சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம்நேற்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ல் பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே 22ம் தேதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். கூட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆதரவாக உத்தரவு பிறப்பித்தாலும், இதையடுத்து தொடரப்பட்ட மேலுமுறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களது கோரிக்கையை நிராகரித்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக, தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பினர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், நீதிபதிகள் நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இதில் ஆலைக்கு சீல் வைத்து பூட்டிய விவகாரத்தில் தற்போதைய நிலை என்பது தொடர்ந்து நீடிக்கும். இதுகுறித்து என உத்தரவிட்டனர்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/2YSvQnF