ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


சென்னை: அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில்: அசாமைச் சேர்ந்த 54 வயதான ஒரு பெண், இடது தொடை எலும்பு முறிவுக்கு ஆளானார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறிய காயத்தால் அவதிப்பட்ட அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்  கடந்த 13ம் தேதி சேர்க்கப்பட்டார். பரிசோதனை மற்றும் பயாப்ஸி ஆகியவற்றின் மூலம் அவருக்கு மெட்டாஸ்டேடிக் இடது சிறுநீரக செல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிறுநீரகத்தில் புண்ணை உண்டாக்குவதாகும். இது ஒரு வகை மெட்டாஸ்டாஸிஸ் ஆகும். இதில் அசல் அல்லது முதன்மை கட்டியிலிருந்து உருவாகும் புற்றுநோய் செல்கள் உடலில் பயணித்து உடலின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான புதிய கட்டிகளை மெட்டாஸ்டேடிக் கட்டிகள் உருவாக்கும். தொடை எலும்பிலும் அவருக்கு கட்டி இருந்தது. எங்கள் மருத்துவர்கள் குறைந்தபட்ச துளையிடல் சிகிச்சை முறைகள் மூலம் கட்டியை அகற்ற திட்டமிட்டனர். அவரை மீண்டும் நடக்க வைக்கும் வகையில் சிகிச்சை முறைகளைத் தொடங்கினர்.மேலும் ஒரு புதிய முயற்சியாக ஒரே நேரத்தில் நோயாளிக்கு இரண்டு சிகிச்சை நடைமுறைகளைச் செய்தனர். இரண்டு நடைமுறைகளும் ஆறு மணி நேரத்தில் முடிக்கப்பட்டன. கட்டி இருந்த முழங்கால் மூட்டு பரந்த விளிம்புகளுடன் அகற்றப்பட்டு மெகா புரோஸ்தெசிஸ் சிகிச்சை மூலம் அது மாற்றப்பட்டது. அந்நோயாளிக்கு அதே நேரத்தில் லேப்ரோஸ்கோபிக் ரேடிக்கல் நெப்ரெக்டோமி சிறுநீரகத்தை அகற்றுதல் மேற்கொள்ளப்பட்டது. இது அதே அமர்வில் அடிவயிற்றில் 3 சிறிய 5 மில்லி மீட்டர் துளைகள் இடப்பட்டு மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முறைக்குப் பிறகு அடுத்த நாளே நோயாளி நடக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவர் நடந்தார். உள் பரவல் இருப்பது சிடி ஸ்கேனில் கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறந்த சிகிச்சை மற்றும் நோயாளி விரைவில் குணம் அடைவதற்காக விரிவான உள் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். மேலும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில்: மல்டிமோடல் எனப்படும் பல்நோக்கு செயல்முறை மேலாண்மையால் மட்டுமே இது சாத்தியமாகும். இதில் ஒவவொரு துறைகளிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்கின்றனர். புற்றுநோயியல் சிகிச்சையில் சிறந்த விளைவுகளை அடைய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_54444522.jpgமெகாபுரோஸ்தெசிஸ் தொடை எலும்பு மாற்று சிகிச்சை, லேப்ரோஸ்கோபிக் நெப்ரெக்டோமி சிகிச்சை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே அமர்வில் பல்நோக்கு செயல்முறை அறுவை சிகிச்சை: அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம் சாதனை


சென்னை: தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்திட ஏதுவாக 100 கோயில்களை தேர்வு செய்த விரைந்து திருப்பணிகளை முடித்து இந்நிதியாண்டிற்குள் குடமுழுக்கு நடத்திட வேண்டும்.அதன்படி ரூ.10 லட்சம் மேல் வருமானம் வரும் 10 பெரிய கோயில்கள், ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சம் வருமானம், ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வருமானம் வரும் 40 கோயில்கள், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் வரும் 50 கோயில்கள் என மொத்தம் 100 கோயில்களை தேர்வு செய்து தருதல் வேண்டும். அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து, திருப்பணிகள் செய்ய தயார் நிலையில் உள்ள கோயிலின் பட்டியலை இக்குறிப்புகள் கிடைத்த 3 நாட்களுக்குள் தவறாறு அனுப்பிடல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_87961978.jpgஅறநிலையத்துறை தகவல் 100 கோயில்கள் திருப்பணிக்கு தேர்வு


சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பரிந்துரை அளிக்கும். சுற்றுலாத்துறை தொடர்பாகவும், அதனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தயாராவது தொடர்பாக இன்று (1ம் தேதி) முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன். தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா இடங்களை மக்கள் ரசிக்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, பூம்புகாரைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தையும் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை செயலியை மேம்படுத்தி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_69544620.jpgவள்ளுவர் கோட்டம் பொலிவு பெறுகிறது: அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி கோவை, சூலூர் விமானப்படை தளத்தில் டிரோன் பறக்க தடை: மீறினால் சுட்டு தள்ள உத்தரவு https://ift.tt/3x9lXkE
சிறைக்குள் கொலையான கைதியின் உடலை நாளை மாலைக்குள் பெறாவிட்டால் இரவில் மாவட்ட நிர்வாகமே இறுதிசடங்கு: ஐகோர்ட் கிளை அதிரடி https://ift.tt/364FoPG


சன் டி.வி. நிதி உதவியால் சென்னை தண்டையார்பேட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் நிறைவேற்றப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தண்டையார்பேட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக, வேர்ல்டு விஷன் இந்தியா அமைப்புக்கு 2019-ம் ஆண்டு சன் டி.வி. ஒரு கோடியே 57 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியது. இந்த நிதி உதவியின் மூலம் அந்தப் பகுதியில் 9 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 6 பொதுக் கழிப்பிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவற்றை சன் டி.வி. நெட்வொர்க் சார்பில் காவேரி கலாநிதி மாறன் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சோனி தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சத்தியவாணி முத்து நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சன் டி.வி. அளித்த நிதி உதவி மூலம் வேர்ல்டு விஷன் இந்தியா மேற்கொண்டுள்ள பணிகளுக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். கூவம் நதியை ஒட்டி இப்பகுதி அமைந்துள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு, மருத்துவ ஆலோசனை ஆகியவை அளிக்கப்படுவதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. தங்கள் பகுதியின் மேம்பாட்டுக்காக சன் டி.வி. ஆற்றி வரும் பணிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_49680728.jpgசன் டி.வி. நிதி உதவியால் நிறைவேற்றப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்பு


சென்னை: கடந்த 1976ல் ‘ஓ மஞ்சு’ என்ற படத்தில் அறிமுகமானவர் கவிதா (வயது 55). தொடர்ந்து ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘அந்தமான் காதலி’, ‘இதயம் திரையரங்கம்’, ‘நாரதன்’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவலுக்கு பிறகு படப்பிடிப்பில் பங்கேற்காமல், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.இந்நிலையில், கடந்த மாதம் கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 16ம் தேதி சாய் ரூப் மரணம் அடைந்தார். தசரத ராஜுவின் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த 14 நாட்களில் கணவரையும் பறிகொடுத்த கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_95040530.jpgநடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜ் கொரோனாவுக்கு பலி


சென்னை:  இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இந்தியன்  2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். அதேநேரம், இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_54217166.jpgஇந்தியன் 2 படம் தயாரிப்பு விவகாரம் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட் உத்தரவு


சென்னை: பாகுபலி படத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம், ஆர்ஆர்ஆர். இப்படத்தின் போஸ்டர் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் பைக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றது. இதைப் பார்த்து தெலங்கானா மாநிலம் சைபராபாத் டிராபிக் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஹெல்மெட் அணியச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்களே இப்படி செய்யலாமா என்று நினைத்த அவர்கள், போட்டோஷாப் டெக்னாலஜி மூலம் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோருக்கு ஹெல்மெட் அணிவித்து, உடனே அந்த போஸ்டரை சைபராபாத் டிராபிக் போலீஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இச்சம்பவம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆர்ஆர்ஆர் படத்தின் கதை இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கிறது. அப்போது ஹெல்மெட் கட்டாயம் இல்லை என்பதாலேயே இக்காட்சி வெளியிடப்பட்டது என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மேலும், பைக்கில் நம்பர் பிளேட் இல்லை என்பதையும் படக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_85929508.jpgபோட்டோஷாப்பில் நடிகர்களுக்கு ஹெல்மெட் மாட்டிய பலே போலீஸ்: படக்குழுவினர் விளக்கம்


சென்னை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (வயது 98), கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஜூன் 6ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது 100 சதவிகிதம் கொரோனோ நோயாளிகள் இல்லாத மருத்துவமனை. திலீப் குமாருக்கு கொரோனா தொற்று இல்லை. நுரையீரலில் ஏற்பட்டுள்ள நீர்க்கோர்ப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாக சிகிச்சை அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், திலீப் குமாருக்கு நேற்று கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இம்முறையும் அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடவில்லை.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_24135989.jpgபழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


சென்னை: திருவல்லிக்கேணி அயோத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) சுதேசி(27). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மெரினா கடலில் மீன் பிடிக்க இயந்திரம் பொருத்தப்பட்ட படகில் சென்றார். பின்னர் மீன் பிடித்துக்கொண்டு நேற்று காலை விவேகானந்தர் இல்லம் எதிரே படகின் மூலம் கரையை கடக்க முயன்றனர். அப்போது அலையின் வேகத்தால் படகில் இருந்து எதிர்பாராத விதமாக சுதேசி கடலில் விழுந்தார். இதில் படகின் இயந்திர துடுப்பில் சிக்கிக்கொண்டார். இதில் அவரது வலது காலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக படகில் இருந்து மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆட்டோ மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://ift.tt/3qzfVY4 படகில் சென்றபோது துடுப்பில் சிக்கி மீனவர் பலி


சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் 20% தள்ளுபடியுடன் கூடிய கியூஆர் குறியீடு பயணச்சீட்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 21ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசம் சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி குறித்த X குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காக தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புக் கேமரா மூலம் பயணிகளின் தனிமனித இடைவெளி கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 20% கட்டணத் தள்ளுபடியுடன் தொடர்பு இல்லாத கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மின்தூக்கியை தொடுதலின்றி காலால் இயக்கும் கருவி மற்றும் கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களை இயக்க கைகளை பயன்படுத்தாமல் காலால் இயக்கும் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_62833804.jpgமெட்ரோ ரயில் நிலையங்களில் 20 சதவீத தள்ளுபடியுடன் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு: பயணிகளை கண்காணிக்க குழு


சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளர் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கடந்த மே 1ம் தேதி முதல் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளர் பிரிவு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் இந்த மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்ட சித்தா கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 500 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மையத்திற்கு வரும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இன்று முதல் குறைந்த பட்ச செயல்பாட்டுடன் அரசு அறிவுறுத்திய கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி மறுபடி துவங்கப்படும். முதியோர்கள், குழந்தைகள் மற்றும் இணைநோயுடையோர் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்த்தல் நல்லது. அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் ஆகியவை, அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் மூலம் வெளிநோயாளர் பதிவு அட்டைகளை புதுப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_4761905.jpgதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படும்: இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தகவல்


சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி  தலைமையில் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் பட்டா மாற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்களின் நிலை, இணைய வழி சாதி, இருப்பிட சான்றிதழ், பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் வழங்குதல், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் ஆகியவை குறித்து கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால் சரியாக பதில் அளிக்கவும் நிலுவையில் உள்ள மனுக்களை அடுத்து ஆய்வு கூட்டத்திற்குள் குறைக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுதாரர்களுக்கு தாக்கீதுகளை வழங்கவும் மேற்படி மனுதாரர்களை விசாரணை செய்து ஆவணங்களை பெற்று வெள்ளிக்கிழமை அன்று தகுதியான நபர்களுக்கு பட்டாக்களை வழங்கிடவும் நிலவரி திட்ட தனி வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர் (நில அளவை) இருவரும் அதிக மனுக்கள் நிலுவையில் உள்ள வட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. நிராகரிக்கப்பட்ட பட்டா மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. நிரந்தர நில பதிவேடுகளை கணினி மயமாக்கும்பொழுது ஏற்படும் கணினி தட்டச்சு பிழைகளை சரிசெய்யும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உள்ளது. கோப்புகளை சம்பந்தப்பட்ட வட்டத்திற்கு சென்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும், கலெக்டர் வாட்ஸ்அப்பில் பகிரும் செய்திகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_31716556.jpgமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்கான ஒரே மருந்தின் விலை ரூ.16 கோடி. இந்த மருந்தை, குழந்தை 2 வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார்.2 வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற,உ.பி.யை சேர்ந்த இஷானி என்ற குழந்தைக்கு, சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்து, எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாகத் தருவதாக அறிவித்து இருக்கின்றது. அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து மருந்தை, தமிழ்நாட்டு குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத் தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_40560550.jpgஅரிய வகை நோய்க்கான மருந்தின் விலை ரூ.16 கோடி தமிழக குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்


சென்னை: தமிழகமே தாய் வீடு என பணி நிறைவு விழாவில் முன்னாள் டிஜிபி திரிபாதி உருக்கமாக பேசினார். தமிழக காவல் துறை இயக்குநராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு தமிழக காவல் துறை சார்பில் பணி நிறைவு விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. டிஜிபி திரிபாதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இதில் கலந்து கொண்டார். அவருக்கு காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். டிஜிபி சைலேந்திர பாபு அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். காவல் துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, டிஜிபி திரிபாதிக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் துறை செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி பேசியதாவது: 1985ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, தமிழக பணி ஒதுக்கப்பட்டு, 36 ஆண்டுகளாக நான் பல பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளேன். எனது காவல் பணியை இன்று சிறப்புற நிறைவு செய்ய வழிவகை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு என் சார்பிலும், எனது குடும்பத்தாரின் சார்பிலும் தாழ்மையான வணக்கங்களையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடிசா மாநிலத்தில் பிறந்து, புதுதில்லியில் எனது படிப்பினை மேற்கொண்டு 1985ம் ஆண்டு தமிழகத்திற்கு பணி நிமித்தமாக வந்த எனக்கு, இன்று தமிழகமே எனது தாய் வீடு என்ற அளவில் எனது குடும்பமும், பிள்ளைகளும் இங்கேயே வளர்ந்து, இங்கேயே பல பணிகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் தொடந்து தமிழகத்திலேயே இருந்து என்னால் முடிந்த பணிகளை காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

https://ift.tt/3ybmGlg ஆண்டுகள் மனநிறைவுடன் பணியாற்றி ஓய்வுபெறுகிறேன் தமிழகமே எனது தாய் வீடு: பணி நிறைவு விழாவில் முன்னாள் டிஜிபி திரிபாதி உருக்கம்


சென்னை: பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு தமிழக அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.தமிழ்த் திரையுலகில் மிகப்பிரபலமாக  விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதர்  மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_88404483.jpgதமிழக அரசு சார்பில் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு குடியிருப்பு, ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா நிவாரண நிதி ரூ.25 லட்சம்: முதல்வரிடம் கோவை தங்கம் வழங்கினார் https://ift.tt/3dvnKZs
திருவாரூர் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலில் கச்சா எண்ணெய் பரவியது: நெல் விதைத்த 1 ஏக்கர் நிலம் சேதம் https://ift.tt/2UJeyKn


சென்னை: தமிழகத்தில் நேற்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,62,622 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,506 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,79,696 ஆக உள்ளது. இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து நேற்று 5,537 பேர் நேற்று குணடைந்தனர். அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 79 பேர் அரசு மருத்துவமனைகளையும் சேர்ந்தவர்கள். மேலும், மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 32,619 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறனர். நேற்று 23 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்திருந்தது. சென்னையில் பாதித்தோரின் எண்ணிக்கை 257 ஆக குறைந்துள்ளது. இதேபோல், அதிகபட்சமாக சென்னையில் 15, கோவையில் 12 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல்,  நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_61654300.jpgதமிழகத்தில் 4,506 பேருக்கு கொரோனா


