சென்னை: தமிழகத்தில் நேற்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,62,622 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,506 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,79,696 ஆக உள்ளது. இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து நேற்று 5,537 பேர் நேற்று குணடைந்தனர். அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், 34 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 79 பேர் அரசு மருத்துவமனைகளையும் சேர்ந்தவர்கள். மேலும், மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 32,619 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறனர். நேற்று 23 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்திருந்தது. சென்னையில் பாதித்தோரின் எண்ணிக்கை 257 ஆக குறைந்துள்ளது. இதேபோல், அதிகபட்சமாக சென்னையில் 15, கோவையில் 12 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல்,  நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3AeOdnI