டும்.* ஜி.கே.வாசன் தமாகா  தலைவர்): அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்):  எல்லா வகையிலும் சிறந்த  ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2021 திகழட்டும் என வாழ்த்தி  மகிழ்கிறேன்.* சரத்குமார் (சமக தலைவர்): புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் புது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, மன உறுதி மூலம் சாதனை படைக்கின்ற ஆண்டாக 2021 அமைய வாழ்த்துகிறேன்.* அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்):  தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி,  அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். * பிரசிடெண்ட் அபுபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): புத்தாண்டு பிறந்திருக்கிறது. இத்தனை  தூரம் பயணித்த நமக்கு, வரும் நாட்கள் வளத்தையும், அமைதியையும்,  மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அள்ளித் தரும் ஆண்டாக அனைவருக்கும்  அமையட்டும்.* இதே போல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக  தலைவர் டாக்டர் சேதுராமன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம. நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்ளிட்ட தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_1_2021_467495143413544.jpgதினகரன் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!கவர்னர், முதல்வர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு: டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு https://ift.tt/3o1Zp0L
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; கடற்கரைச் சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடல்: தடையை மீறினால் கைது என காவல் ஆணையர் எச்சரிக்கை https://ift.tt/2WZ4ISw
இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த 2 பேர் கைது https://ift.tt/3hx6oMD
மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம்: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு https://ift.tt/2KShGit
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு விடிய விடிய ஆருத்ரா அபிஷேகம்: பக்தர்கள் அமர்ந்து தரிசிக்க அனுமதியில்லை https://ift.tt/38IUXxm
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தை பொங்கலை கொண்டாட திமுக முடிவு https://ift.tt/2L3I7BE
ஏழைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க பயிற்சி வழங்கும் இளைஞர் ராகவன் https://ift.tt/3aXjGke
20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு https://ift.tt/34X10NU
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ‘சிவ, சிவ’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வழிபாடு https://ift.tt/2LaW6p7
‘ஏசுவை சுட்ட கோட்சே’- அமைச்சர் பேச்சால் சலசலப்பு https://ift.tt/2KGtxQV
ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல் https://ift.tt/382Oo9y
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தே.ஜ. கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்: பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல் https://ift.tt/2Lc4GUA
சுரானா நிறுவன லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 22 நிமிட வீடியோ ஆதாரம் சிக்கியது: ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி சைபர் கிரைம் https://ift.tt/3aU7lgy
சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் https://ift.tt/2Mm143b
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஏர் கலப்பை பேரணி https://ift.tt/3htjuKT
புத்தேரி ஏரியில் இரவோடு இரவாக குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் https://ift.tt/3o8sbgg
கரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்: லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல் https://ift.tt/38NbAIn
அரசு கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டை மூலம் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் https://ift.tt/2JvAzqP
தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு https://ift.tt/3aUT2sc
தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் https://ift.tt/37ZljMk
தமிழருவி மணியனின் அரசியல் துறவறத்துக்கு காரணம் என்ன? https://ift.tt/2KEQeVB
அரசியலுக்கு ரஜினி வரக் கோரி ரசிகர்கள் கோஷம் https://ift.tt/38LVChu
மேட்டுப்பாளையத்தில் 9 மாதங்களுக்கு பிறகு உதகை மலை ரயில் இயக்கம் https://ift.tt/3htyhFg
‘‘அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்’’ - தமிழருவி மணியன் அறிவிப்பு https://ift.tt/3rEaOpC
நகை மாவட்டத்தில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு https://ift.tt/3mTnt4o
நாமக்கல்லில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு https://ift.tt/3pz48ay
ஆருத்ரா தரிசனத்தையொட்டி தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்: பக்த்தர்கள் வழிபாடு https://ift.tt/3aRiY8b
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை