செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்படும் பழங்குடியினர் ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமனம்: வத்தல்மலை கலந்தாய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு https://ift.tt/3B9Z2HG
நேரடி வகுப்புக்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது: தனியார் பள்ளிகள் ஐகோர்ட் கிளையில் மனு https://ift.tt/3AYciPM
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் https://ift.tt/3F8LdMn
இலவச வீட்டு மனை பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள் https://ift.tt/2Y3ydq6


சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலக வளாகத்தில், வருமானவரித்துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்காக, ரூ.65 கோடி  மதிப்பில், 19 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இவை, வருமானவரித்துறையில் கூடுதல் கமிஷனர், கமிஷனர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்காக, தமிழகத்தில் முதன்முறையாக இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்துடன், 120 கார்கள் நிறுத்தும் வகையிலான பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைந்துள்ளது. மேலும், கட்டிடத்தின் மேல் புறத்தில் 124 கிலோ வாட் உற்பத்தி செய்யும் வகையில்  சோலார் மின்வசதியும் இடம்பெற்றுள்ளது. அதிகாரிகள் செல்ல 2 லிப்ட், பொருட்களை ஏற்றி செல்ல 1 லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ‘சிகரம்’ என பெயரிடப்பட்ட இந்த குடியிருப்பை ஒன்றிய  நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனர் தினேஷ் சந்தர் பட்வாரி, ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மொகபத்ரா, மத்திய வருவாய்துறை செயலர் தருண் பஜாஜ், மற்றும் ஒன்றிய மறைமுகவரிகள் வாரியத் தலைவர் அஜித்குமார் உட்பட வருமானத்துறை வரி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.* கண்ணீர் விட்ட பெண் அதிகாரிகள்ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து புறப்படும்போது, வட மாநிலத்தை சேர்ந்த வருமான வரித்துறை பெண் அதிகாரிகள் சிலர் கண்ணீருடன், 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழத்தில் பணியாற்றி வருகிறோம். தங்களை சொந்த மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட ஒன்றிய நிதித்துறை அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

https://ift.tt/3usF3Bx தமிழகம், புதுச்சேரியில் பணியாற்றும் ஐடி துறை அதிகாரிகளுக்காக ரூ.65 கோடியில் 19 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பு வளாகம்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்


சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 9.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 காலை 10 மணி முதல் 6.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 காலை 10 மணி முதல் 9.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் பீர் ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யவும், மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய சட்ட மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.* காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ‘நாளை மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள்  மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 19ம் தேதி மிலாது நபி தினத்தன்றும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_76421756.jpgஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 4ம் தேதி முதல் டாஸ்மாக் மூடல்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு


சென்னை: நேர்த்திகடனாக மொட்டை அடிக்க விரும்புவோர் மிஸ்டுகால் கொடுத்தால் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். திருத்தணி முருகன் கோயிலுக்கு  இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வந்தார். இதன்பின்னர், மலைக்கோயிலுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள அன்னதான கூடம், தங்கத் தேர், வெள்ளி தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, கோயிலில் சாமி படங்களை தவிர வேறு படங்கள்  இருக்கக் கூடாது. மேலும், அங்கிருந்த முன்னாள் முதல்வர்களின் படங்களை அகற்ற உத்தரவிட்டார். இதன்பிறகு முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் அன்னதான கூடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, ‘‘திருத்தணி கோயிலில் கடந்த 10 வருடங்களாக ஓடாமல் உள்ள தங்கத் தேர், வெள்ளி தேர் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்களில் விரைவில் முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக குளியல் அறை ஏற்பாடு செய்யப்படும்.பக்தர்கள் குளிப்பதற்கு வெந்நீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் 360 படிக்கட்டுக்கள்தான் உள்ளது. இனிமேல் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். இனிமேல், கோயில்களில் காலை உணவாக சாப்பாட்டுக்கு பதிலாக இட்லி, பொங்கல் வழங்கப்படும். அறநிலையத்துறையும் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைந்து பக்தர்கள் ெமாட்டையடிக்க புதிய திட்டம் உருவாக்கி உள்ளது. இதன்படி மொட்டையடிக்கும் இடத்தில் மின்னணு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இதன் அருகே சென்று யாருக்கு மொட்டையடிக்க வேண்டுமோ அவரது முகத்தை ஸ்கேன் செய்துவிட்டு அங்கு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 8939971540 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் டோக்கன் அனுப்பிவைக்கப்படும். அந்த டோக்கனை காண்பித்து பக்தர்கள் இலவசமாக மொட்டை அடித்துக்கொள்ளலாம் என இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த ஆய்வின்போது அமைச்சருடன் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_83472842.jpgதிருத்தணி முருகன் கோயிலில் மிஸ்டுகால் கொடுத்தால் இலவச மொட்டையடிக்க டோக்கன் கிடைக்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி


சென்னை: ஆண்டுக்கு 1,155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது: கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மூலம், ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். இதில், 10 துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்துக்க 3 மருத்துவ முகாம்கள் வீதம் 385 வட்டாரங்களிலும் மொத்தம் 1,155 மருத்துவ முகாம்கள் நடத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களில் பின்வரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை சேவைகள் மக்களுக்கு அளிக்கப்படும். மேலும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்தில் 3 முகாம்கள் நடத்துவதற்கு ரூ.1 லட்சம் வீதம் 385 வட்டாரங்களுக்கு ரூ.3.85 கோடி செலவழிக்கப்படும். மருந்துகள் ரூ.75 ஆயிரம், மொத்த முகாம்களுக்கு ரூ.2,88,75,000, எரிபொருள் முகாமிற்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ.5,500, மொத்தம் ரூ.21,17,500, முகாம் ஏற்பாடுகள், ஒரு வட்டாரத்திற்கு ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.23,10,000, தகவல் கல்வி தொடர்பிற்கு ரூ.3,300 வீதம் 385 முகாமிற்கு ரூ.12,70,500, துண்டு பிரசுரம் மற்றும் சிற்றேடுகள் ஒரு வட்டாரத்திற்கு ரூ.3,300 வீதம் 385 முகாமிற்கு ரூ.12,70,500, பதாகைகள் ரூ.8,08,500, படிவங்கள் ரூ.9,24,000, புறநோயாளி சீட்டு ரூ.2400 வீதம் 385 முகாமிற்கு ரூ.9,24,000 என மொத்தம் ரூ.3.85 கோடி ஆகும். அதன்படி ஆண்டுக்கு 1155 சிறப்பு மருத்துவ முகாம்களை மீண்டும் புதுப்பொலிவுடன் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் நடத்திட ஆண்டு தோறும் ஆகும் செலவினம் ரூ.3.85 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_30265445.jpgகலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு


சென்னை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் சென்னை உட்பட 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக சென்னையில் ஆர்.ஏ.புரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு, வில்லிவாக்கம் 3வது எம்டிஎச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசித்து வரும் அவரது நண்பர் ரவிக்குமாருக்கு சொந்தமான வீடு, மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வாரத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இந்த சோதனையின்போது சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது அவர், அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு இருந்த சொத்துக்கள் மதிப்பும், அமைச்சராக இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு சேர்த்த சொத்துக்கள் மதிப்பும் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 26 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்த போது, 10 மடங்கிற்கு மேல் சொத்துக்கள் மதிப்பு உயர்ந்து இருந்தது தெரியவந்தது.அந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணம் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021 பிரிவு 13(2),13(1)(பி), 2018 மற்றும் 12,13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமானத்திற்கு அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ள சொத்தக்கள் குறித்தும், எந்த வருமாணத்தில் அந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது. அதற்கான ஆவணங்களுடன் நேற்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கடந்த 20ம் தேதி சம்மன் அனுப்பட்டது. அந்த சம்மன் படி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் நான் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் பணி முடிந்த உடன் வரும் 12ம் தேதிக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனுப்பிய அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் நான் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_91263980.jpgவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனை


சென்னை: தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளது குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 41 வழக்குகள் தொடர்பான ஆவணங்களில் 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 ஆவணங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.அப்போது யானை ராஜேந்திரன் ஆஜராகி, இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். மேலும் ஆவணங்கள் மாயமானதாக கூறி வழக்குகளை கைவிட்ட அதிகாரிகளின் பெயரை குறிப்பிட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளன. ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கு மட்டும் முடிவுக்கு வந்துள்ளது. வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பல வழக்குகளில் சிலைகள் மீட்கப்படவில்லை. கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிரம் காட்டவில்லை. எனவே, மாயமான 16 வழக்குகளின் கோப்புகளை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4  வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_28443546.jpgதமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் வழக்கு காணாமல் போன கோப்புகளை கண்டுபிடிக்க ஐகோர்ட் உத்தரவு
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தங்க சூலம்: அமைச்சர் தகவல் https://ift.tt/2Y67wlb
சமுதாய வளைகாப்பு விழா: பூந்தமல்லி எம்எல்ஏ பங்கேற்பு https://ift.tt/3kTcnia
நாய் மீது பைக் மோதி பெயின்டர் பலி https://ift.tt/3im0q2E
மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி https://ift.tt/2YeZSon
34 அரசு பள்ளிகளுக்கு முககவசம், சானிடைசர் https://ift.tt/3onizRu