சென்னை: எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வீரேந்திர ராவத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் மையங்களில் சென்சாரை மறைத்து ரூ.70 லட்சம் வரை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம், எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தனிப்படை அமைத்து ஆவணங்களை திரட்டி விசாரணை மேற்கொண்டனர். அதில் வடமாநில கொள்ளையர்கள் சென்னையை குறி வைத்து  பல லட்ச ரூபாய் கொள்ளையடித்தது  தெரியவந்தது.தொடர்ந்து ஏடிஎம் கொள்ளையர்கள் அரியானாவில் இருப்பது தெரியவந்தது. அதன்படி போலீசார் அரியானா விரைந்து, கடந்த 23ம் தேதி அரியானாவில் அமீர் என்ற கொள்ளையனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமீரின் கூட்டாளியான வீரேந்தர ராவத்தையும் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மேலும் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்புள்ளது, வேறு எங்கெங்கு இதுபோன்று குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதெல்லாம் குறித்து விசாரிக்க, வீரேந்திர ராவத்தை 7 நாள்  போலீஸ் காவலில் எடுக்க தரமணி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது, வீரேந்திர ராவத்தை ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி,  வீரேந்தர் ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_9190006.jpgஎஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளையனுக்கு 4 நாள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர்.ஆர்.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் நேற்று வெளியிட்டார். தமிழக ஆளுநரும், பெரியார் பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர்.ஆர். ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன்நாதன் 39 ஆண்டுகள் கற்பித்தலில் பணியில் அனுபவம் பெற்றவர். இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், வேளாண் வானிலை மற்றும் குறிப்பிட்ட இடத்தின் வானிலை குறித்த ஆராய்ச்சித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஆராய்ச்சியில் பரந்த அனுபவம் உள்ள இவர் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளை அறிவியல் சார்ந்த இதழில் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவிலான நிகழ்வுகள் மற்றும் 5 சர்வதேச ஆராய்ச்சி நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார். தேசிய அளவில் நடந்த கருத்தரங்கில் 7 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். ரூ.764 கோடி மதிபிலான 8 ஆராய்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். 14ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இவர் மூலம் ஒரு காப்புரிமையும், 2 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_14820499.jpgபெரியார் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமித்து ஆளுநர் உத்தரவு


சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று காலை சென்றார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அண்ணாவின் பெயரில், அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல்முறையாக நேற்று காஞ்சிபுரம் சென்றார்.  காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டு, பார்வையாளர்கள் குறிப்பேட்டில் தனது வருகையை பதிவு செய்தார். அதில், மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்... இது பேரறிஞர் அண்ணாவின் அறிவுரை. அவர் வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும் என்பதை உறுதி ஏற்கிறேன்,  நன்றி என எழுதி கையெழுத்திட்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக 6வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருந்தேன். கொரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கு இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அதற்கான வாய்ப்பு இன்றைக்குத்தான் எனக்கு கிடைத்தது. எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்துகிறேன்.“மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அறிவுரையை தம்பிமார்களுக்கு அவர் எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தவர். அதை நினைவுப்படுத்தி, “அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நான் அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன் என்றார். .ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று அவருடைய பெயரில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டது, இந்த ஆட்சிக்காலத்திலும் அதுபோன்று தொடர்ச்சியாக அரசுத் திட்டங்களுக்கு அவர் பெயர் வைக்கப்படுமா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறபோது, நீங்கள் எதிர்பார்ப்பது போல அந்த செய்திகள் எல்லாம் வரும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழக முதல்வருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள்  க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் இருந்தனர். முன்னதாக காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, எஸ்பி எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி மா.சத்யபிரியா, எஸ்பிக்கள் ராணிப்பேட்டை ஓம்பிரகாஷ் மீனா, காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர்.சுதாகர் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். * கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.* ‘‘மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற அறிவுரையை பேரறிஞர் அண்ணா எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தார். * அந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_7_1_2021_96543521.jpgதமிழக பட்ஜெட்டில் அண்ணா பெயரில் நலத்திட்டங்கள்: காஞ்சி அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செய்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து. தமிழகத்தில் புதிய தொழில்சாலைகள் அமைப்பது குறித்து கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், டாடா மற்றும் டிரண்ட் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் நோயல் டாடா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வோல்டாஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பிரதீப் பக்‌ஷி, டிரண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (நிதி) பி.வெங்கடேசலு, டாடா பன்னாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆனந்த் சென் மற்றும் டாடா குழும உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். அதேபோன்று, சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் (தென்மேற்கு ஆசியா) கென் காங் சந்தித்து பேசினார். அப்போது பெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குநர் பியாங் ஜின் காங், முதுநிலை துணை தலைவர் மனு கபூர், இயக்குநர் (அரசு விவகாரங்கள்) எஸ்.கண்ணன் மற்றும் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_56287784.jpgபுதிய தொழிற்சாலைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டாடா நிறுவன அதிகாரிகள் சந்திப்பு


சென்னை:  தமிழக அரசு நேற்று வெளிட்ட அறிக்கை:  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், தற்போது 13,41,494 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்த வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 18-2-2016ல் முடிவடைந்தது. இந்நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாரியம் திருத்தியமைக்கப்படவில்லை. கலைஞரின் வழியில் செயல்படும் இந்த அரசு, பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் கட்டுமான தொழிலாளர்களின் நலனை பேணுவதற்காக அனைத்து தரப்பு வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை கொண்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாறே பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமாருடன், அரசு பிரதிநிதிகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி, பொதுப்பணி ஆகிய துறைகளின் கூடுதல் தலைமை செயலாளர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளின் முதன்மை செயலாளர்கள், தொழிலாளர் ஆணையர், இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஒன்றிய அரசின் மண்டல தொழிலாளர் ஆணையரும்; வேலையளிப்போரின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளின் முதன்மைப் பொறியாளர்களும், இயக்குநர், நகராட்சி நிர்வாக துறை ஆகியோருடன் கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் பதம் துகார், இந்திய கட்டிட வல்லுநர் சங்கம் மாநில தலைவர் சிவகுமார், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென் பிராந்திய தலைவர் எல்.சாந்தகுமார்,  எம்.கே.எம்.எஸ்.கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் ஷாஜகான் சேட் ஆகியோரும்; உடலுழைப்பு தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக தர்மபுரி, நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க நிறுவனத்தின் துணை பொதுச் செயலாளர், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் செயற்குழு உறுப்பினர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மாநில செயலாளர், அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரசின் மாநில தலைவர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சங்கத்தின் உறுப்பினர், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில பேரவை அமைப்பாளர் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பர்.அதிமுக ஆட்சியில் கோமா நிலையில் வாரியம்சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொன்குமார் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் இந்த 10 ஆண்டுகளில் 17 வாரியங்கள் கோமா நிலையை அடைந்து விட்டது. எந்த செயல்பாடும் இல்லை. 60 வயது ஆனால் ஒய்வு பெற்றவர்களுக்கு வாரியத்தில் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். ஓய்வூதியம் கேட்டு 3 ஆண்டு, 4 ஆண்டு காத்திருந்து மரணம் அடைந்வர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசமான நிலை இருக்கிறது.  இன்றைக்கு தொழிலாளர் திறனை மேம்படுத்துவதற்கு, படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க கட்டுமான உயர் பயிலகம் என்ற அமைப்பை, 2010ல் கலைஞர் என் தலைமையில் தொடங்கி வைத்தார். வாரியத்தில் இருந்து ரூ.50 கோடியில் செங்கல்பட்டில் 25 ஏக்கர் நிலத்தில் அந்த அகடாமி உருவாக்கப்பட்டது. இன்றைக்கு அந்த அகடாமி அப்படியே முடங்கி கிடக்கிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_17258853.jpgகட்டுமான தொழிலாளர் நல வாரியம் திருத்தியமைப்பு தலைவராக பொன்குமார், உறுப்பினர்கள் நியமனம்: முதல்வர் அறிவிப்பு


சென்னை: நகர பேருந்துகளில் (டவுன் பஸ்) புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்  தெரிவித்தார். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பேருந்துகளில்  திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதற்கான தெளிவுரையும் இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் 6,262 பேருந்துகள் சாதாரணமானவை. இதில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம். நகர பேருந்துகளில் புதிய வண்ணம்  பூச நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை  எடுக்கப்படும்.தமிழக அரசு 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் வாங்க ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோது, 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. 27  மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின்  எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ரூ.31,000 கோடி நஷ்டம்அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு மொத்தம் ரூ.31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்துதுறைக்கு நஷ்டம் உள்ளது. அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து  இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_57204837.jpgமுதல்வருடன் கலந்தாலோசித்து டவுன் பஸ்சில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்


சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் ஒன்றிய பாஜ அரசு ஆரம்பத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழக அரசு தடுப்பூசி போடுவதை மக்களியக்கமாக்கி வருகிறது. இதற்கு உதவ வேண்டிய ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளை உரிய காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைபட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்திய பின்னரும் ஒன்றிய அரசு பாரபட்ச அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்கள் உயிரோடு விளையாடுவது வன்மையாக கண்டிக்கதக்கது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_67402286.jpgகொரோனா தடுப்பூசி வழங்காமல் மக்கள் உயிரோடு ஒன்றிய அரசு விளையாடுகிறது: முத்தரசன் கண்டனம்


சென்னை: தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி அதனை யூடியூபில் பதிவு செய்து வந்தவர் மதன். இவர், ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடும்போது பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் சிறுவர், சிறுமிகள் பலர் பாதிப்படைந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக திட்டுதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதே போல்  மதன் யூடியூப் சேனலின் நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவையும் கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து கை குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கிருத்திகா ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரமசிவம் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு பேர் 1 லட்ச ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதே போல் பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது மதனை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சியங்களை அழித்து விடுவார். ஜாமீன் வழங்க வேண்டாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி பரமசிவம் தள்ளுபடி செய்தார்.

https://ift.tt/2UcIsq4 யூடியூபில் ஆபாச பேச்சு விவகாரம் பப்ஜி மதனுக்கு ஜாமீன் மறுப்பு; மனைவிக்கு ஜாமீன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு


* நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை * அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை 11 மணியளவில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, ஆணையர் குமரகுருபரன்,  கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் காவிரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.    இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் 3,500 கோடி அளவில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை பறிமுதல் செய்ததாகவும்,  8,700 இடங்களை ஆக்கிரமிப்பாளரின் பிடியில் மீட்டதாக எதிர்க்கட்சி தலைவர்  கூறுகிறார்.அப்படி கோயில் இடங்களை மீட்டிருந்தால் சிவகங்கையில் கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் மதிப்பிலான நிலத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஏன் நிறுத்தவில்லை. இன்றைய ஆட்சியை பொறுத்தவரையில் யார் தவறு செய்தாலும், கோயில் நிலத்தை யார் அபகரித்தாலும், அது யாராக இருந்தாலும் எப்படிபட்ட பதவியில் இருந்தாலும் அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் எந்தெந்த நிலத்தை,எந்தெந்த பகுதியில் எடுக்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்து, இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை சுவாதீனம்  செய்ததன் விளைவாக 50 நாள் ஆட்சியில் 79.5 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ரூ.520 கோடி ஆகும். இதை நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம். அதேபோல  எடப்பாடி தன் ஆட்சி காலத்தில் சுவாதீனம் செய்த சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்.  கடந்த  5 ஆண்டு ஆட்சியில் 1210 பேர் தற்காலிக பணியாளர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 200 முதல் 300 பேர் இந்த பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் அர்ச்சகர் முதல் கோயில் பணியாளர்கள் வரை யாரெல்லாம் பணிபுரிகிறார்களோ, அவர்கள் கட்சி பேதமின்றி  நிரந்தரமாக்கப்படுவார்கள். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல்வர் கையால் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.4 கோடி ஆவணம்டிஜிட்டல்கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களில் யாரெல்லாம் வாடகை தாரர்களாக இருக்கிறார்களோ அவர்களின் விவரங்களையும்  வெளியிடவுள்ளோம். 4 கோடி நிலங்களின் ஆவணங்களை முழுமையாக ஸ்கேன் செய்து அதை  டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம்.மாஜி அமைச்சரை காப்பாற்ற எடப்பாடி முயற்சிஅமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ‘‘40 ஆயிரம் பேருக்கு பணி வழங்குவதற்கான விவரங்கள் திரட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணியாளர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்க இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவர்களை அடையாளம் காட்டினால், பணியாளர்களாக ஏற்றுக்கொள்வோம். பணியாளர் நியமனத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது. தவறு வெளிப்படுமோ என்கிற அச்சத்தில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை காப்பாற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி முயற்சிக்கிறார். கோயில் பணியாளர் எண்ணிக்கை 1 லட்சம் தான் இருக்கும். நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் அவர் சொன்ன 40 ஆயிரம் பேர் எண்ணிக்கை கிடைக்கவில்லை. எனவே, எடப்பாடி கூறியது  உண்மைக்கு புறம்பான கருத்து. உண்மையிலேயே நடந்து இருந்தால் அவர்களின் பட்டியல் வெளியிட வேண்டும்’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_10085696.jpgகட்டிடம், நிலங்களின் வாடகைதாரரின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடிவு 50 நாட்களில் ரூ.520 கோடி கோயில் சொத்துக்கள் மீட்பு


சென்னை: பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக அரசு, இளம் வழக்கறிஞர் சமுதாயத்தினருக்கு கொரோனா பேரிடர் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்களுக்கும் உடனடியாக கொரோனா நிவாரண நிதியும், வாழ்வாதார நிதியும் வழங்க வேண்டும். மேலும், கொரோனா நோய் தொற்றுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_27338809.jpgவழக்கறிஞர்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை


சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கான பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது உற்பத்தி பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி ஆவின் பாலில் உற்பத்தி செய்யக்கூடிய 152 பொருட்கள் விரைவில் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_33100528.jpgதெற்காசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் விரைவில் ஏற்றுமதி: அமைச்சர் ஆவடி நாசர் தகவல்


சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு தேர்வை நடத்தலாம்.   சராசரி மாணவர்கள், அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமையை நிரூபிக்க, தேர்வு எழுதவே விரும்புவர். அவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கல்வித் துறை எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, ப்ளஸ் 2 தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்த விவகாரத்தில், மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக  விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_13666934.jpgபிளஸ் 2 மாணவர்களுக்கான இம்புரூமென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் சேர்க்கை தொடங்க கோரி வழக்கு: பல்கலைக்கழக மானியக்குழு பதில் தர ஐகோர்ட் உத்தரவு


சென்னை: வேட்பாளர்கள் தொடர்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ.க்களின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தேர்தல் தொடர்பான பல ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், தேவையான ஆவணங்களை மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அந்த ஆவணங்களை விரைந்து வழங்குவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_63303775.jpgவேட்பாளர்களின் ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


* புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றம்* உதவிய சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணைசென்னை: நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி(36) கொடுத்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சைதா ப்பேட்டை சிறையில் அடைக்கப் பட்டார்.  இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவரது அறையில் ஏசி, சோபா, செல்போன், சொகுசு மெத்தை உள்ளிட்டவை பயன்படுத்தி வருவதாக சிறைத்துறையின் உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறைத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருந்த அறையில் சிறை விதிகளுக்கு முரணாக ஏசி, சோபா, மெத்தை, செல்போன் சார்ஜர் உடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. உடனே விஜிலன்ஸ் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், மணிகண்டன் அதிரடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மணிகண்டன் சிறையில் சொகுசாக இருப்பதற்கு லட்சம் ரூபாய் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் அறையில் யார் உத்தரவுப்படி ஏசி, சோபா வழங்கப்பட்டது குறித்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு மணிகண்டனுக்கு உதவிய சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதை போலவே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் சொகுசாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் காவலுக்கு மறுப்புசிறையில் உள்ள மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ளவும், ஆதாரங்களை கைப்பற்றவும் விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, போலீஸ் தரப்பில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, மணிகண்டன் தரப்பில் போலீஸ் காவல் தரக்கூடாது என்று வாதிட்டார். அரசுதரப்பில் வாதிடுகையில், அவரிடம் இருந்து போட்டோ, வீடியோ வைத்துள்ள லேப்டாப் போன்றவற்றை கைப்பற்ற வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனாம்பாள், போலீஸ் காவல் தர மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.அமைச்சர் ரகுபதி விளக்கம்அறந்தாங்கியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அளித்த பேட்டி: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஏசி வசதியுடன் இருப்பதாக வந்துள்ள செய்தி தவறானது. உண்மைக்கு புறம்பான செய்தி. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 3 தினங்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு சிறையில் ஏ கிளாஸ் கேட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனவே சட்டப்படி யாருக்கு என்ன சலுகைகள் கொடுக்க முடியுமோ, அதுதான் கொடுக்கப்படும். விதிகளுக்கு முரணாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_81835574.jpgநடிகை கொடுத்த பாலியல் வழக்கில் கைதானவர்: சைதை சிறையில் ஏர்கூலர், சோபா வசதியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை


சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள்  செய்யவும், குவாரி  மாபியாக்களையும் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம். 4 வாரங்களில் விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணையை தள்ளிவைத்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_31557864.jpgகுவாரி மாபியாக்களை கட்டுப்படுத்த சட்டவிரோத குவாரிகளில் சோதனை செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்


பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதி மக்களின்  நீண்ட கால கோரிக்கையை ஏற்று 108 ஆம்புலன்ஸ் சேவையை எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி இல்லாமல், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல அவதிப்பட்டு வந்தனர்.  மேலும், உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் பலர் உயிரிழந்தனர். இதனால், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில், திருத்தணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.சந்திரன் எம்எல்ஏ,  மாவட்ட கலெக்டரை அணுகி உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் 108 வாகன சேவையை எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதி மக்கள், கர்ப்பிணிகள் அவசர சிகிச்சை பெற வசதி ஏற்பத்தப்பட்டுள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் ஜோதிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, சி.ஜெ.சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

https://ift.tt/2UHEVjQ பள்ளிப்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


சென்னை: இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு 4 நாட்கள் பயணமாக இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டிணத்திலிருந்து சென்னை வந்தார். சென்னை பழைய  விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர், பாராளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குண்டு துளைக்காத காரில் ஏறி, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_57620.jpgகுடியரசு துணை தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகளின் கட்டுமானப் பணி துவங்கியது: 6 ஆண்டுகளில் முடிக்க திட்டம் https://ift.tt/2UQEOCN
இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட்டது ஏன்? புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விளக்கம் https://ift.tt/2Ud4aKy
பேக்கரி, பெயின்டிங் வேலை செய்கிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேட்டி https://ift.tt/360bCLR
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா மீது வழக்குப்பதிவு https://ift.tt/2TiMLAc


உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது. இதில், 76 குழந்தைகள் தங்கி படிக்கின்றனர். கடந்த 26ம் தேதி காப்பகத்தில் உள்ள 4 சிறுமிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது, 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், காப்பகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 4 சிறுமிகளுக்கு, மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, காப்பகத்தில் மீதமுள்ள குழந்தைகளுக்கு  கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. இதில்  13 சிறுவர்கள், 23 சிறுமிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 43 பேருக்கு தொற்று உறுதியானது. உடனே மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட 43 பேரையும் கடந்த 27 தேதி  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையறிந்ததும், அங்கு தங்கியுள்ள சிறுவர்களின் உறவினர்களில் சிலர், சிறுவர், சிறுமிகளை, தங்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேற்று முன்தினம், சிறுவர்கள் காப்பகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சமையல் அறை, தங்கும் அறை, கழிப்பறை உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, தொற்று பாதிக்காத  சிறுவர், சிறுமிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தார். மேலும், காப்பகம் முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, காப்பகத்துக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். அனைத்து சிறுவர்களும் குணமான பிறகு, காப்பகம் திறக்கப்படும் என தெரிகிறது. சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

https://ift.tt/3jseqsY பேருக்கு கொரோனா உறுதியானதால் தனியார் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டரிடம், அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். காஞ்சிபுரம் செவிலிமேடு, அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தியை, நேற்று நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை செவிலிமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.  இங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல இன்னல்கள் மற்றும் சாலை விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். மதுகடைக்கு பின்புறம் செவிலிமேடு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மது கடைக்கு அருகில் உயர்நிலைப்பள்ளி, மசூதி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. காஞ்சிபுரம்  செங்கல்பட்டு - வந்தவாசி கூட்டுச் சாலை சந்திப்பில்  மதுக்கடை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது.   இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், கல்லூரி, பள்ளி, வேலைகளுக்கு செல்ல மதுபான கடையை கடந்து செல்வதால் பல சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மதுக் கடையில் மது வாங்கும் குடிமகன்கள், சாலையோரத்தில் மது அருந்துவதால் பெண்கள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, அந்த சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என கூறப்பபட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_76549930.jpgசெவிலிமேட்டில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


வாலாஜாபாத்: வாலாஜாபத் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி, கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டு,  அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இணைய தளம்  மூலம் இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், ஆதரவற்ற விதவை சான்றிதழ் உள்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டன.  இந்த மனுக்களை பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டது.இதில் முதற்கட்டமாக 76 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா 16, பட்டா மாறுதல் 5, ஆதரவற்ற விதவை சான்றிதழ் 3, முதியோர் உதவித்தொகை 52 ஆகியவற்றுக்கான ஆவணங்களை, பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வாலாஜாபாத் தாசில்தார் உமா, முதியோர் உதவித்தொகை தனி தாசில்தார் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_72632999.jpgவாலாஜாபாத் ஜமாபந்தியில் 76 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம்  கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 10 ஏக்கர் பரப்பில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம்,  500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்தது. இதில், வீடுகள் கட்டி சிலர் வசிக்கின்றனர். இந்த மனைபிரிவின் முகப்பு பகுதி, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பிரதான சாலையோரம் கால்வாயை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. வீட்டு மனை நுழைவாயில், தடுப்பு சுவர், காம்பவுண்ட்,  ஆர்ச் ஆகியவை மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளது. இதனால், மழை காலங்களில், மழைநீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, கிராம பகுதியில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், மழைநீர் வடியக்கூடிய வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து நுழைவாயில் மற்றும் காம்பவுண்ட் கட்டியுள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து இருப்பது தெரிகிறது. இதனை,  உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்பையும் காம்பவுண்ட் மற்றும் நுழைவாயிலை  அகற்றும்படி பொதுப் பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி செங்கல்பட்டு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ் தலைமையில், வருவாய் துறையினர் முன்னிலையில் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன்  இயந்திரம் மூலம்  ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளினர். இதன் மூலம், 25 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_45901126.jpgதனியார் மனைபிரிவில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடம் இடிப்பு


கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அண்ணா நகர், பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், காரணைப்புதுச்சேரியில் இருந்து ஊரப்பாக்கம் செல்லும் மெயின் ரோடு ஓரத்தில் அரசுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.  அங்கு, காரணைப்புதுச்சேரி கிராம மக்கள் சுடுகாடு மற்றும் எரிமேடை அமைத்து, பல ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர். இதில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் குடியிருக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என தனித்தனி சுடுகாடு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலா 22 சென்ட் நிலத்தில் சுடுகாடு அமைத்து தரப்பட்டது. மீதமுள்ள இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இந்துக்களுக்கு சுடுகாடு போதிய அளவில் இல்லை என்றும், கூடுதல் இடம் கேட்டும் வருவாய்த்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பெரியார் நகரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நேற்று காலை இறந்தார். இதில், அவரது உடலை அடக்கம் செய்ய, உறவினர்கள் முஸ்லிம்களுக்கான சுடுகாட்டில் நேற்று காலை பள்ளம் தோண்டினர். இதை பார்த்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன், டில்லிபாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் முருகன் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அங்கு சென்று, அந்த இடத்தில சடலத்தை புதைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி கூறினர். இதையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் வசந்தி, விஏஓ ஜோஸ்பின் உள்பட வருவாய் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, பொதுமக்கள், இந்துக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் சுடுகாட்டில் எரிமேடை அமைத்து சடலங்களை எரியூட்டுகிறோம். எங்கள் சுடுகாட்டை ஒட்டியபடியே முஸ்லிம்கள் சுடுகாடு அமைத்து, அதில் தொழுகையும் செய்ய முயற்சித்தனர். இதனை நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி தடுத்துவிட்டோம். தொடர்ந்து மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யக்கூடாது என அதிகாரிகள் பூட்டு போட்டனர். ஆனால், அதனை மீறி பூட்டை உடைத்து சடலத்தை புதைஙக பள்ளம் தோண்டினர். அதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம் என்றனர். இதனையடுத்து, நில அலுவலர்கள் மூலம் தாசில்தார் அனைத்து இடங்களையும் அளவீடு செய்து, இஸ்லாமியர்களுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்தார். பின்னர், மதியம் சுமார் 2 மணியளவில் சடலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு, மீண்டும் மோதல் ஏற்படும் என கருதியதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை, தாசில்தார் மூலம் நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இதனால், நேற்று அங்கு 7 மணி நேரமாக பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_30_2021_59444827.jpgசுடுகாடு பிரச்னையால் இருதரப்பினர் இடையே மோதல்: 7 மணிநேரம் பேசி சமரசம் செய்த தாசில்தார்


சென்னை: கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை குறையும் மாவட்டங்களின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் மாவட்டங்களான, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சகஜநிலை திரும்பி வருவதால் இந்த மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.இதனால் நேற்று காலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்தன. நேற்று முன்தினம் இரவு முதலே அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பஸ், ரயில்களில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளதால் பஸ், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் அரசின் விதிமுறைகளை மக்கள் கடைபிடித்து செல்கின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_6_29_2021_7192630.jpgகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் குடும்பம் குடும்பமாக சென்னைக்கு மீண்டும் திரும்பினர்: சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்
காஞ்சிபுரத்தில் களைக்கட்டியது அனைத்து கோயில்களும் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி https://ift.tt/3dpnH1f
நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு https://ift.tt/2UdcSZe
கொரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி வழியாக ஆலோசனை மையம் திறப்பு https://ift.tt/3y3Jeoc
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை