அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
சிறுமுகை இடுகம்பாளையம்: கிராமத்துக்குள் புகுந்த 3 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு https://ift.tt/3kMZ3JH
அறந்தாங்கி காவல்துறை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் வீணாகும் அவலம்: ஏலம்விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை https://ift.tt/3mEOaKh


சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் காவிரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது. துரைக்கண்ணு உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_196346461772919.jpgஅமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் காவிரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது !


சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு என புகழாரம் சூட்டினார். அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று காரணமாக மூச்சுதிணறல் இருந்து வந்தது. இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். இந்நிலையில், இன்று காலை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடுவதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி வன்னியடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று அரவது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_222576320171357.jpgஅமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கம்


சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடு என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வன்னியடியில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் அடக்கம்  செய்யப்படுவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_71483790874482.jpgஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடு என உறவினர்கள் தகவல்


சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு என புகழாரம் சூட்டினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_856044948101044.jpgஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு !


சென்னை: காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். உடன் அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார், துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_140484035015107.jpgஅமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி !
குறைந்த முதலீட்டில் அதிக லாபம்; தென்னிந்திய விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது வெணிலா பயிர் சாகுபடி: மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தகவல் https://ift.tt/3jM6LlY
‘நவ.1- தமிழ்நாடு நாள்’: தமிழகத்தை மேலும் உயர்த்த உறுதியேற்போம்: முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து https://ift.tt/34PIQ0V
பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு: ஆளுநர் மாளிகையிலும் கொண்டாட்டம் https://ift.tt/3oMm6Xd
விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு அளித்த சகாயம் ஐஏஎஸ்: சமூகத்துக்கான பங்களிப்பை செய்ய விடவில்லை என ஆதங்கம் https://ift.tt/3kPnSo8
முயற்சி, அர்ப்பணிப்பால் சிறப்பான நிர்வாகம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம் https://ift.tt/3mE7jw2
கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் நோய்த் தொற்று 15 மடங்கு குறைந்துள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் https://ift.tt/3ecXzG9
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்ற நேர்மையான அதிகாரிகளால் முடியவில்லை: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு https://ift.tt/37ZJkn2
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் https://ift.tt/35ML5kI
எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை: சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்தது https://ift.tt/34Jdbhm
புதுவைக்கு பேருந்துகள் இயக்க அனுமதி: இ-பதிவு முறையை ரத்து செய்தது தமிழக அரசு https://ift.tt/34Ih0U7
கோயம்பேடு சந்தையில் சற்றும் குறையாத காய்கறி விலை: பெரும்பாலானவை கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனை https://ift.tt/37YinA0
ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்களை எடுக்காமல் மழைநீர் வடிகால்: அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு https://ift.tt/3kLc0nn
ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆதரவற்ற மூதாட்டிக்கு சிகிச்சை: மனிதநேயத்துடன் செயல்பட்ட ஊழியர்கள் https://ift.tt/3jPJWhc
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை https://ift.tt/31XxyWb
திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம் https://ift.tt/3mHr7yI
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு https://ift.tt/2HUHJUh


சென்னை: யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் தரிசனம் செய்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். மேலும், மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_691326320171357.jpgயாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு: ராஜேந்திர பாலாஜி பேட்டி !
கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஆம்புலன்சை வழிமறித்த வாலிபர்: வேளாங்கண்ணியில் பரபரப்பு https://ift.tt/2HJp12y
ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு ! https://ift.tt/34G28FH
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் நடவு வயல்களில் காயும் நெற்பயிர்கள்: வடகிழக்கு பருவமழைக்கு காத்திருக்கும் விவசாயிகள் https://ift.tt/38anEor
புதுச்சேரியில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்: நாராயணசாமி பேட்டி https://ift.tt/3jHBHE0


சென்னை: தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டில் சிறப்பாக ஆட்சிதரும் மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம் பிடித்தது குறித்து முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_197063624858857.jpgதமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்: முதல்வர் பழனிசாமி ட்விட் !


சென்னை: நவராத்திரி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 2ம் தேதி மட்டும் காலை 7 மணிக்கு பதில் 5.30 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இரவு 9.30 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_221065700054169.jpgநவராத்திரி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்சேவை நேரம் நீட்டிப்பு


சென்னை: பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள பட்டேலின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_309429347515107.jpgபட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை !
வேலூர் லாரி ஷெட் பகுதி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் தி.மலை பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல் https://ift.tt/37W3Zs0
திருவண்ணாமலையில் தொடர்ந்து 8வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை https://ift.tt/3kKwIDO
சரக்கு ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து குமரிக்கு 1000 டன் சீனி வருகை https://ift.tt/2HMYcKv
கோவையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ! https://ift.tt/3mEJCne


சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்னமும் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தின் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இதனிடையே முதல்வர் பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், மின்சார ரயில் சேவை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 8 மாதமாக மூடியுள்ள தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை போன்றவை மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம். இருப்பினும் மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்காததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_51738917827607.jpgஇன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு...! திரையரங்குகள் திறக்கப்படுமா?...அடுத்த கட்ட தளர்வுகள் இன்று வெளியாக வாய்ப்பு


சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம் இருந்து வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_218441188335419.jpgதமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
திண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/34GzeFm


சென்னை: சென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கத்தில் வசந்த் என்பவர் வீட்டில் நுழைந்தவர்கள் ரூ.20,000 ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_209377467632294.jpgசென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை


சென்னை: புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_21938502788544.jpgபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து


