சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கான பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது உற்பத்தி பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி ஆவின் பாலில் உற்பத்தி செய்யக்கூடிய 152 பொருட்கள் விரைவில் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3hz9Xm3