ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக, ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி மற்றும் இதர காய்கறிகள் வரத்து குறைய  துவங்கியுள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று கிடுகிடுவென உயர்ந்து ஒரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600க்கும், 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.800 முதல் ரூ.900 வரையும்  விற்பனையானது. தக்காளி வரத்து குறைந்ததால் நேற்று 14 கிலோ பெட்டி ரூ.900 முதல் ரூ.1,200 வரையும், 25 கிலோ பெட்டி ரூ.1,400 முதல் ரூ.1,600 வரையும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டன என்றார்.



from Dinakaran.com |07 Nov 2021 https://ift.tt/3mQpOAp