மேட்டுப்பாளையம்: சிறுமுகை இடுகம்பாளையம் கிராமத்துக்குள்  புகுந்த 3 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியபடிக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்திலிருந்து காட்டுயானைகள் வெளியேறி அருகில் உள்ள இடுகம்பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் புகுந்தது. இதைப் பார்த்த விவசாயி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  பகல் முழுவதும் கிராமத்தில் உள்ள புதர்களில் மறைந்து நின்று யானைகள் மாலையில் வெளியே வந்தபோது வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து யானைகள் ரயான் நகர், கணேஷபுரம் வழியாக நேற்று வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது. கிரமத்திற்குள் புகுந்த யானையை வனத்திற்குள் விரட்டும் பணியால் இப்பகுதியில் 2 நாள் பரபரப்பு ஏற்பட்டது. இந்த யானைகள் மீண்டும் கிராமத்திற்கு வராமல் சிறுமுகை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.



from Dinakaran.com |01 Nov 2020 https://ift.tt/2TGWOLZ