சென்னை: தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சீராய்வு கூட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்திட ஏதுவாக 100 கோயில்களை தேர்வு செய்த விரைந்து திருப்பணிகளை முடித்து இந்நிதியாண்டிற்குள் குடமுழுக்கு நடத்திட வேண்டும்.அதன்படி ரூ.10 லட்சம் மேல் வருமானம் வரும் 10 பெரிய கோயில்கள், ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சம் வருமானம், ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வருமானம் வரும் 40 கோயில்கள், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் வரும் 50 கோயில்கள் என மொத்தம் 100 கோயில்களை தேர்வு செய்து தருதல் வேண்டும். அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து, திருப்பணிகள் செய்ய தயார் நிலையில் உள்ள கோயிலின் பட்டியலை இக்குறிப்புகள் கிடைத்த 3 நாட்களுக்குள் தவறாறு அனுப்பிடல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3dqwMHd