புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 1,260 மடங்கு சொத்து குவித்தது தெரிய வந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (47). ஊரக வளர்ச்சிதுறையில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி காந்திமதி (38). முள்ளங்குறிச்சி ஊராட்சி தலைவராக உள்ளார். இவர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரின் ஆதரவாளராக இருந்த இவர், அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டு வரை 3ஆண்டுக்குள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் முருகானந்தம், காந்திமதி ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் 3 குழுக்களாக பிரிந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் காலை 8 மணியளவில் இன்ஸ்பெக்டர் பீட்டர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது  தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.  இதில்  முருகானந்தம், காந்திமதி கடந்த 2017 ஜனவரி 1ம்தேதி  முதல் 2020 ஜூன் 30ம்தேதி வரை ரூ.15 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரம்  மதிப்புள்ள சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளதாக வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 1260 மடங்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் அளவீடு செய்துள்ளனர்.இதேபோல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முருகானந்தத்தின் தம்பி பழனிவேலு (45) என்பவரின் விஜய்பேலஸ் வணிக வளாகம், பழைய அரசு மருத்துவமனை எதிரே  உள்ள விஜய் மகளிர் விடுதி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். முருகானந்தத்தின் அண்ணனான திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ரவிச்சந்திரன் (58) வீட்டில் காலை  8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 80 சவரன் நகை உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.* மாஜி அமைச்சரின் தொடர்பால் உயர்ந்த முருகானந்தம்ஊரக வளர்ச்சி துறையில் முருகானந்தம் உதவியாளராக பணியாற்றி வந்ததால் அவ்வப்போது உயர் அதிகாரிகள் தொடர்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து அவர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு மாஜி அமைச்சருடன் தொடர்பு கிடைத்துள்ளது. இதனை வைத்து முருகானந்தம், தன் தம்பி பழனிவேலுக்கு தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில்  சோலார் லைட், தெரு லைட், பிளிச்சீங் பவுடர் தெளிக்கும் வேலைகளை பெற்று கொடுத்துள்ளார். அதன்பிறகு இவர்களின் சொத்துமதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது.* மனைவியை தலைவராக்க ரூ.4 கோடி செலவு செய்த முருகானந்தம் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குருச்சி பஞ்சாயத்து தலைவராக உள்ள முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காந்திமதியை வெற்றி பெற வைக்க முருகானந்தம் ரூ.4கோடி வரை செலவு செய்துள்ளார்.* புதுக்கோட்டையில் தனி சூட்டிங் அகாடமி புதுக்கோட்டை சார்லஸ்நகர் வீடு அருகே முருகானந்தம், அவரது மகன் கண்ணனுக்கு விஜய் சூட்டிங் அகடாமி என்ற பெயரில் சூட்டிங் பயிற்சி மையம் அமைத்து கொடுத்துள்ளார். நேற்று மதியத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இந்த சூட்டிங் பயிற்சி மையத்தையும் திறந்து சோதனை செய்தனர்.* விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த முருகானந்தம்கடந்த அதிமுக ஆட்சியில் அசூரவேகத்தில் வளர்ச்சியடைந்த முருகானந்தம், அதிமுக ஆட்சி போன பிறகு தன்னுடைய அரசு பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் கலந்துபேசி தற்போது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.* நகைகள், சொகுசு கார்கள்புதுக்கோட்டையில் உள்ள சார்லஸ்நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் சோதனையின்போது 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது. இதே வீட்டில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு கார் மற்றும் இரண்டு இன்னோவா கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள், தொழில் முதலீட்டு ஆவணங்களும் சிக்கின.* மனைவி பெயரில் ஐடி கம்பெனிபுதுக்கோட்டையில் யுனிகொயர் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஐ.டி கம்பெனியை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் முருகானந்தம் தொடங்கி மனைவி காந்திமதி நிருவாக இயக்குநராக இருந்து வருகிறார். இதேபோல், முருகானந்தத்தின் அக்கா தமிழரசி பெயரில் கார்லாக் கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் ரூ.1கோடி முதலீட்டில் கட்டுமான நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. முருகானந்தம், அவரது மனைவியின் சொத்து விவரம்1.1.2017 நிலவரப்படி சொத்து மதிப்பு    -    ரூ.1,40,75030.6.2020 நிலவரப்படி சொத்து மதிப்பு    -    ரூ.16,49,84,1581.1.2017 முதல் 30.6.2020 வரை வருமானம்    -     ரூ.1,24,99,487செலவு    -     ரூ. 50,09,460வாங்கிய சொத்துகளின் மதிப்பு    -    ரூ.16,48,43,408சேமிப்பு    -    ரூ.74,90,027வருமானத்திற்கு அதிமாக சேர்த்து சொத்து    -    ரூ.15,73,53,381



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3AU6HKl