திருக்கழுக்குன்றம்:  கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் இன்குபேஷன் சென்டர் எனப்படும் “அடைகாக்கும் மையத்தை” அணுசக்தி துறை தலைவர் கே.என்.வியாஸ் மும்பையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த விழா, கல்பாக்கம் அடுத்த அணுபுரத்தில் நேற்று நடந்தது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அருண்குமார் பாதூரி தலைமை தாங்கினார். அணுமின் நிலைய அதிகாரிகள் வெங்கட்ராமன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் இன்குபேஷன் சென்டர் எனப்படும் அடைகாக்கும் மையம் மூலம் சுற்றுப்புற சூழல் மாசு, சுற்றுப்புறத்தில் எங்கெல்லாம் எவ்வளவு கதிர்வீச்சு உள்ளது, பெண்களின் மார்பக புற்றுநோய் உள்பட புற்றுநோய் வகைகளை எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், விவசாயம் சம்பந்தமான மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவை பற்றி கண்டறியலாம். இந்த செயல்பாடுகளுக்காக  4 நிறுவனங்களிடம் இருந்து  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடைகாக்கும் மையத்தால் வரும் காலங்களில் பல்வேறு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_681286036968232.jpgகல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இன்குபேஷன் சென்டர் துவக்கம்


பொன்னேரி: பொன்னேரியில் போக்குவரத்து பணிமனையின் முன் தொமுச உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தாமல் இழத்தடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். 14வது ஊதியக்குழு ஒப்பந்தத்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஊதியஉயர்வு அளிப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிகாரிகள் உடனே தொடங்க வேண்டும். தீபாவளி போனஸ் உடனே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  வேலை நிறுத்தம் செய்ய போக்குவரத்து தொழிலாளர்கள் விரும்பவில்லை எனவும் உடனடியாக தமிழக அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_877041041851044.jpgபோக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ஆவடி: விசா, பாஸ்போர்ட் இல்லாமல் ஆவடி அருகே தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபரை மத்திய உளவுத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர், தீவிரவாத செயலில் ஈடுபட வந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு  கிராமத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கியிருப்பதாக சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்களை பிடித்தனர். தீவிர விசாரணையில், ஒருவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பாட்சா (22) என்பது தெரியவந்தது. பின்னர், உளவுத்துறை போலீசார் அவரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இவர், கடந்த 2015ம் ஆண்டு வங்கதேச நாட்டிலிருந்து ஆற்றுப்பாதை வழியாக தப்பி மேற்கு வங்காளத்திற்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலமாக கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி  கூலி வேலை செய்து உள்ளார். அதன்பிறகு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.  ஆவடி அருகே ஆரிக்கம்பேடு பகுதியில் வடமாநிலத்தவர் என கூறிக்கொண்டு கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும் பாட்சா, தீவிரவாத செயலில் ஈடுபட சென்னைக்கு வந்துள்ளாரா அல்லது பிழைப்பு தேடி வேறு வழியில்லாமல் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே வங்கதேச வாலிபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_897808253765107.jpgவிசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கிய வங்கதேச தீவிரவாதி கைது? மத்திய உளவுத்துறை போலீசார் அதிரடி


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றம் செய்தும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றும் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா கலெக்டர் அலுவலகத்தில் முறைப்படி கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். முன்னதாக அவர் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில்  சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வே.முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_147442042827607.jpgதிருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பொன்னையா பொறுப்பேற்பு


மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தால், பருவமழை காலத்தில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை, உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய தடமாக உள்ளது. இச்சாலையில் பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் நடுவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மேம்பால பணி, கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. ஓராண்டை கடந்த பிறகும், இந்த பாலம் முறையாக திறக்கவில்லை. ஆனால், பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில், கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையால், பங்கிங்காம் கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, பாலத்தின் அடிப்பகுதியில் இருபுறமும் மண் சரிந்தது. இதையடுத்து, மண் சரியாமல் இருக்க, கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.தற்போது, பருவ மழை துவங்கியுள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக பெருக்கெடுத்து ஓடும். அப்போது, பாலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தால், தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படும். தண்ணீர் சமமாக செல்லாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக தலையிட்டு கால்வாய் நடுவே அமைக்கப்பட்ட  கான்கிரீட் தளத்தை அகற்றி, பாலத்தின் பக்கவாட்டு பகுதியை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_65792262554169.jpgமாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் உள்ள கான்கிரீட் தளத்தால் வெள்ள பாதிப்பு அபாயம்: உடனே அகற்ற வலியுறுத்தல்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டகலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து, அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள்  அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வந்த பொன்னையா, கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, காஞ்சிபுரத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டார்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62வது கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அனைத்து துறை அலுவலர்களும், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி ரவிக்குமார், கிருஷ்ணகிரியில் முதல் முதலாக வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்து, பின்னர் தருமபுரியில்  மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் துணை  ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_895763576030732.jpgகாஞ்சிபுரம் புதிய கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பொறுப்பேற்பு
7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மிக மோசம் அடைந்துள்ளது : மு.க.ஸ்டாலின் https://ift.tt/3jC9GgR
தசரா திருவிழா நிறைவை தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் 2வது நாளாக குவிந்த பக்தர்கள்; சமூக விலகல் மாயம் https://ift.tt/3kFDuuo


சென்னை : ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் ' நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்',என்ற வரிகளுடன் ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி காந்த் வீடு முன் அவரது ரசிகர்கள் திரள தொடங்கினர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_139492213726044.jpg‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன


சென்னை : சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘சென்னையில் 13 இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன’ என்று கூறினார். மேலும், பேசிய அவர்,' ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையில் எந்த பிரச்னையும் இல்லை .சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்,' என்றும் தெரிவித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_No20_29_821224391460419.jpgஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியீடு : அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை