நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட அரசு போக்குவரத்து கழக மற்றும் விரைவு போக்குவரத்து கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.11 கோடியை இன்னும் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காமல் நிர்வாகம் செலவு செய்து விட்டது. இதனால் கூட்டுறவு சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகைகள், ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட வேண்டிய பணத்தை வழங்க முடியவில்லை. இதை உடனடியாக வழங்க கோரி, கூட்டுறவு சங்க நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த விசாரணையின் போது மாதம், மாதம் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு விடும் என்று அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணம் வழங்கவில்லை. இதை எதிர்த்து தற்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள போக்குவரத்து கழக நிர்வாகம் கூட்டுறவு சங்கத்துக்கு  கடந்த 24.3.2020 முதல் 31.3.2020 வரை தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.16 லட்சத்துக்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் இந்த காசோலைகள் தற்போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. இது குறித்து கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியது. வருமானம் இல்லாததால், திவால் நிலைக்கு வந்துவிட்டதாகவும்,அதனால் பணம் போட முடியவில்லை என கூறி உள்ளனர். தற்போது இந்த பிரச்சினையையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியது. வருமானம் இல்லாததால், திவால் நிலைக்கு வந்துவிட்டதாகவும்,அதனால் பணம் போட முடியவில்லை என கூறி உள்ளனர்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/32HxXvD