ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் திறக்குறள் இன்றைய தலைமுறையினரை சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகளுடன் இணைந்தும் இணைய வடிவிலும் அசைவூட்டும் படங்கள், வினாடி வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கனெ சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.* அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.* பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின்  மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்களை தேர்வு செய்து மாதம் தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதில், 50 விழுக்காடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.2 கோடியே 70 லட்சமும், 2022-23ம் ஆண்டிற்கு ரூ.5 கோடியே 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* திருக்குறள் முற்றோதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறள் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத் தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு, பரிசுத் தொகை உயர்த்தப்படும்.* தமிழ அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பரிசுத் தொகைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* சங்க இலக்கிய வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் புகழ்மிக்க ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு, எளிய விளக்கவுரையுடன் உயர்தர அச்சு நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.* தமிழின் வாய்ப்பாட்டு மரபை அடுத்த தலைமையினருக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் அறநிலையத்துறை உடன் இணைந்து நடத்தப்படும்.* சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து எளிமை பதிப்புகளாகவும் திராவிட களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.* தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். * வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.* பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடப்படும்.  * செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் புதிய கலைச்சொற்கள் உருவாக்கத்தை இணையவழியில் அறிமுகம் செய்து மொழியியல் அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுக் கலைச் சொற்கள் தரப்படுத்தப்படும். * தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும், ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப்பெற வழிவகை செய்யப்படும். * தமிழை பிறமொழியினருக்கு கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாட நூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலிகளும் உருவாக்கப்படும்.* ஆட்சிச் சொல் அகராதி திருந்திய பதிப்பு மற்றும் அரசுத்துறைகளின் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_69482059.jpgவெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கம்: தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு திறனறித்தேர்வு..!


சென்னை: கிழக்கு தாம்பரம் பாண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவசங்கர் (35), மென்பொருள் இன்ஜினியர். இவருக்கு, சண்முகபிரியா (29) என்ற மனைவியும், ருஷிக் (5) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சண்முகபிரியா தனது குழந்தையுடன், பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த சிவசங்கர், திருப்போரூர்  கைலாசநாதர் கோயிலின் பின்புறம், புதரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_10958499.jpgமனைவி பிரிந்து சென்றதால் விபரீதம்: இன்ஜினியர் தற்கொலை


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் (திமுக) பேசியதாவது: பெரம்பூர் தொகுதியில் அரசு தொழில் கல்லூரி (ஐடிஐ) அமைத்து தர வேண்டும். சின்னாண்டி மடம், சஞ்சய் நகர், எருக்கஞ்சேரி,  எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னை மாணவர்களும் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒரு நூலகத்தை பெரம்பூர் தொகுதியில் அமைத்து தர வேண்டும்.பெரம்பூர் தொகுதியில் அன்றைய துணை முதல்வர், இன்றைய முதல்வர் 26.2.2009 அன்று பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திராகாந்தி நகர் ஆகிய பகுதிகளில்  வசிக்கும் 3,200 குடும்பங்களுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். அதில் 360 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் விடுபட்டது.  எனவே, விடுபட்ட 360 குடும்பங்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும். பட்டா தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீது வருவாய் ஆய்வாளர்கள், துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_86024112.jpgபெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அரசு ஐடிஐ அமைக்க வேண்டும்: பேரவையில் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கோரிக்கை


சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், தாம்பரம் தொகுதி, சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ஆவன செய்யுமா?: அமைச்சர் கே.என்.நேரு: செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளை செம்பாக்கம் நகராட்சியுடன் ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேரூராட்சிகளுடன் செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளையும், தாம்பரம் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் நகராட்சியில் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடையவில்லை. என் தொகுதிக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட வளசரவாக்கம், ஆவடி, அம்பதூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடைந்து விட்டது. எனவே, எனது தொகுதியில்  பாதாள சாக்கடை பணிக்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_58503360.jpgசிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்


துரைப்பாக்கம்: சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவரது நண்பர் அஜித் (20). இவர்கள், பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் நண்பர் சாந்தகுமாரை (21), பார்க்க நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, மூவரும் மது அருந்திவிட்டு, போதையில் பைக்கில் சோழிங்கநல்லூர் குமரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பாஸ்ட்புட் கடைக்கு சாப்பிட சென்றனர்.பிரைட் ரைஸ், சிக்கன் என விதவிதமாக சாப்பிட்ட இவர்கள், பணம் கொடுக்காமல் அங்கிருந்து நைசாக வெளியேறினர். இதை பார்த்த கடையின் உரிமையாளர், மூவரையும் தடுத்து நிறுத்தி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடி ராஜிவ்காந்தி சாலை சென்டர் மீடியனை தாண்டி குதித்தபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது தலை சாலையில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_23385257.jpgசாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் தப்பியோடிய வாலிபர் தடுமாறி விழுந்து பலி


சென்னை, செப்.1: முகப்பேர் பகுதியை சேர்ந்தசில்பியா (54), நேற்று வடபழனி 100 அடி சாலையில் சூளைமேடு சந்திப்பு அருகே காரில்சென்ற போது, திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், சில்பியா உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி எரிந்தது. தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_80993289.jpgவடபழனி 100 அடி சாலையில் ஓடும் காரில் தீவிபத்து: பெண் உயிர் தப்பினார்


சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி (திமுக) பேசியதாவது: நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: சென்னையை சுற்றி 32 கி.மீ., தூரத்துக்கு பெல்ட் ஏரியா என்று சொல்லி, 1962ம் ஆண்டே நகரத்தை ஒட்டிய இந்த பகுதிகளில் பட்டா வழங்க தடை இருக்கிறது. இடம் நெருக்கடியாக இருப்பதால் அரசு புறம்போக்கு நிலங்கள் அரசுக்கு வேண்டும் என்று இந்த தடையை விதித்துள்ளனர். இதில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்று  கலைஞர் முதல்வராக இருந்த போது, நத்தத்தில் வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது பட்டா வழங்குவதில் சிரமம் இருக்கின்ற காரணத்தால், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை காலி செய்து, குடிசை மாற்று வாரிய வீடுகளில் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். நீர்நிலை புறம்போக்கில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் வகையில் சட்டம் கடுமையாக இருக்கிறது.  நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை இடிக்கும் பணியை இந்த அரசு செய்யும். காரம்பாக்கம் கணபதி: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள போரூர் ஏரிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் உள்ளது. இதை அகலப்படுத்தி தூர்வாரி தண்ணீரை தேக்கினால் சென்னைக்கு குடிநீர் தேவைக்கு பயன்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_33956546.jpgபோரூர் ஏரி கால்வாயை தூர்வார வேண்டும்: பேரவையில் காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ கோரிக்கை


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பிச்சுப்பிள்ளை தெருவில் சுமார் 2166 சதுர அடி மனை வேதாச்சலம் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த மனை கோயிலுக்கு மிகவும் அருகாமையில் இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வாடகை தரவில்ைல. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை தகவல் தெரிவித்தும், ரூ.8.50 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. எனவே, அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆகஸ்ட் 27ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து வாடகைதாரரின் வாரிசுதாரர் விஜயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மீண்டும் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், நீதிமன்றம்  சட்டரீதியாக நடவடிக்கைகள் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அங்கிருந்து அகற்ற ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோயில் இணை ஆணையர் காவேரி தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து 2166 சதுர அடி மனையை மீட்டனர். இந்த மனையின் மதிப்பு ரூ.5 கோடி என கோயில் தரப்பில் கூறப்பட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_9_1_2021_13592166.jpgகபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பு நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
பருத்திப்பட்டு ஏரியில் 2 டன் மீன்கள் செத்து மிதப்பு: குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைப்பு https://ift.tt/2WFdsAN
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதி அரசு பள்ளிகளில் சீரமைப்பு பணி: கலெக்டர் ஆய்வு https://ift.tt/3DxEIBO
ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் https://ift.tt/3t6t3VJ
ஆவடி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகள் அமைப்பு: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார் https://ift.tt/3BrKYsR
சென்னை மருத்துவமனையில் அனுமதி புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி https://ift.tt/3mPUlig
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு படிக்காமல் பதிவுகளை பார்வர்டு செய்தது ஏன்? எஸ்.வி.சேகருக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி https://ift.tt/2WzzVyO
ஆன்லைன் வகுப்புகளும் தொடர்கிறது மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் https://ift.tt/3t6t0t1
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் https://ift.tt/3mPnuKo
மாமல்லபுரம் அரசு பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம் https://ift.tt/3jyjWdy
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பதவியேற்பு https://ift.tt/3jv3v1m
காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு https://ift.tt/3yyntMQ
கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங் https://ift.tt/3gOtHCw
காயலான் கடையில் பயங்கர தீ விபத்து: எம்பி நேரில் சென்று ஆறுதல் https://ift.tt/2V8oH44
கூடுவாஞ்சேரி - கொட்டமேடு சாலையில் கால்வாய் இல்லாமல் சாலை அமைத்ததால் குளம்போல் தேங்கும் மழைநீர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதி https://ift.tt/3zxzEed
வனக்குழு சார்பில் கடன் உதவி முகாம் https://ift.tt/2WEd5pI


மதுரை:  நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: செப்.1ம் தேதி (நாளை) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக பயில்வதற்கு மாணவர்களும், பயிற்றுவிப்பதற்கு ஆசிரியர்களும் நன்றாக பழகி விட்ட சூழலில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

https://ift.tt/38sB51U முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை எதிர்த்து வழக்கு


சாயல்குடி::  சாயல்குடி அருகே இயங்கி வரும் அரசு உப்பளத்தை அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதால், அரசுக்கு வரவேண்டிய வருவாயில் மாதம்தோறும் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 1974ல் திமுக ஆட்சியின்போது ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் கலைஞரால் துவங்கப்பட்டது. 400 ஏக்கர் பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. லாபத்துடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 1,350 ஒப்பந்த பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்வதால் தமிழக அரசுக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது. நாள் ஒன்றிற்கு 5 டன் வரை சுத்திகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் திறன் வசதி உள்ளது. இதனால் மாதத்திற்கு ரூ.25 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்தது.  ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பின்மை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு காசோலை வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வாழ்க்கையும் நலிவடைந்து வருகிறது.  உப்பள தொழிலாளர்கள்(சிஐடியு)சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தப்படி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை முறையாக வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கடைசி வாரத்தில் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு, கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உள்ளது. ரூ.8 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பாதுகாப்பின்றி கிடக்கிறது.  இதை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் செலவு செய்தும் கூட, மழைக்கு வெளிப்புற கட்டுமானங்கள், மேற்கூரைகள் சேதமடைந்து விட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து நிற்கின்றனர். மாதந்தோறும் அரசுக்கு வரக்கூடிய ரூ.25 லட்சம் வருவாய் நின்று விட்டது’’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_37766666.jpgஅதிமுக ஆட்சியில் பராமரிக்காமல் விட்டதால் அரசு உப்பு நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் இழப்பு: பல ஆண்டாக பணி நிரந்தரம் கேட்கும் தொழிலாளர்கள்


சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தஞ்சை, நாகை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத்தலைவர், உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான பரசுராமன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதைப்போன்று நாகை வடக்கு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கஞ்சா நகரம் சுப்பிரமணியம், மடப்புரம் கண்ணன் மற்றும் நீடூர், நலத்துக்குடி, ரூரல், தாலச்சேரி, மேலாநல்லூர், கீழமருதநல்லூர், மேலையூர், பாகசாலை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.தென்காசி தெற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த நெல்லை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார்பாண்டியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.முத்துச்செல்வி, தென்காசி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் சாந்தசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,  துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., உயர்நிலை  செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  எம்.பி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தஞ்சை மத்திய மாவட்டப்  பொறுப்பாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ தஞ்சாவூர் நகரச் செயலாளரும் -  தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், எம்.எல்.ஏ.,  ஒரத்தநாடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன், தலைமை  நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்டப்  பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்  ஆகியோர் உடனிருந்தனர். அப்போது திமுகவில் இணைந்த பரசுராமன் நிருபர்களிடம்: அதிமுகவின் உண்மை தன்மை குறைந்து விட்டது. அதிமுக இன்றைக்கு சிதறி, கிழிந்த சேலை போல ஆகிவிட்டது. இனி அதிமுக விரைவில் இல்லாமல் போய் விடும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதை எண்ணிக் கொண்டு மக்களுக்காக மக்கள் பணியில் மிக சிறப்பாக செயலாற்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் செயல்படுவதை விரும்பி வந்திருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, குற்றச்சாட்டு முழுவதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் எந்த பதவியும் திமுகவில் கேட்கவில்லை. இணைந்தவர்கள் மக்களுக்காக சிறப்பாக செயல்படுவார்கள்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_42588443.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி, எம்.எல்,ஏக்கள் திமுகவில் இணைந்தனர்: தஞ்சை, நாகை, தென்காசி மாவட்ட நிர்வாகிகள்


சென்னை: சினிமா இயக்குனர் சந்தோஷ்ராய் கைது குறித்துடெல்லி போலீசார் கூறுகையில், ‘டெல்லி அமலாக்க பிரிவு அலுவலக முகவரியில், சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக புகார்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் சிங் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனகரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லியின் பாராளுமன்ற தெரு காவல் நிலையம் அருகே, மோசடி வேலைகளை செய்து வந்த 4 பேர் கும்பலை கைது செய்தோம். இந்த கும்பலுக்கு டாக்டர் சந்தோஷ் ராய் என்பவர் தலைமை வகித்துள்ளார்.இவர், ேகாட்ஸே என்ற திரைப்படத்தின் இயக்குனராவார். கைது செய்யப்பட்ட சந்தோஷ் ராய் மீது ஒடிசாவில் 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர், தன்னை அமலாக்க இயக்குனரக மதிப்பீட்டு அதிகாரி என்று கூறிக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பல கோடி மோசடி செய்துள்ளார்’ என்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_9734744.jpgஅமலாக்கத்துறை அதிகாரியாக நடித்து பல கோடி மோசடி செய்த சினிமா இயக்குனர் கைது


சென்னை: காரைக்குடியில் 1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நினைவுப்பரிசு விற்பனையகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார்.இந்த விற்பனையகம் 5,500 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. விருதுநகர் கைத்தறி குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற முக்கிய ரகங்களான அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், பரமக்குடி சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர ரகங்களும் இந்த விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும். இதில் தமிழகத்திலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெறும். மேலும், இந்த விற்பனையகத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான கைத்தறி துணி ரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில்,  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_99329776.jpgகாரைக்குடியில் 1.83 கோடியில் நினைவுப்பரிசு விற்பனையகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் பாராட்டுக்குரியது. மேலும் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கமும் வென்றிருப்பது விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உந்துதலாக உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 5 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை. இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_78940982.jpgபாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு கட்சி தலைவர்கள் பாராட்டு


சென்னை: தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சைக்குப்பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார்.அப்போது, லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப்பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் சென்றனர். முன்னதாக அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_12276859.jpgமருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் பயணம்


சென்னை: வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாத ஊதியம் 2,00,000 முதல் 2,50,000 வரை சம்பளம் பெறுமானம் உள்ள  (டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண்)  300 முதல் 500 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்ட ஜிசிசி ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு  குவைத் நாட்டில் பணிபுரிய தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக 27,000 முதல் 34,500 வரை வழங்கப்படும். அரபு உணவு வகைகள் சமைக்க ஆண் சமையல்காரர்கள் தேவைப்படுகிறார்கள். சமையலருக்கு மாத ஊதியம் 37,000 வழங்கப்படும். குவைத் நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.  மாத ஊதியம் 29,640 முதல் 32,000  வரை வழங்கப்படும். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினிரியர், ஐடிஐ பிட்டர் தேர்ச்சி பெற்ற 22 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட Casting/Inspection/Machine-operator- பணிபுரிய ஓமன்நாட்டிற்கு தேவை பட்டியல் வந்துள்ளது. மாதஊதியம் 29,000 வழங்கப்படும். இந்த சம்பளம் சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், விமானப்பயணச்சீட்டு, ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் தனியாக வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com-ல் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது.   எனவே வெளிநாட்டில் வேலை செய்ய  விரும்புகிறவர்கள் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி (044-22505886/ 22502267) எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை 10,350 பேரை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_86796207.jpgநர்சுக்கு மாதம் 2.50 லட்சம் சம்பளம்: வெளிநாட்டில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கை: குமரி முனையில் வான் புகழ் வள்ளுவர் சிலை நிற்கும் பாறைக்கும், விவேகானந்தர் மணி மண்டபம் இருக்கும் பாறைக்கும் இடையே நடைபாலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவது என்று அறிவித்திருப்பது பெரிதும் பாராட்டிற்குரியது. சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகும். இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_80720157.jpgதமிழக அரசுக்கு குமரிஅனந்தன் பாராட்டு