சென்னை: பாஸ்போர்ட் சேவா கேந்திரா போல், சார்பதிவாளர் அலுவலகங்களை மாற்றுவது தொடர்பாக பதிவுத்துறை ஆலோசித்து வருகிறது. இதன் மூலம், அதிகாரிகளை இனி சந்திக்காமலேயே பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2018ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், எங்கிருந்தும், யார் வேண்டுமனாலும் பத்திரப்பதிவு செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், இடைத்தரகர்கள், நேரடியாக பதிவு செய்வதால் சிக்கல் உள்ளது. மேலும், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களை சந்தித்து, ஆவணங்களை சரிபார்த்த பிறகு, பத்திரப்பதிவு செய்ய முடியும். எனவே, சில நேரங்களில் இடைத்தரகர்களை அணுகாதவர்களின் பத்திரங்களை தராமல் இழுத்தடிப்பதாகவும் குற்றாச்சாட்டு எழுந்தது. ஆவண பதிவின்போது பொதுமக்கள் அலுவலக ஊழியர்களை சந்திக்க வேண்டியிருப்பதால், பேரம் பேச வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகம்போல், சார்பதிவாளர் அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் சொத்து ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இந்த சொத்து ஆவணங்களை பத்திரம் பதிய பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து அப்பாயிடனமென்ட் பெற்று கொள்ள முடியும். அவர்கள், நேரடியாக அதிகாரிகளை சந்திக்காமலேயே சொத்து ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியும். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் டிசிஎஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. எனவே, விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், தற்போது பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் மாற்றப்பட்ட பிறகு, இனி சொத்து ஆவணங்கள் பதிவுக்கு வந்தாலே, இந்த ஆவணங்கள் பதிவுக்கு வந்தவர்கள் சரிதானா என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்காக கருவிழி மற்றும் விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் நடைமுறை அனைத்து அலுவலகங்களிலும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சம்பந்த்தப்பட்டவர்கள் சொத்து தான் என்பதை அறிய முடிகிறது. எனவே, அந்த சொத்து அரசுக்கு சொந்தமானதாக இருப்பின் தமிழ் நிலம் மென்ெபாருள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் போலி பதிவை தடுக்க முடியும். தற்போது டிசிஎஸ் நிறுவனத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் மூலம், பதிவுப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_52355594.jpgபாஸ்போர்ட் சேவா கேந்திரம் போல் மாறும் சார்பதிவாளர் அலுவலகங்கள்: அதிகாரிகளை சந்திக்காமலேயே பத்திரப்பதிவு செய்யும் வசதி; பதிவுத்துறை உயர்அதிகாரிகள் ஆலோசனை


சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் நேற்று வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக 37 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தயார் நிலை ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி. ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.  அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கோவிட் 19 தொற்று பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள். அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கோவிட்-19 திருப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிச் சீட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தல். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல். மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்- மாதிரி பயணத்திட்டம். மாதிரி நன்னடத்தை விதிகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல் இனங்கள் குறித்த அறிக்கை. பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் மதுபானம் குறித்த அறிக்கை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வீடியோ பதிவுகள் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பணிகள். வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணுகை மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரம். வாக்கு எண்ணும் மையத்தில் சிசி டிவி அமைத்தல். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சிசி டிவி அமைத்தல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://ift.tt/39Qrp1V ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வந்த வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால், வளி மண்டல மேல் அடுக்கில் காற்றுசுழற்சி உருவாகி மழை பெய்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதம் வரை 39 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக, இந்த பருவத்தில் தமிழகத்தில் 33 செமீ அளவுக்கு மழை பெய்ய வேண்டும். இந்த முறை 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் 7 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் 20ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில், பெரும்பாலான இடங்களில் காலையில் இருந்தே மிதமான மழை பெய்து கொண்டு இருந்தது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கை முதல் தமிழக கடலோரப் பகுதி வரையில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_62389774.jpgவளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை: வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்


சென்னை: சென்னை மாநகருக்கு புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வௌியூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் பூந்தமல்லி சாலை, கோயம்பேடு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, வேளச்சேரி 100 அடி சாலை உள்ளிட்ட பல சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் 5 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதில், 3 மேம்பால பணிகளை நடப்பாண்டுக்குள் தொடங்க  நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் கோயம்பேடு 100அடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை- காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ரூ.94 கோடி செலவில், 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலப் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பொதுப்போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலை(ஓ.எம்.ஆர்) - சர்தார் படேல் சாலையை இணைக்கும் விதமாக ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படவுள்ளது. அதேபோல், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ராமாபுரம், முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலமும், மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்ப்பாலம் ஆகிய 2 பாலங்களும் ரூ.403 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படவுள்ளது. தாம்பரம் பகுதியில் கிழக்கு- மேற்கு தாம்பரம்- முடிச்சூர் பகுதியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம், இணைப்பு சாலை மற்றும் சண்முகம் சாலை-ஜி.எஸ்.டி சாலை இணைப்பு பாலம் ஆகிய பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி அடுத்த மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_69440860.jpgசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.459 கோடியில் 3 இடங்களில் மேம்பாலம்


சென்னை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்ட யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மூலம் கோயில் சொத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலானவை குத்தகை, வாடகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஒரு சிலர் வீட்டை காலி செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதிரியான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை என்கிற நிலை இருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு  சட்டமுன்வடிவை கொண்டு வந்தார். அதில், இந்து சமய அறநிலைய கொடை சட்டம் 79 பி பிரிவில் 3ம் உட்பிரிவின் படி ஆணையரின் எழுத்து வடிவிலான புகார் ஒன்றின் பேரினாலன்றி அற அல்லது சமய நிறுவனம் அல்லது நிலைக்கொடை ஒன்றுக்கு சொந்தமான சொத்து எதனின் சட்ட விரோதமான உடமையுடன் தொடர்புடைய குற்றத்தினை நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளுதல் ஆகாது. கூறப்பட்ட குற்றமானது கடுமையான தன்மைக்கு வாய்ந்ததாகும். எனவே, சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள நபர் எவராலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான குற்றவியல் புகாரானது தாக்கல் செய்யப்படலாம் என்று சட்டதிருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் யார் புகார் அளித்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வருங்காலங்களில் யார் புகார் அளித்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_10_1_2021_73858279.jpgசமூக ஆர்வலர்கள் யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை கோயில் சொத்தை ஆக்கிரமித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை: சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது


சென்னை: போலி பத்திரப்பதிவை பதிவாளர் ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர்கள்,  டிஐஜிக்களுக்கு வழங்கப்படும் சட்ட முன் வடிவை கடந்த மாதம் 2ம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். அதில், போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யலாம். அதன்பிறகும் பாதிக்கப்பட்டால் ஐஜியிடம் முறையிடலாம். அதன்பிறகு செயலாளர் வரை முறையிடலாம். போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து, இந்த சட்டத்திருத்தம் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற்று, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.  ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டதிருத்தம் அமலுக்கு வரும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் இனி வருங்காலத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. பதிவுத்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு கால விரயம் ஏற்படுவது தவிர்க்க முடியும்’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_76708621.jpgபோலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்


சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மதுரை,கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை இந்த மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த வானொலி நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையினர் வேலையிழக்க நேரிடும். வானொலியை நம்பியுள்ள கலைஞர்கள் வாழ்வாதாரங்களை் இழந்து விடுவர். வேளாண் தொழில் சார்ந்த வழிகாட்டுதல் நிறுத்தப்பட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.மண்டல வானொலிகளின் நிகழ்ச்சிகளை முடக்கி விட்டு சென்னை வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது தவறு. எனவே, இந்த முடிவை பிரச்சார் பாரதி கைவிட வேண்டும். அவை வழக்கம் போல தொடர்ந்து செயல்பட உறுதி செய்ய வேண்டும்.

https://ift.tt/3uqa49x தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே இனி கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டாம், நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ளதா என்று ஆராய்ந்த பின்னர் தான் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_8984012.jpgகொரோனா தொற்று கண்டறியப்பட்டால் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டாம்: மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் முழுவதும் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 7.28 லட்சம் விண்ணப்பங்களில் 6.65 லட்சம் பேருக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 64 ஆயிரம் கார்டுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தென்சென்னையில் 67,051 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 36,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 27,829 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 12,754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 8,986 பேருக்கு கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று வடசென்னையில் 55,962 பேர் புதிதாக கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 10,741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கார்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 130 நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 65,003 பேர், சேலம் 59,495 பேர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு படிப்படியாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_76775760.jpgகடந்த 4 மாதங்களில் மட்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு 10.54 லட்சம் பேர் விண்ணப்பம்: 6.65 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது


சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் சுத்தம் மற்றும் பசுமையை ஏற்படுத்துதல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டத்துடன் வேறு பல திட்டங்களையும் இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_77331180.jpgசர்வதேச தரத்தில் அடிப்படை கட்டமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் சிங்கார சென்னை 2.0: தமிழக அரசு ஆணை வெளியீடு


சென்னை: தமிழகத்தில் தொடங்க உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு 1600 இடங்கள் கூடுதலாக தமிழகத்துக்கு கிடைக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 25  அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, அந்த கல்லூரிகள் தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில்,  தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியைப் பெறும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. நீலகிரி, விருதுநகர், திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாமக்கல் ஆகிய இடங்களில் அமைய உள்ள  கல்லூரிகளுக்கான ஆய்வுப் பணியை ஒன்றிய அரசு நடத்தி முடித்து, அதற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கல்லூரிகள் இந்த ஆண்டில் செயல்படும் பட்சத்தில் 850 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். மீதமுள்ள கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகை, அரியலூர் ஆகிய கல்லூரிகளுக்கான அனுமதி அக்டோபர் மாதம்  இரண்டாவது வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2வது வாரத்தில் மத்திய மருத்துவ அதிகாரிகள்  குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வின் முடிவுகளும் அக்டோபர் 2வது வாரத்தில் வெளியாக உள்ளது. அதனால் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மேற்கண்ட 11 கல்லூரிகள் செயல்பட தொடங்கினால் 1600 இடங்கள் மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_36428470.jpgஇந்த ஆண்டு 1600 இடங்கள் கிடைக்கும் 7 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய ஆணையம் அனுமதி
ஜான்பாண்டியன் பெயருக்கு களங்கம்: தமமுக கண்டனம் https://ift.tt/3D1Z0m3
மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளருடன் கலந்துரையாடல்; தொழில்துறை ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: ஆத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி https://ift.tt/2ZCQ2Nv
அரிவாள் வாங்கணுமா?.. இனி ஆதார் கட்டாயம் https://ift.tt/3AT6oiM


சென்னை: நடப்பு கல்வி ஆண்டிற்கு  அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டிற்கு தேவையான 1661 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டார். அவரது செயற்குறிப்பினை அரசு கவனமாக ஆய்வு செய்து, அதனடிப்படையில், 2021-22 கல்வி ஆண்டிற்கு 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1661 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.20 ஆயிரம் வீதம், 2021-22 கல்வி ஆண்டில் மார்ச் 2022 வரை 11 மாதங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த அரசு ஆணையிடுகிறது. மேலும் இதற்கென ரூ.36 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் நிதியும், இதேபோன்று ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு 32 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் என மொத்தம் 36 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_83337039.jpgகவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி: உயர்கல்வித்துறை ஆணை வெளியீடு


சென்னை:  அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு அரசின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விளம்பரத்திற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_5779666.jpgஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: 2 ஆண்டு பொதுநல வழக்கு தொடர தடை விதித்தது ஐகோர்ட்


சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலையில் வெங்கடாச்சலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. தேவஸ்தான தலைவராக சுப்பா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் 2 ஆண்டுகளுக்கு பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தின் சார்பில் திமுக எம்எல்ஏவும் வேலூர் மாவட்டச் செயலாளருமான நந்தக்குமார், எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் கன்னையா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக, தமிழக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். புதிய நியமிக்கப்பட்டுள்ள சேகரின் கீழ், சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள கோயில், கன்னியாகுமரி, உளுந்தூர் பேட்டை, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்கள், நெல்லையில் உள்ள வாடிக்கையாளர் மையம் ஆகியவை இயங்கும்.மேலும், திருமலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக குழுவிலும், தமிழக தலைவர் என்ற முறையில் ஏ.ஜெ.சேகர் இடம்பெறுவார். அதேபோல, மகாராஷ்டிரா மாநில தலைவராக அமுல் காலே, கர்நாடகா மாநில தலைவராக ரமேஷ் ஷெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த முறை திருமலை திருப்பதி கோயில் தமிழக நிர்வாகிகளாக 33 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தமிழக நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.

https://ift.tt/2Wnjq9d திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக ஏ.ஜெ.சேகர் நியமனம்


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிகழ்வின் போது, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக உள்ள 49  கிரவுண்ட் நிலம்  இந்து சமய அறநிலையத்துறையால் சுவாதீனம் செய்யப்பட்டது.   இந்த இடத்தில் உள்ள கட்டிடத்தை தொன்மை மாறாமல் வேறு  பயன்பாட்டிற்கு கொண்டு வர கட்டிட வல்லுனர்களுடன் ஆய்வு செய்ய  ஒப்படைக்கவுள்ளோம். அவர்களது ஆலோசனை பெற்று கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை  பலப்படுத்துவதா, கட்டிடத்தை அகற்றுவதா என்பது குறித்து முடிவு  செய்யப்படும். இந்த இடத்தை பொறுத்தவரையில் சுமார் 98 ஆண்டுகள் குத்தகைக்கு  விடப்பட்ட இடம். இந்த குத்தகைதாரர் மறைந்த பிறகு அவரின் வாரிசுகள் தபால்  துறைக்கு வாடகைக்கு விட்டனர். அவர்கள் வாடகைக்கு விட்டு அந்த வாடகையை  பெற்று வந்தார்களே தவிர கோயிலுக்கு வாடகை செலுத்தவில்லை. அந்த வகையில் ரூ.12 கோடி வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. அதையும் வசூலிப்பதற்கு முறையாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.  மயிலாப்பூர், திருப்போரூர், மதுரவாயல் போன்ற பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 கோடி  மதிப்பிலான சொத்துகளை சட்டத்தின் மூலம் மீட்டுள்ளோம். சட்டமன்ற  மானியக்கோரிக்கையில் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்படும் என்று  அறிவித்தோம். இப்போதே  ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 150 கிரவுண்ட்டிற்கு மேல் உள்ளது. ஏற்கனவே, தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட பள்ளி  கட்டிடம் மற்றும் மைதானத்துக்கு பல கோடி வாடகை பாக்கி தராததால் சுவாதீனம் செய்துள்ளோம். இதுவே 50 கிரவுண்ட் ஆகும். இப்போது 49 கிரவுண்ட் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 கிரவுண்ட் மீட்கப்படும். தற்போது வாடகை செலுத்தாதவர்கள், உள் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள், புதிதாக ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து கோயில் சொத்துகளை மீட்டு வருகிறோம். மீட்கப்பட்ட இடங்கள் மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்துஅறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும். இந்து அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் படியும் அர்ச்சகர்களை நியமிக்க தக்கார்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. கோயில்களில் 2011ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது. திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில் நேற்றிலிருந்து எளிதாக தரிசனம் செய்ததாக முகநூலில் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_35839481.jpgகீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்ட் சொத்து மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை


* பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு* மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுசென்னை: பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 39,408 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல், மொபைல் டீம் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலில் 6.10.2021ல் நடைபெறும் முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 17,130 காவல் துறையினர், 3,405 ஊர்க்காவல் படையினரும், 9.10.2021 அன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவின் போது 16,006 காவல் துறையினர், 2,867 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 39,408 காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 மாலை 5 மணிக்கும் பின்னரும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 மாலை 5 மணிக்கு பின்னரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ift.tt/3mghmJk 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 39,408 காவலர்கள் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுவார்கள்
புதுக்கோட்டையில் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர் வீடுகளில் விஜிலன்ஸ் சோதனை: 1,260 மடங்கு சொத்து குவிப்பு கண்டு பிடிப்பு https://ift.tt/39SdCb3
வரும் முன் காப்போம் மருத்துவ திட்டம் தொடக்கம்: ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு https://ift.tt/2ZHN4aG


* மூன்று மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை* ரூ.470 கோடியில் நில எடுப்பு பணிக்கு ஒப்பந்தம்* பணி முடிந்தால் 20 நிமிடத்திற்குள் செல்லலாம்சென்னை: ரூ.5,900 கோடியில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாலைப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2007ல் திமுக ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ.1,815 கோடி செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 2007ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டது. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது. இதனால், இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை, ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டிய நிலையில் அதிமுக அரசு திட்டத்தை செயல்படுத்த அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்ற போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அதன்பின் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று எடப்பாடி அறிவித்தார். தொடக்கத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்த நிலையில், இத்திட்டம் 2018ல் ரூ.2,400 கோடியாக அதிகரித்தது. பின்னர் ரூ.3087 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.அதன்படி, சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் நிறைவடைகிறது. இந்த சாலைக்காக மொத்தம் 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. இந்த உயர்மட்ட சாலை அமைய உள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகிற 10 கிலோ மீட்டர் தூரம், கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2011ல் அனுமதியும் பெறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால், மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதிகோரி சென்னை துறைமுக நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தக் கூடாது, கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக் கூடாது, கட்டுமானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகளை திட்டம் முடிவடைந்த பின்னர் அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் கன்டெய்னர் லாரிகள், கீழடிக்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆறுவழிச் சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளது. இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்கிறது. இது, கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்த சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது. 10 வழிச்சாலை, அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு ரூ.1,350 கோடி மதிப்பிலான மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், 2012ல் இந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நிறைவேற்றப்படவில்லை. திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை ேநரில் சந்தித்து இந்த திட்டத்தில் 3ல் ஒரு பகுதி வேலை முடிந்து விட்டது. அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கடிதத்தை கொடுத்தார். அதன்விளைவாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் கொடுத்தோம். இந்த திட்டம் என்பது ஒரு அடுக்கு பாலமாக அமைக்க திட்டமிட்டிருந்தது. இப்போது, இரண்டடுக்கு மேம்பாலமாக அமைக்கப்படுகிறது. மதுரவாயலில் இருந்து துறைமுகம்  வரை சுமார் 20 கி.மீ தூரம் மேலடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் துறைமுகம் வரை சுமார் 14 கி.மீ தூரம் கீழடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. மேலடுக்கு சாலையில் துறைமுகத்துக்கு போகும் கனரக வாகனங்கள் சென்று விடும். கீழடுக்கு என்பது பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். 13 இடங்களில் மேம்பாலத்தில் இறங்கும் வகையில் இறங்கு பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி ரூ.5,900 கோடி ஆகும். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக நில எடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.470 கோடி வரை தேவைப்படுகிறது. இதில், மாநில அரசின் பங்கு 50 சதவீதம். மத்திய அரசின் பங்கு 50 சதவீதம். அந்த பணிகளுக்கு தான் ஒப்பந்தம் போட வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வரின் அனுமதியை பெற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. நில எடுப்பு பணிகள் முதலில் நடைபெறும். இந்த திட்டம் நிறைவேற்ற என்ன தேவையோ அதை மாநில அரசு செய்து தரும்.  தற்போது  நிதி அதிகரித்ததற்கு அதிமுக அரசு தான் காரணம். தொடர்ந்து இந்த பாலப்பணிகளை செயல்படுத்த விட்டிருந்தால் தற்போது இப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இருக்கும். ஆனால்,  அவர்கள் செயல்படுத்தவில்லை. தற்போதைய அரசு மக்கள் நலன் கருதி இந்த பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். துறைமுகத்துக்கு பொருட்கள் வருவது குறைவாக உள்ளது. இந்த திட்டம் வந்தால் துறைமுகத்திற்கு சரக்கு பொருட்கள் வருவது அதிகரிக்கும். மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்திற்கு போவதற்கு 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஆனால், இந்த பாலம் வந்தால் 20 நிமிடத்தில் சென்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், ‘மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை விரிவான திட்ட அறிக்கை 3 மாதத்தில் நிறைவடையும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், இரண்டாம் தளத்தில் மதுரவாயலில் இருந்து நேரடியாக துறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் போக்குவரத்து இருக்கும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியில் கட்டப்பட உள்ளது’ என்றார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். துறைமுகத்துக்கு சரக்கு பொருட்கள் வருவது அதிகரிக்கும். மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்திற்கு போவதற்கு 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும். இந்த பாலம் வந்தால் 20 நிமிடத்தில் சென்று விடலாம்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_45696658.jpgசென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்கும் வகையில் ரூ.5,900 கோடியில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை இரண்டு அடுக்கு பறக்கும் சாலை


சென்னை: விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு விரைவு பஸ் நேற்று காலை திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி வந்தது.  கோயம்பேடு 100 அடி சாலை வழியாக வந்தபோது, பேருந்தின் இன்ஜினிலிருந்து அதிகளவு கரும்புகை எழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், ஓட்டுனரிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுனர், பஸ்சை சாலையோரத்தில்  நிறுத்தினார். அப்போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த பயணிகள், அலறியடித்தவாறு தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து, இறங்கி ஓடினர். இதனால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. தகவலறிந்த கோயம்பேடு, அசோக் நகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பஸ் முழுவதும் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அங்கு வந்து, எரிந்து போன பேருந்தை ஆய்வு செய்தனர். புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஜினில் ஆயில் கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_50124759.jpgஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து: கோயம்பேடு அருகே பரபரப்பு


சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மழை காலத்தில் பணிகளை கண்காணிக்க, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து துறைகளும், துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.அதன்படி திருவொற்றியூர் மண்டலத்திற்கு தமிழக பைபர்நெட் கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கமல் கிஷோர், மணலி  சாலை திட்டம், திட்ட இயக்குனர் பி.கணேசன், மாதவரம் சுற்றுலாத்துறை  இயக்குனர் சந்தீப் நந்தூரி, தண்டையார்பேட்டை நில அளவைத்துறை இயக்குனர் டி.ஜி.வினய், ராயபுரம்  பொதுப்பணித்துறை இணை செயலர் மகேஸ்வரி ரவிகுமார், திரு.வி.க.நகர் அமலாக்கத்துறை இணை கமிஷனர் நர்னாவர் மனிஷ் சங்கர்ராவ், அம்பத்தூர் சிறுபான்மை நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், அண்ணா நகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலர் எஸ்.பழனிசாமி, தேனாம்பேட்டை தமிழக உப்பு கழகம் நிர்வாக இயக்குனர் கே.ராஜாமணி, கோடம்பாக்கம் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை செயலர் எம்.விஜயலக்ஷ்மி, வளசரவாக்கம் வணிக வரித்துறை இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத் ஆலந்தூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், அடையாறு அறிவியல் நகரம்  துணை தலைவர் எஸ்.மலர்விழி, பெருங்குடி தமிழக சேமிப்பு கிடங்குகள் கழக நிர்வாக இயக்குனர் ஏ.சிவஞானம் மற்றும் சோழிங்கநல்லூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் கே.வீரராகவராவ் ஆகிய 15 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.முன்னெச்சரிக்கை பணிகளுக்கு திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல், மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகுத்தல், போதிய அளவில் கையிருப்பில் வைத்திருத்தல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான இடத்திற்கு ராணுவம், கடற்படை, புவியியல் ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மீட்பு குழு உதவியை நாடுவது மேலும் மக்களுடன் இணைந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்கால பணிகளை இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_91369266.jpgவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,51,132 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,624 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,62,177 ஆக உள்ளது. இதேபோல், நேற்று சிகிச்சை பெற்று வந்த 1,639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,09,435 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், சென்னையில் நேற்று 189 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 181 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், ஈரோட்டில் 116 பேருக்கும் நேற்று தொற்று காணப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

https://ift.tt/3EZiNV3 தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா


சென்னை: கடந்த 1991-1996 அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும் வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45 லட்சம் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணை காலத்தில் சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன் காலமானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி அலிசியா நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது, இந்திரகுமாரி, பாபு, சண்முகம், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், இந்திரகுமாரி அவரது கணவர் பாபு, ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை விபரத்தை நீதிபதி அறிவித்தார். அதில்,  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_30_2021_78661746.jpgமாஜி அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை


சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை:   பண்டிகை கால விற்பனையை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 105 விற்பனை நிலையங்களில் மாநகர பகுதிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் 64 விற்பனை நிலையங்களின் அலுவல் நேரத்தை மட்டுமே காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரையும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலுவல் நேரம் 8 மணி நேரம் என்ற அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிற ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் பழைய நிலையிலேயே அதாவது இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் ஆகஸ்ட் 2021 வரை ரூ.7.70 கோடி  விற்பனை அதிகரித்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_29_2021_94062442.jpgகோ-ஆப்டெக்சில் விற்பனை நேரம் மாற்றம்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்


சென்னை: சிலம்ப  விளையாட்டை மத்திய அரசின் ‘கேலோ  இந்தியா’ திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முழு முனைப்பு காட்டியதற்கு  சிலம்பம் வீரர்கள் சார்பில் பாராட்டு விழா நேற்றுமுன்தினம் மாலை ராயபுரம் தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.   இதில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, ‘‘தமிழர்களின்  வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறிய செய்யும். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.    வடசென்னையில் சிலம்ப விளையாட்டிற்கு என பிரத்யேக ஸ்டேடியமும் அமைக்கப்படும் ’’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_29_2021_26731509.jpgசிலம்பம் தோன்றியது குறித்து அறிய ஆய்வுக்குழு: அமைச்சர் பேச்சு
உலக சுற்றுலா தினத்தில் களையிழந்த மாமல்லபுரம் https://ift.tt/39HI4EK
காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் ஸ்லோகன் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா https://ift.tt/3F2epEw
கணவர் இறந்ததால் மன உளைச்சல் 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: திருமுல்லைவாயிலில் திடீர் பரபரப்பு https://ift.tt/3kLTHAG
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு https://ift.tt/3mbF7SN
4 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலம்: ரேஷன் கடை அமைக்க கோரிக்கை https://ift.tt/3uoloCP
வழிப்பறி வாலிபர்களை விரட்டி பிடித்த காவலர்: எஸ்பி வருண்குமார் பாராட்டு https://ift.tt/3uj9udv
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை