திருவள்ளூர்: கடம்பத்துர் ஒன்றிய குழுக்கூட்டத்தில் ரூ. 2.10 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடம்பத்துர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ. 1.4 கோடி மதிப்பில் கடம்பத்தூர், தொடுகாடு தண்டலம், எறையமங்கலம், மப்பேடு, வெங்கத்தூர் உட்பட 17 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மின் மோட்டார்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், வெங்கத்தூர், பிஞ்சிவாக்கம், கூவம், பேரம்பாக்கம் உள்ளிபட 19 ஊராட்சிகளில் ரூ. 1.6 கோடி மதிப்பில் சாலைகளை அமைத்தல் என மொத்தம் ரூ. 2.10 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சுகாதாரப்பணிகள் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கே.திராவிட பக்தன், நா.வெங்கடேசன், பா.யோகநாதன், கே.பி.எஸ்.கார்த்திக், எம்.நரேஷ்குமார் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/3bbzAFG