சென்னை: டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் எஸ்பிசிஐடி (உளவு பிரிவு) தலைமை காவலர் ஒருவரை, சக நண்பர்களே காரில் கடத்தி போதை ஊசி செலுத்தி கடத்தினர். அவரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றும் வரை 18 மணி நேரம் சென்னை முழுவதும் காரில் சுற்றியுள்ளனர். 1 லட்சம் பணம் டிரான்ஸ்பர் ஆன பிறகு மயக்க நிலையில் நடுரோட்டில் உளவு துறை காவலரை நண்பர்கள் நடுஇரவில் தவிக்க விட்டு சென்றுள்ளனர். இந்தசம்பவம், போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி(45). இவர் கடந்த 94ம் ஆண்டு தமிழக காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது அவர் டிஜிபி அலுவலகத்தில் உள்ள மாநில உளவுத்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 28ம் தேதி காலை உளவுத்துறை தலைமை காவலர் ரவி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள தான் பணியாற்றும் உளவுத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது, அதேபகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசிக்கும் நன்கு அறிமுகமான நண்பரான அஜய் விக்கி(25) தனது காரில் சென்றார். அப்போது, தலைமை காவலர் ரவியை பார்த்து, நான் லைட் அவுஸ் பக்கம்தான் செல்கிறேன் உங்களை டிஜிபி அலுவலகத்தில் இறக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஒரே தெருவை சேர்ந்தவர் மற்றும் நண்பர் என்பதால் உளவுத்துறை தலைமை காவலர் ரவி, அஜய் விக்கியின் காரில் சென்றார். அப்போது, காரில் 2 மர்ம நபர்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது உளவுத்துறை தலைமை காவலர் ரவியின் தண்டுவடத்தில் சுருக்கென்று குத்தியது. தன் முதுகை திரும்பி பாப்பதற்குள், ரவி மயக்கமாகி காரிலேயே சாய்ந்தார். இந்நிலையில், காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 2 பேர் ரவிக்கு போதை ஊசி போட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. பிறகு அதே காரில் ரவியை மயக்க நிலையிலேயே சோழிங்கநல்லூர், திருவான்மியூர், ஓஎம்ஆர், அண்ணாசாலை என சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு 18 மணி நேரம் கடத்தி சென்றுள்ளனர். அதற்குள், உளவுத்துறை காவலர் ரவியின் வங்கிக் கணக்கில் இருந்து  1 லட்சத்தை தங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிட்டுள்ளனர். தங்கள் வேலை முடிந்ததால், உளவுத்துறை காவலர் ரவியை, நள்ளிரவில் அடையார் அருகில் சாலையில் அரை மயக்கத்தில் கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். மயக்கம் தெளிந்த தலைமை காவலர் தனது செல்போனை பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுல் பே மூலம் 1 லட்சம் பணத்தை அஜய் விக்கி மற்றும் அவரது 2 நண்பர்களும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டு விட்டது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை காவலர், ஆட்டோவில் ஏறி நேற்று முன்தினம் நள்ளிரவு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராமியிடம் புகாராக கொடுத்துள்ளார்.உளவுத்துறை தலைமை காவலர் ரவியின் புகாரின் படி சூளைமேடு போலீசார் சூளைமேடு பஜனை கோயில் அருகே காரில் ஏறியது, அடையார் பகுதியில் சாலையில் வீசிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை காரில் கடத்திய 15 ஆண்டுகால நண்பரான அஜய் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக இருந்து வருகின்றனர். அதேநேரம் புகார் அளித்த மாநில உளவுத்துறை தலைமை காவலர் ரவி மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த புகார் அளிக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என்று புகார் அளித்த உளவுத்துறை தலைமை காவலர் ரவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில உளவுத்துறை தலைமை காவலர் ஒருவரை சக நண்பர்கள் காரில் கடத்தி 1 லட்சம் பறித்து சென்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_41897220.jpgபோதை ஊசி போட்டு உளவுத்துறை காவலரை காரில் கடத்தி 1 லட்சம் பறிப்பு: சென்னையில் 18 மணி நேரம் சுற்றிய வாகனம்: மயக்கத்தில் இருந்தவரை சாலையில் வீசி சென்றனர்


சென்னை: பதவி உயர்வு வழங்காத விரக்தியில் விருப்ப ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி தமிழக அரசிடம் 1 கோடியே ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.எப்.எஸ் அதிகாரியான ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1981ம் ஆண்டு உதவி வன பாதுகாவலராக பணியில் சேர்ந்தேன். 1989ல்  இந்திய வனப்பணியில் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றினேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2008ம் ஆண்டு அயல்பணியில் நியமிக்கப்பட்டேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் உரிய தகுதி பெற்றும் தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, பதவி உயர்வு கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.  கடுமையான மன உளைச்சலின் காரணமாக அதே ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன்.பல கட்ட போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2020 பிறப்பித்த உத்தரவில் 2013ம் ஆண்டு முன்தேதியிட்டு என்னை தலைமை வன பாதுகாவலராக நியமித்து அரசாணை வெளியிட்டது. ஆனாலும் இதுநாள் வரை ஓய்வு கால பலன்களையும் தரவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கும், தொந்தரவுகளுக்கும், மன உளைச்சலுக்கும் இழப்பீடாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ரவி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான சங்கர், மோகன் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_79998416.jpgபதவி உயர்வு தராததால் விருப்ப ஓய்வு பெற்ற வனப்பணி அதிகாரி இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மேலும் 5 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பரவி வருவதையடுத்து சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அறியலாம். அதேவேளையில், வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டு தான் அறிந்து கொள்ள முடியும். ரேபிட் கிட் எனப்படும் துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாகவும், எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் கண்டறியலாம். இந்நிலையில் நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் பிசிஆர் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன. அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் 214 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 212 பிசிஆர் உபகரணங்கள் என மொத்தம்  426 உபகரணங்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_88381595.jpgகொரோனா பரிசோதனை செய்ய மேலும் 5 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கதுனியாவுக்கும், ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திரா ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சுமித் அந்தில் சாதனை தனிச்சிறப்பானது: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சுமித் அந்தில் சாதனை தனிச்சிறப்பானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்று பொன்னான நாளாக அமைந்திருக்கிறது. ஈட்டி எறிதலில் ஒரே நிகழ்வில் மூன்று உலக சாதனை எறிதல்களுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள சுமித் அன்டிலுக்கு எனது பாராட்டுகள். அவரது சாதனை உண்மையிலேயே தனிச்சிறப்பானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_17759342.jpgபாரா ஒலிம்பிக்கில் பதக்கம்: இந்திய வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு


சென்னை: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார். வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வீடுகளுக்கு கைபம்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தினை முதல்வர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து  சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி  ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி  ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய ஏரி ஆதாரங்கள் / ஏரிகளைப் புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு,  மறு பயன்பாடு, ஆழ்துளை கிணறு மீள் நிரப்புதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  மேலும், குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், திரை அரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைப்பதற்கும்,  ஏற்கனவே உள்ள மழைநீர் கட்டமைப்புகள் புனரமைப்பு  செய்வதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்த இந்த விழிப்புணர்வு வாகனத்தில் ஓட்டு வீடுகள் மற்றும் கான்கிரீட் தள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான விவரங்கள், வரைபடங்கள், நீரினை குறைவாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கு ‘தண்ணீர் தன்னார்வலர்கள்’ குழு மகளிர் சுயஉதவிக் குழுவினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே கலந்துரையாடி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக 200 பணிமனைகளில் தலா 2 உதவி மையங்கள் வீதம் மொத்தம் 400 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி மையத்திற்கு 5 மகளிர் சுயஉதவிக் குழுவினர் வீதம் 400 உதவி மையங்களில் 2,000 உறுப்பினர்கள்  சென்னை மாநகராட்சியில் உள்ள 35,000 தெருக்களுக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெரிவிப்பார்கள். மகளிர் சுயஉதவிக் குழுவினர் குடிநீர் / கழிவுநீர் பற்றிய குறைகள் மற்றும் நீரில் உள்ள திடப்பொருட்களின் அளவு ஆகியவற்றை தெருக்கள் வாரியாக கேட்டறிந்து, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவார்கள்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_34313602.jpgமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு: குடிநீர் பாதுகாப்பு வாரம் முதல்வர் தொடங்கி வைத்தார்


சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,523 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 21  பேர் உயிரிழந்துள்ளனர்  என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து  மக்கள்  நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று   1,523 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 26,13,360 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை  மற்றும் வீட்டுத்தனிமை  என 17,085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று ஒரே நாளில் மட்டும்  1,739 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின்  மொத்த எண்ணிக்கை 25,61,376 ஆக  உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்த 21 பேர் நேற்று  உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், சென்னையில் 1 பேர் என நேற்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  34,899 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று  புதிதாக 183 பேர், கோவையில் 188 பேர், ஈரோடு 129 பேர்  என 3 மாவட்டங்களில்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மற்ற மாவட்டங்களில்  பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_78576297.jpgதமிழகத்தில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு


சென்னை: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று சந்தித்தார். அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம்,  வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப்பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ், துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_31_2021_89835758.jpgபெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி
செஞ்சியில் கொடூர சம்பவம்: குழந்தையை தாக்கிய தாய் 15 நாள் சிறையில் அடைப்பு: காதலனை பிடிக்க சென்னையில் வலை https://ift.tt/2YcpBO3
தமிழகம் முழுவதும் நாளைக்குள் 100 சதவீத ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் https://ift.tt/3BkCO5u
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் https://ift.tt/3Buji6X
சோலையாறு வெள்ளத்தில் மூழ்கி சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் பலி https://ift.tt/3kTIWeL
தர்மபுரி அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன் விஷம் குடித்து பெண் இன்ஜினியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா https://ift.tt/3mIjjQs
திண்டுக்கல் அருகே வினோத நோயால் குழந்தை தோற்றத்தில் 25 வயது பெண்: மருத்துவ செலவுக்கு உதவ தந்தை கோரிக்கை https://ift.tt/3gNuMKJ
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை மேம்படுத்தும் பணியை கிடப்பில் ேபாட்ட அதிமுக அரசு: 4 ஆண்டுக்கு பிறகு பாம்பு கடி மருந்து தயாரிக்கும் ஆய்வு விரைவில் தொடக்கம்: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் நடவடிக்கை https://ift.tt/3gLcXMo


சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,538 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,11,837 ஆக உயர்ந்துள்ளது. 17,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,753 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 34,878 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று புதிதாக 189 பேர், செங்கல்பட்டு 116 பேர், கோவையில் 209 பேர், ஈரோடு 132 பேர், சேலம் 113 பேர் என 5 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_30_2021_73057193.jpgதமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழப்பு


சென்னை: கோயில்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களை, நவீன தொழில்நுட்பத்துடன் நிலஅளவை மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, அனைத்து கோயில்களிலும் கண்டறியும் குழு மற்றும் பரிசீலனைக்குழு அமைக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஜிஐஎஸ் மேப்பிங் பணியினை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் வழங்கிய கருத்துரை அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்களை கொண்டு அனைத்து நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளலாம்.எனவே, நில அளவீடு பணியை விரைவில் முடிக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்கள் மண்டலம் தோறும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். எனவே, பணிகள் மேற்கொள்வது பற்றி விவரத்துடன் கூடிய செயல்முறை உத்தரவு மண்டல இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு நகல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.மேலும், கோயில் நில ஆவணங்களை நில அளவையர்களுக்கு அளிக்க தயார் நிலையில் அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். ஒரு குழுவிற்கு மூன்று புல உதவியாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிதி வசதி இல்லாத கோயில் நிலம் தொடர்பான இப்பணிக்கு நிதிவசதி மிக்க கோயில் மூலம் ஊதியம் வழங்கிட இணை ஆணையர்களே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்களை தங்களது மண்டலத்தில் ஒரே இடத்தில் அதிக பரப்பளவு அமைந்துள்ள கோயில் நிலங்களில் இப்பணியினை குரூப்பிங் செய்து முதலில் துவக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்கள் கோயில் நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்து எல்லைக்கற்களை நட்டு வரைபடம் தயார் செய்ய வேண்டும். மேலும், முடிக்கப்பட்ட நில அளவை பணிகள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_30_2021_43699283.jpgநவீன தொழில்நுட்பத்துடன் நிலஅளவை மேற்கொண்டு நிலங்களின் எல்லைகள் நிர்ணயித்து வரைபடம் தயாரிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
மதுரையில் பறக்கும் பாலம் இடிந்து விழுந்தது அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: பணிகளை நிறுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு https://ift.tt/3zwjHVJ


சென்னை: கல்லூரி  முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார துணை  இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், செப்டம்பர் 1ம்  தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க  வேண்டும். அதைப்போன்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை  இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு  மேலாகவும், தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு மேலாகவும் போலியோ நோய் இல்லாமல்  உள்ளது. ஆனால் அண்டை நாடுகளில் போலியோ நோய் உள்ளது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடல், சாலை, ரயில், விமானம் என எந்த மார்க்கத்தில்  இருந்து வந்தாலும் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி கட்டாயம் அளிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_8_30_2021_80732364.jpgமாணவர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட சுகாதார துணை இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை