நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி


சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி அரசு அனுமதித்த  நேரத்தை கடந்து, பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீதும், சென்னையில் 1,008 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்பட, தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும், அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பலர் பட்டாசு வெடித்தனர். இதையடுத்து அரசின் அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 2,200 பேர் கைது  செய்யப்பட்டு ஜாமீனில் விடுக்கப்பட்டனர். அதைப்போன்று சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை  கடந்து பட்டாசுகள் வெடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 1,008 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1,014 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 980 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் வடக்கு மண்டலத்தில் 303 வழக்குகள் பதிவு செய்து 296 பேரும், மத்திய மண்டலத்தில் 60 வழக்குகள் பதிவு செய்த நிலையில் 51 பேரும், மேற்கு மண்டலத்தில் 466 வழக்குகள் பதிவு செய்து 456 பேரும், தெற்கு மண்டலத்தில் 233 வழக்குகள் பதிவு செய்து 246 பேர் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_7_2021_21154422.jpgதமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி விதிகளை மீறி பட்டாசு வெடித்த 2,278 பேர் மீது வழக்கு: சென்னையில் 1,008 பேர் சிக்கினர்; போலீசார் நடவடிக்கை


சென்னை: கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானம் மற்றும்  ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 3 பிளாக் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு  உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டன. இந்த மருத்துவமனை தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்டதாக 51,429 சதுர மீட்டரில், அதாவது 5,53,582 சதுர அடி கொண்ட கட்டிடமாக கட்டப்படவுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான வடிவமைப்பு  விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், தற்போது, இப்பணிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதில், தற்போது முதற்கட்டமாக  6 தளங்கள் கொண்ட 3 பிளாக் கட்டப்படுகிறது. அதன்படி ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடமும், ரூ.78 கோடியில் பி பிளாக்கில்  18,725 சதுர மீட்டரில்  அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ரூ.74 கோடியில் சி பிளாக்கில் 15968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகள் கட்டிடம் என மொத்தம் 51429 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.230 கோடி மதிப்பிலான பணிகளுக்கு கடந்த 2ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து டெண்டரில் தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_7_2021_77285404.jpgகிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு


சென்னை: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு துறைகளுக்கும் நேர்மையான, திறமையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அதிகாரிகள் நியமனம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன், தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அந்த துறையின் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்த அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளராகவும், அந்த துறையில் செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்து துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை செயலாளராகவும், போக்குவரத்து துறை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, மின்சாரத்துறை செயலாளராகவும், அந்த துறையின் செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித்துறை செயலாளராகவும், அந்த துறையில் செயலாளராக இருந்த அபூர்வா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி மற்றும் ஜவுளி ஆணையர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, நில சீர்திருத்தத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_7_2021_36989993.jpgநிதித்துறை செயலாளர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை முருகானந்தம்; தொழில்துறை கிருஷ்ணன்; பொதுப்பணித்துறை கட்டாரியா; ஊரக வளர்ச்சித்துறை அமுதா நியமனம்


சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக 4 நாட்களுக்கு 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்பவும் பிரத்தியேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், நான்கு மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இதை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதிலும் மக்கள் செல்ல அதிகம் ஆர்வம் காட்டினர். ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிட்டவர்கள் என அனைவரும் இறுதியில் எதிர்பார்ப்பது பஸ்களை தான். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் 1ம் தேதி, 2ம் தேதி, 3ம் தேதி  என 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது, 3 நாட்களில் தினசரி இயக்கப்படும்  6,300 பஸ்களுடன், சென்னையில் இருந்து 3506 சிறப்பு பஸ்கள், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து  6734 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,540 பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்தத்தில் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் ரயில் மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி முடித்து விட்டு, சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பஸ்களுக்கும் அரசின் போக்குவரத்து துறை ஏற்பாடு செய்திருந்தது. தீபாவளிக்கு முதல்நாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், 2 நாட்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். தீபாவளி முடிந்து மறுநாள் (5ம் தேதி) திரும்புபவர்கள் வசதிக்காக தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 643 சிறப்பு பஸ்கள், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 6ம் தேதி (நேற்று) தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 913 பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு செல்ல 900 பஸ்களும் இயக்கப்பட்டன. இன்று தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1729 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 2180 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. நாளை தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், சென்னைக்கு 1034 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1190 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. தீபாவளி முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்ப 5, 6, 7, 8ம் தேதி என மொத்தம் 17,719 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், ‘‘ தீபாவளியை முடித்து திரும்பும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் 17,719 பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பஸ் புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேலும் சிறப்பு பஸ்களை இயக்கவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தயாராக உள்ளது”  என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_7_2021_72668094.jpgதீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக 4 நாட்களுக்கு 17,719 சிறப்பு பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்பவும் ஏற்பாடு


சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அதை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத படி அரசு துறைகள் செயல்பட அறிவுரை வழங்கினார். தமிழகம் முழுவதும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 9ம்தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். அது வலுப்பெற்று வட தமிழக கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 9ம்தேதி முதல் 12ம்தேதி வரை மழை மற்றும் சூறைக்காற்று வீசலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 9ம்தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் வரும் 9ம்தேதி (செவ்வாய்கிழமை) வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்குமாறும் சார்நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்ட கலெக்டர்கள் செயல்பட வேண்டும்.  மேலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கவனமாக கண்காணித்து, ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத்துறைகள் செயல்பட வேண்டும். 24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றையே நாம் வெற்றிகரமாக சந்தித்து விட்டோம். கொரோனா காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நான் அறிவேன். ஆனால் கொரோனா போல் அல்லாமல், வெள்ள பாதிப்பு குறித்து நமக்கு நன்றாக தெரியும். கனமழை ஏற்பட்டால் எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும், உயிர்சேதங்கள் எப்படி ஏற்படும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது, இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். வெள்ளப் பாதிப்பிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே இல்லாமல், நிரந்தர தீர்வுகளையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை வென்றதைப் போல் இந்த பருவமழையையும், புயலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். வடகிழக்கு பருவமழையில் தற்போது வரையிலான இயல்பான மழைப்பொழிவு 225.5 மி.மீ என்ற நிலையில், தற்போதையை நிலவரப்படி 317.59 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 41 சதவீத கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பை விட 20 சதவீதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது. சென்னை, தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இயல்பான மழையளவான 706.0 மி.மீ.,விட 37 சதவீதம் கூடுதலாக 969.9 மி.மீ. மழை பெய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 90 அணைகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, கரூர், திருப்பூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள், 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 7,048 ஏரிகள், 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி (1,726), மதுரை (939), தஞ்சாவூர் (550), புதுக்கோட்டை(510), திருவண்ணாமலை (378), சிவகங்கை (348), தென்காசி (346), திருநெல்வேலி (305), காஞ்சிபுரம் (257), செங்கல்பட்டு (248), ராணிப்பேட்டை (213), விழுப்புரம் (191), கள்ளக்குறிச்சி (147) கடலூர் (131), திருவள்ளூர் (124) மாவட்டங்களில் உள்ள ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன.நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வரும் 9ம்தேதி 1 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் அனைத்து ஆயத்த பணிகள், மீட்பு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிவாரண முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  அரசு அலுவலக வளாகங்களிலும், சாலை ஓரத்திலும் உள்ள பலவீனமான மரங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துவதோடு ஆபத்தான நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்பட வேண்டும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள், சிறுபாலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவதன் காரணமாக இந்த பாலங்கள், சிறுபாலங்கள் மீது மழை, வெள்ள நீர் ஓடும் போது, இந்த வழியாக போக்குவரத்தை அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் அனுமதிக்க வேண்டும். மண் சுவர் வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்கும் வகையில் சாலைகளிலுள்ள சேதங்கள் மற்றும் பள்ளம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள், அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து தேவையான அளவு உபரி நீரை பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, உபரி நீர் திறப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றி அவ்வப்போது உபரி நீரை திறந்துவிட்டு, அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளைப் பொறுத்தவரையில், வயல்வெளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ள காலங்களில், தென்னந்தோப்புகளில் உள்ள மரங்களிலிருந்து முதிர்ந்த நிலையில் உள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். பொதுமக்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு பொதுமக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர்  இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். * வெளிநாடுகளிலும் பாராட்டுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாடு வெற்றிகரமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பிற மாநிலங்கள் பேசி வருகின்றன. வெளிநாடுகளில் கூட புகழ்ந்து பேசக்கூடிய அளவிற்கு நாம் பணியாற்றி  இருக்கிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், அனைவருடைய கூட்டு முயற்சி தான் இதற்கு காரணம்’’ என்றார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_7_2021_22674197.jpg9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவு
ஈரோட்டில் தக்காளி கிலோரூ.100க்கு விற்பனை https://ift.tt/3oaLhDI
கொடைக்கானல் மலைச்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூன்று பேர் பலி https://ift.tt/3CRAMev
திருப்பத்தூர் அடுத்த கந்திலி வட்டாரத்தில் 75 ஆண்டுகளாக மின்சார வெளிச்சத்தை பார்க்காத மக்கள்: பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் அவலம்; கவனிக்கப்படாத நாடோடிகளின் வாழ்க்கை https://ift.tt/3qlU9su


சென்னை: புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில வாரங்களாக, ரூ.100ஐ கடந்தது. இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர், லாரிகள் தொழிலில் உள்ளவர்கள் ஆகியோர், இந்த கடும் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். இவற்றின் விலையை குறைக்க சொல்லி, மத்திய, மாநில அரசுகளை பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மக்களின் துயரத்தை உணர்ந்த பிரதமர் மோடி, பெட்ரோல் மீதான விலை ரூ.5ம், டீசல் மீதான விலை ரூ.10ம் குறைத்த அறிவிப்பினை, மக்களுக்கு தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமானால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தாமல், மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர மக்களின் துயரத்தை குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதிய நீதிக் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_86204166.jpgபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: புதிய நீதிக்கட்சி வரவேற்பு


சென்னை: இருவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி. சகோதரி அசுவினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.அதனைத்தான், நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது என்று கலைஞர் குறிப்பிட்டார்.திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே. ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன்.இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது. இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது. பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_7920474.jpgஇருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு இருவார காலத்துக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சென்னை: சென்னையில் தீபாவளியன்று பட்டாசு புகை மண்டலத்தில் சிக்கி விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிப்படும் சம்பவங்கள் இந்த ஆண்டு இல்லாததால் பயணிகளும், விமானநிலைய அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகை அன்று ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் இதேபோல் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படும். அந்த பட்டாசு புகை, அதோடு பனியின் தாக்கம் இரண்டும் சேர்ந்து, சென்னை விமானநிலைய ஓடுபாதையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு புகை மூட்டம் சூழந்து கொள்ளும்.இதனால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரை சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவது வழக்கம். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சில விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், திருச்சி விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அதுபோல், சென்னை சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் பல விமானங்களும் புறப்பட முடியாமல் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்படும்.அதன்பின்பு காலையில் பட்டாசு வெடி சத்தம் ஓய்ந்து, புகை மூட்டம், பனியின் தாக்கம் குறைந்ததும், காலை 10 மணிக்கு மேல் விமான சேவைகள் வழக்கமான இயல்புக்கு திரும்பும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இதன் காரணமக, சில விமான நிறுவனங்கள் தீபாவளி அன்று அதிகாலை சென்னை வந்து, புறப்பட்டு செல்லும் நேரத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இருந்தாலும், அதிசயத்தக்க விதத்தில் சென்னை விமானநிலையத்தில் தீபாவளி அன்று காலையிலும், மாலையிலும் விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் வந்து தரையிறங்கின. குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு சென்றன. விமானநிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகள் ஓரளவு வெடிக்கப்பட்டன. ஆனால் பெருமளவு புகை மண்டலம் விமானநிலைய ஓடுபாதையை சூழவில்லை. அதேபோல் பனியின் தாக்கமும் அதிகமாக இல்லை. ஓடுபாதையில் புகை மண்டலம் பாதிப்பு ஏற்படாமல், அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கின. இது பயணிகளுக்கும், விமானநிலைய அதிகாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேநிலை வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_91672916.jpgசென்னையில் தீபாவளி பட்டாசு புகையால் இந்தாண்டு விமான சேவை பாதிப்பு இல்லை: அதிகாரிகள், பயணிகள் மகிழ்ச்சி
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கில் புகுந்த சாரைப்பாம்பு https://ift.tt/3bNFY78
சிவகாசியில் நடப்பாண்டு ரூ.4,200 கோடிக்கு பட்டாசு விற்பனை https://ift.tt/3BNvLlF
புதுக்கோட்டை அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு காளைகள் முட்டி 2 பேர் பலி: மருத்துவமனையில் 32 பேர் அனுமதி https://ift.tt/3BP0JtR
திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை அண்ணாமலையார் தீபத்திருவிழா நாட்களில் தரிசனத்துக்கு இ-பாஸ்: இன்று முதல் முன்பதிவு செய்யலாம் https://ift.tt/3qbmlyh
கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி உட்பட 6 பேர் பரிதாப பலி: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு https://ift.tt/2YjkGv1


சென்னை: கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 1ம் தேதி திறந்து வைத்தார். 1 முதல் 8ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.‌ வரும் நவம்பர் 14ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_97777957.jpgவிடுதலைப் போரில் தமிழகம் புகைப்பட கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு


சென்னை: மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த மாதம் 24ம் தேதி பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது, கோயில் நிர்வாகத்தினர் அவர்களை உட்கார விடாமல் அடித்து துரத்தி அவமானப்படுத்தினர். இதையடுத்து, அந்த நரிக்குறவ பெண்கள் சாமி எங்களை முதல் பந்தியில் அமர வைக்க வேண்டாம். கடைசி பந்தியிலாவது, எங்களை உட்கார வையுங்கள் வயிறு பசிக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அதற்கு, கோயில் நிர்வாகம் முதல் பந்தியில் மட்டும் இல்லை கடைசி பந்தியிலும் உங்களை உட்கார விடமாட்டோம் என கூறியுள்ளனர்.  இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை காட்சியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த காட்சி, மிக பெரிய வைரலானது. மேலும், அந்த காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் ஆய்வுக்காக வந்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்த பெண் மற்றும் அந்த சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அவரும் அன்னதானம் சாப்பிட்டார். அப்போது, அஸ்வினி என்ற பெண்ணிடம் நீங்கள் வசிக்கும் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என கேட்டார். அதற்கு, அந்தப் பெண் நாங்கள் 25 வருடமாக பூஞ்சேரியில் மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகிறோம். எங்களுக்கு, வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, அதேப்போல் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லையென அமைச்சரிடம் முறையிட்டார். இவை அனைத்தும், முதல்வரிடம் ஆலோசித்து உடனே நிவர்த்தி செய்யப்படும் அப்பெண்ணிடம் உறுதியளித்தார். இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு  வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளையும்  வழங்கினார். முன்னதாக, நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வருக்கு அப்பெண் பாசிமணி அணிவித்தார். பின்னர், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுடன் முதல்வர் அமர்ந்து குழுப் புகைப்படம் எடுத்து கொண்டு, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார். அப்போது, தனக்கு அருகே இருந்த நரிக்குறவ பெண் ஒருவரின் செல்போனை வாங்கி முதல்வர் அப்பெண்ணுடன் செல்பி எடுத்தார். அந்த, புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர் முதல்வரை தங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பினை ஏற்று, முதல்வர் அவர்களது வீடுகளுக்கு நடந்தே நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அப்போது, அஸ்வினி வீட்டில் அமர்ந்து அப்பெண்ணுடன் சிரித்துப் பேசினார். அந்த பெண் கண்ணீர் மல்க கை கூப்பி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, முதல்வர் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மேலும், இந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.* 282 பேருக்கு ரூ.4.53 கோடி நலத்திட்ட உதவிபூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த  282 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 பேருக்கு குடும்ப அட்டைகள், 18 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 பேருக்கு இருளர் சாதி சான்றிதழ், 34 பேருக்கு நரிக்குறவர் சாதிச் சான்றிதழ், 34 பேருக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய  அட்டைகள், சுயவேலை வாய்ப்பு உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 பேருக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம்  கடனுதவி, சிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 33 பேருக்கு ரூ.10,000 வீதம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி, 75 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல், மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் நிறுவனத்தின் மூலம்  பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய  வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை, என மொத்தம் 282 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா  பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத்,  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி  ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_83669681.jpgநரிக்குறவ பெண் வீட்டுக்கு சென்று நெகிழ வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை: தீபாவளி பண்டிகை சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருப்பர். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிச்சியடைந்தனர்.தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.4,447க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.35,576க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.448 குறைந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி அன்றும் தங்கம் விலை குறைந்தது தீபாவளி சமயத்தில் நகை வாங்குவோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மகிழ்ச்சி தீபாவளி முடிந்த மறுநாளே (நேற்று) தவிடு பொடியானது என்று தான் சொல்ல வேண்டும்.அதாவது, நேற்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. நேற்று காலை மட்டும் கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் தங்கம் நேற்று மாலை மேலும் அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.58 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,505க்கும், சவரனுக்கு ரூ.464 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,040க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.36,000ஐ தாண்டியுள்ளது. இது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_2213687.jpgதீபாவளி முடிந்த மறுநாளே தங்கம் விலை கிடுகிடு உயர்வு: சவரனுக்கு ரூ.464 அதிகரிப்பு


சென்னை:  காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் சென்றனர்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை, தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என்கிற அளவிலான விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாமை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கலாம் என்று பல்வேறு ஊழியர்கள் சங்கங்கள், அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_41009158.jpgஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 8வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ம் தேதிக்கு மாற்றம்


சென்னை: ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்பாது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், அதிகப்படியான காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களில் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. குறிப்பாக காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் அதிகம் ஏற்படுகின்றன. சாலைகளில் விபத்துகள் நடப்பது அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. எனவே தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முன்னுரிமை வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகள் வெடித்து, சுற்றிலும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, எந்த எரியக்கூடிய பொருட்களும் இல்லாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். நீண்ட மற்றும் தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பிரத்தியேக கவனம் செலுத்தி கண்காணிப்பில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாச பிரச்னைகள் கொண்டவர்கள், வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, வழிபாடு செய்த பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலுடன் நீடித்த மழை பெரும்பாலான இடங்களில் கனமழையாகவும் இருந்தது. இதனால் காலையில் பொதுமக்களால் அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்க முடியவில்லை.மதியத்திற்கு பிறகு தூறல் குறைய ஆரம்பித்தது. இதையடுத்து பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர். மழைகாரணமாக காலையில் பட்டாசுகளை வெடிக்காத பலர் இரவில் அதிக அளவில் வெடிக்க தொடங்கினர். குறிப்பாக உச்ச நீதிமன்றம் 2 மணி நேரமே வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் மக்கள் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியில் வந்து நேற்று இரவு வெடித்தனர். சர வெடி, புஸ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட், மத்தாப்பு போன்றவற்றை வெடித்து தள்ளினர். உற்சாகத்தில் பலர் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் டமால், டமால் என்ற வெடி சத்தத்துடன் வானவெளி வண்ணமயமாக காட்சியளித்தது.மற்றொருபுறம் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையின் பல்வேறு பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தன. மேலும் காற்று மாசுபாடும் ஏற்பட்டது. காற்றில் பிஎம்-10 மற்றும் பிஎம்-2.5 ஆகியவற்றின் அளவு மிகவும் அதிகமாக இருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டைவிட 10 மடங்கு அதிகம் இருந்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே மழைகாரணமாக வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், பட்டாசு புகையால் வானம் பார்க்க முடியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் சுவாசம் சம்பந்தமான  நோய் கொண்டவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை பனியுடன் சேர்த்து புகையும் சேர்ந்து கொண்டதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 8 மணிக்கு பிறகு புகை மூட்டம் குறைந்தது.* 45 சிகரெட் பிடித்த பாதிப்புதீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்கு சென்றுள்ளது. காற்றின் அளவு 50 ஆக இருந்தால் நல்ல காற்று, 100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றின் ஏக்யூஐ அபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 ஆகவும், மணலியில் 578 ஆகவும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகம். அடுத்த சில நாட்களில் மருத்துவமனைக்கு நுரையீரல் நோயால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. இந்த அளவு காற்று மாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.* மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது. தீபாவளி நாளான 4.11.2021 அன்று காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் 5.11.2021 காலை 6 மணி வரை 342 லிருந்து 385 வரை மிக மோசமான அளவுகள் என கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணிகளாக காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2021ம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்கு காரணம் ஆகும். ஒலி மாசுபாட்டை பொறுத்தவரையில், பெசன்ட் நகர் தீபாவளிக்கு முன் (28.10.2021) 55 டெசிபல் ஆக இருந்தது தீபாவளி அன்று 73 டெசிபல் ஆகவும், தி.நகரில் 66 டெசிபல் ஆக இருந்தது 79 டெசிபல் ஆகவும், நுங்கம்பாக்கம் 60 டெசிபல் ஆக இருந்தது 74 டெசிபல் ஆகவும்,  திருவல்லிக்கேணியில் 56 டெசிபல் ஆக இருந்தது 69 டெசிபலாகவும், சவுகார்பேட்டையில் 60 டெசிபலாக இருந்தது 72 டெசிபலாகவும் பதிவாகியது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_80353946.jpgஉச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்ததால் மொத்தமாக வெடித்த மக்கள் சென்னையில் காற்று மாசுபாடு உச்சம் தொட்டது: நோயாளிகள், வயதானவர்கள் கடும் பாதிப்பு
தீபாவளி பண்டிகை விடுமுறை நீட்டிப்பு எதிரொலி சென்னை செல்லும் தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்: காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது https://ift.tt/3bNe4IG
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்: தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி https://ift.tt/3GUAW7j
குன்னூரில் பரபரப்பு நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்த அதிமுக மாஜி எம்பிக்கு அடி, உதை: வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்குப்பதிவு https://ift.tt/3bKYn4M
வேலூர், ஓசூரில் ரூ.2.27 கோடி பறிமுதல் விவகாரம் பெண் அதிகாரியின் சொத்து விவரம் பதிவுத்துறைக்கு போலீஸ் கடிதம் https://ift.tt/3wmdnzp
பைக்கில் எடுத்து சென்றபோது நாட்டு வெடி வெடித்து தந்தை, மகன் உடல் சிதறி பலி: 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட உடல் பாகங்கள் https://ift.tt/3nYCDbf
அளவுக்கு அதிகமாக மது அருந்திய 3 பேர் பலி: ‘தின்னர்’ கலந்து குடித்தனரா? https://ift.tt/3BQmbPc
முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு: 142 அடி வரை நீர் தேக்கப்படும் என உறுதி https://ift.tt/3o5mZuw


சென்னை: தீபாவளியன்று அரசு அனுமதித்த நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2161 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 891 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. மாலையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆணையின் பேரில் தீபாவளியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் தீபாவளியன்று அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று வரை 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 204 வழக்குகளும், 2020ம் ஆண்டு 428 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று, தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியதாக நேற்று முன்தினம் 43 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்ட நிலையில் நேற்று வரை விதிகள் மீறி பட்டாசு கடைகள் நடத்தியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் மண்டல ஐஜிக்கள் சந்தோஷ்குமார், பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் ஆகியோர் மாநிலம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தியிருந்தனர். அதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர கூடுதல் நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 1270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் 2,161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_6_2021_69967288.jpgஅனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தடையை மீறி பட்டாசு வெடித்த 2,161 பேர் மீது வழக்கு: கடைகள் மீதும் நடவடிக்கை


சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. மதுவிற்பனை புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தீபாவளி காலங்களில் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாகத் தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் விற்பனை அதிகம் இருக்கும். மதுப் பழக்கத்தால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள், குடும்ப வன்முறைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது, உடல் நலம் பாதித்து மரணம் எனப் பல விஷயங்கள் இருந்தாலும் மதுவின் மீதுள்ள மோகம் குறையவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கும், சென்னையில் ரூ.79.84 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும், திருச்சியில் ரூ.89.95 கோடிக்கும் மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.74.46 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.205.61 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.227.88 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ.225 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ.239.81 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையை விட இது ரூ.36.66 கோடி குறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மதுவிற்பனை கால அளவை கடைப்பிடிக்காமல் பல இடங்களில் மதுவிற்பனை அதிகாலை 3 மணி முதல் தொடங்கி நாள் முழுதும் நடப்பதும், அதிக அளவில் பார்கள், பப்கள் இயங்குவதும், மதுவின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதும் காரணமாகக் கூறலாம்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_45293826.jpgதீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை!: மதுரை மண்டலத்தில் விற்பனை ஜோர்..!!
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு https://ift.tt/3k3hThl
காலண்டர் விலை ‘கையை கடிக்கும்?’ 35 % விலை உயரும் என உற்பத்தியாளர் கவலை https://ift.tt/3CN5MvX
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் போதிய வெயில் இல்லாததால் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்பு-தொழிலாளர்கள் கவலை https://ift.tt/3nYzUP4
மீண்டும் புத்துயிர் பெறும் மல்லர் கம்பம் கலை-பயிற்சியில் 60 வீரர்,வீராங்கனைகள் https://ift.tt/3ENHX81
விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை https://ift.tt/3mOcnAI
ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம் https://ift.tt/3mMZdnL


சென்னை: சென்னை மதுரைவாயலில் காரில் வைத்திருந்த கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். தனது கை துப்பாக்கியில் கோபி கிருஷ்ணா தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை எடுத்துச் சென்றது யார் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_39568729.jpgசென்னை மதுரைவாயலில் கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார்


சென்னை: தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலம் ரூ.51.68, திருச்சி மண்டலம் ரூ.47.57, சேலம் மண்டலம் ரூ.46.62 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_25173587.jpgதமிழகத்தில் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக விமானத்தில் மதுரை செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுத்திருப்பதால் அனைத்து அணைகள், அணைக்கட்டுகளிலும் நேரில் ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறினார். முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யாமல், அணையின் நிலவரம் தெரியாமல் அதிமுக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது வேடிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மதுரையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தேக்கடை செல்லும் அமைச்சர் துரைமுருகன், படகில் முல்லை பெரியாறு அணை பகுதிக்கு செல்கிறார். இன்றும், நாளையும் தேக்கடையிலேயே தங்கி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_43992252.jpgநீட் தேர்வுக்கு எதிராக கருத்துக் கூறவே தைரியம் இல்லாத அதிமுக, முல்லை பெரியாறு தொடர்பாக போராட்டம் நடத்துவது வேடிக்கையானது: அமைச்சர் துரைமுருகன்


சென்னை: தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_5157108.jpgதமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,500 க்கு விற்பனையாகிறது.  மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_11_5_2021_43523807.jpgசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ரூ.36,000 க்கு விற்பனை
ஏற்காடு செல்லும் குப்பனூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு https://ift.tt/3o2JDDI
இயற்கை பேரிடரிலிருந்து காப்பாற்ற வீட்டின் மொட்டை மாடியில் நெல் நாற்றங்கால்-மயிலாடுதுறை விவசாயி அசத்தல் https://ift.tt/3k9VhM1
டீசல் இன்ஜினுக்கு பதிலாக பைபர் படகில் காஸ் சிலிண்டர் பொருத்தி சோதனை ஓட்டம் https://ift.tt/3GMvzqN
அசத்தல் சுவையில் சீடை, சீவல், முறுக்குகள் மக்களை கவர்ந்திழுக்கும் கோவில்பட்டி பலகாரங்கள்-சேலத்தில் கமகமக்குது தீபாவளி விற்பனை https://ift.tt/3q3Ea2m
கைத்தறிக்கு புத்துயிர் அளிக்க குமரியில் இனி சேலையும் நெய்வோம்....களம் இறங்கிய பெண்கள் https://ift.tt/3EPYBnI
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை