ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி https://ift.tt/353DwaL
பைக் மீது வேன் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாப பலி: 5 பேர் படுகாயம் https://ift.tt/32HX95d
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் https://ift.tt/3hLIAUH
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://ift.tt/3jyvmeo
161 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை தொடங்கியது.. ஒரு பேருந்தில் 24 பேர் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!! https://ift.tt/3bg0nRu


சென்னை: தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_871471583843232.jpgதமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில்கட்டண உயர்வு இன்று முதல் அமல்


சென்னை: மாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறக்கப்பட்டது. பொது நூலகங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_500911891460419.jpgமாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறப்பு
பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை https://ift.tt/3bdiN5a
தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் https://ift.tt/2QIL3mE
வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் பெறப்பட்ட பொதுமக்களின் புகார்கள் குறித்து தெரிவிக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல் https://ift.tt/2QGsnnH
திருநின்றவூரில் மகன் இறந்தது தெரியாமல் 3 நாட்களாக சடலத்துடன் இருந்த மனநிலை பாதித்த தாய் https://ift.tt/3jxBZO1
மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,000 கோடி சலுகை அல்ல; உரிமை: தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து https://ift.tt/2ERj01M
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிப்பு https://ift.tt/3hLADP3
தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன; நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் தரிசனம் செய்ய டோக்கன் முறையைப் பின்பற்ற அறிவுறுத்தல் https://ift.tt/3gMTND4
மாவட்டங்களுக்குள் இயக்கவே அனுமதி: தொலைதூர பேருந்துகள் இயங்காது https://ift.tt/32I8a6r
சீரான உணவு முறை, போதிய உடற்பயிற்சியால் நோய்களை தடுக்கலாம்: ‘நலம் 2020’ ஆன்லைன் நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை https://ift.tt/2DgYya9
கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.16 லட்சத்துக்கு குமரி அரசு போக்குவரத்து கழகம் வழங்கிய காசோலைகள் திரும்பின: ஊரடங்கால் திவால் ஆகும் நிலை https://ift.tt/32BH9l2
குடும்பத்தில் 3 பேருக்கு ஒரே போன் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாமல் மாணவி தற்கொலை: உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம் https://ift.tt/31Iv26I


சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ஏ.சி.முத்தையா, ரூ.508.4 கோடி கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். திருப்பி செலுத்தும் வசதி இருந்தும் வேண்டுமென்றே இவர்கள் மோசடி செய்ததால், வங்கிகளில் வராக்கடன் அதிகமாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா.எம்ஏசி குழு நிறுவனங்களின் முன்னாள் தலைவரான இவர், தமிழகத்தின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி தலைவராக உள்ளார். இவர் கடன் மோசடி செய்ததாக ஐடிபிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லீசிங் கம்பெனியின் தலைவராக ஏ.சி.முத்தையா இருந்துள்ளார். இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களாக ஏசி முத்தையா மற்றும் பரூக் இரானி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனம் வாங்கிய ரூ.508.4 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. எனவே, இவர்கள் இருவரும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறிய கடனாளி என ஐடிபிஐ வங்கி அறிவிப்பில் கூறியுள்ளது.நிறுவனத்துக்கு வாங்கிய மேற்கண்ட கடன் தொகையை வேறு வகையில் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ஏ.சி.முத்தையா கடன் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஏ.சி.முத்தையா மற்றும் இரானி ஆகிய இருவரும் சிண்டிகேட் வங்கிக்கு 102.87 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ 2018ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_571544826030732.jpgவேண்டுமென்றே திருப்பி செலுத்தவில்லை ஏ.சி.முத்தையா ரூ.508.4 கோடி கடன் மோசடி: ஐடிபிஐ வங்கி அறிவிப்பு


சென்னை: ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்டிருந்த அரசு பஸ்களின் சேவை இன்று முதல் துவங்குகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கட்டணத்தை பாதியாக குறைக்கவும், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் 24ம் தேதி நள்ளிரவு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சென்னை, கோவை, மதுரை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்களில் இருந்து பஸ்களை இயக்குவதை நிறுத்தியது. அரசு பஸ்களின் சேவையை துவங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. போக்குவரத்து கழகம் மூலம் சாதாரண, டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் என்ற வகையில் தினசரி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள்  இயக்கபல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கை காரணமாக, தமிழக அரசு நேற்று முன்தினம் அரசு பஸ்களை இயக்குவதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதில், மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் 3300 பஸ்களுடன் துவங்குகிறது. பஸ்களின் டயர்களில் காற்றின் அளவு சோதனை செய்யப்பட்டு, போல்ட் சரியான நிலையில் இருக்கிறதா எனவும் சோதனை செய்யப்பட்டது. மேலும் பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்காக பல்வேறு வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பின்புறமாக ஏறும் போது, அங்கு சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அதில் தங்களது கைகளை பயணிகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் உடல்ரீதியான தொடர்புகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வ்வொருமுறையும் பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். பயணிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். அனைத்து டிரைவர்கள் மற்றும் பிற உள் ஊழியர்கள் தங்களது ஷிப்ட்டை துவங்குவதற்கு முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளின் இயக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மாவட்டத்திற்குள்ளான பஸ்கள் இயக்கத்திற்கு ஒருபுறம் வரவேற்பு தெரிவித்தாலும், மற்றொரு புறம் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால், தங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கு மருத்துவமனை, அலுவலகம், தொழில் போன்றவற்றிற்கு செல்வதற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதே முக்கிய காரணமாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக பலரும் வேலை இழந்துள்ளதால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால் அரசு பஸ்களின் கட்டணத்தை குறைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. * ரூ.1,000 பாஸ் குறித்து ஆலோசனைசென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, அடையாறு, அயனாவரம், வடபழனி, தி.நகர் என 28 இடங்களில் டெப்போக்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக தினசரி 3,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், பயணம் செய்ேவாரின் வசதிக்காக ரூ.1,000 பாஸை போக்குவரத்துக்கழகம் வழங்கி வருகிறது. இவற்றை வழங்குவதற்கான மையங்கள் அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர் என 29 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாஸ் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து ரூ.1,000 பாஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. எப்போது வழங்கப்படும், நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_709789454936982.jpgதளர்வுகள் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 19,000 பஸ்கள் இன்று முதல் ஓடுகிறது: கட்டணம் குறைக்க மக்கள் கோரிக்கை


சென்னை: சென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். கொரோனா ஊராடங்கால் பிற மாவட்டங்களிலும் தொடங்கி நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_493572413921357.jpgசென்னையில் 161 நாட்களுக்கு பின் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி


சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கவர்னர்கள், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இழப்பு இந்திய மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஒரு புகழ் பெற்ற சகாப்தம் முடிந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையஎல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழிசை (தெலுங்கானா கவர்னர்): பிரணாப் முகர்ஜி நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.எடப்பாடி பழனிச்சாமி (தமிழக முதல்வர்): பிராணாப் முகர்ஜி மறைவு இந்தியாவிற்கே ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இதேபோல் துணைமுதல்வர், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_526989161968232.jpgமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கவர்னர்கள், முதல்வர், கட்சி தலைவர்கள் இரங்கல்


சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம்நேற்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ல் பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே 22ம் தேதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். கூட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆதரவாக உத்தரவு பிறப்பித்தாலும், இதையடுத்து தொடரப்பட்ட மேலுமுறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களது கோரிக்கையை நிராகரித்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக, தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பினர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், நீதிபதிகள் நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இதில் ஆலைக்கு சீல் வைத்து பூட்டிய விவகாரத்தில் தற்போதைய நிலை என்பது தொடர்ந்து நீடிக்கும். இதுகுறித்து என உத்தரவிட்டனர்.

https://ift.tt/34LoV3s ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,839 கனஅடி இருந்த நிலையில் 4,144 கன அடியாக உயர்வு https://ift.tt/2YOBgAd


சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ம் தேதியை பணிநாளாக அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Aug_26_164547145366669.jpgஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் அருகே தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த தொழிலாளியின் கடன் நிலுவை ரூ.6.94 லட்சம் தள்ளுபடி: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் வங்கி நிர்வாகம் உறுதி https://ift.tt/2QAdL9k
புதுக்கோட்டை கரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு?- 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை https://ift.tt/3lwjXNZ
ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பரத நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது https://ift.tt/3lAMmlM
சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் 2-ம் வாரத்தில் கிருஷ்ணா நீர் திறப்பு: தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில் உறுதி https://ift.tt/2ETfKmo
போலீஸ் சீருடை அணிந்த இளைஞர்கள் வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி: இல்லாத காவல் நிலையத்தின் பெயரை கூறி கைவரிசை https://ift.tt/2EE8vPy
பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கம்: பேருந்து இயக்க எல்லை இன்று அறிவிப்பு https://ift.tt/31GRs8a
பல்லாவரம் மேம்பாலம் விரைவில் திறப்பு; ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் குறையும்: மறைமலை அடிகள் பெயர் வைக்க கோரிக்கை https://ift.tt/3hHNt0Z
சாதகமான வானிலை நிலவுவதால் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் https://ift.tt/2YNvHSt
தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின https://ift.tt/31Jehs1
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கரோனா தொற்றால் நுரையீரல் பாதித்த 97 வயது முதியவர் குணமடைந்தார் https://ift.tt/2QD8FZV
பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய புதுப் பெண்ணுக்கு 16 வகை சீர்வரிசை தந்து வாழ்த்து: பெண் காவல் ஆய்வாளருக்கு மக்கள் பாராட்டு https://ift.tt/3juSoms
தமிழகத்தில் இன்றுமுதல் வாகன சோதனை தீவிரம்: பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் https://ift.tt/2YPi5pN
‘இல்லந்தோறும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிலவட்டும்’ - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் ஓணம் வாழ்த்து https://ift.tt/3gJ8YwM
செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான வாகன நெரிசல் https://ift.tt/2QEjJWJ
பெரியபாளையம் அருகே மாட்டு தொழுவமாக மாறிய நூலக கட்டிடம்: திறக்க கோரிக்கை https://ift.tt/2QG29BE
அளவுக்கு அதிகமான போதையில் நாக்கு வறண்டு எலக்ட்ரீசியன் பலி: ஆவடியில் சோகம் https://ift.tt/3bivVGk
கடம்பத்தூரில் ரூ. 2.10 கோடியில் வளர்ச்சி பணி: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் https://ift.tt/31EafBc
அதானி துறைமுக விரிவாக்கத்தை கண்டித்து மீனவர்கள் நூதன பிரசாரம் https://ift.tt/3baSSef
ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கட்டிட பணி துவக்கம் https://ift.tt/3bffuKH
ஆரணி ஆற்று பாலத்தில் அசுத்தமாக கிடக்கும் நடைபாதை: துர்நாற்றத்தால் பாதசாரிகள் அவதி https://ift.tt/34ZVsTF
ஆலை விபத்தில் ஒருவர் பலி https://ift.tt/3hJqJ0w
யாழ்ப்பாணத்திலிருந்து ராமேசுவரத்துக்கு கடத்த முயன்ற 5.5 கிலோ தங்கம் பறிமுதல்; 2 மீனவர்கள் கைது https://ift.tt/3jr71H9
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு  https://ift.tt/32yfema
பிரதமர் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு புகார்; 75 ஆயிரம் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு வேளாண்மைத் துறை பரிந்துரை https://ift.tt/2G5kje1
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்தது https://ift.tt/3jjVeKS
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை