* நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை * அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை 11 மணியளவில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, ஆணையர் குமரகுருபரன்,  கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் காவிரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.    இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் 3,500 கோடி அளவில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை பறிமுதல் செய்ததாகவும்,  8,700 இடங்களை ஆக்கிரமிப்பாளரின் பிடியில் மீட்டதாக எதிர்க்கட்சி தலைவர்  கூறுகிறார்.அப்படி கோயில் இடங்களை மீட்டிருந்தால் சிவகங்கையில் கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் மதிப்பிலான நிலத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஏன் நிறுத்தவில்லை. இன்றைய ஆட்சியை பொறுத்தவரையில் யார் தவறு செய்தாலும், கோயில் நிலத்தை யார் அபகரித்தாலும், அது யாராக இருந்தாலும் எப்படிபட்ட பதவியில் இருந்தாலும் அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் எந்தெந்த நிலத்தை,எந்தெந்த பகுதியில் எடுக்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்து, இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை சுவாதீனம்  செய்ததன் விளைவாக 50 நாள் ஆட்சியில் 79.5 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ரூ.520 கோடி ஆகும். இதை நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கிறோம். அதேபோல  எடப்பாடி தன் ஆட்சி காலத்தில் சுவாதீனம் செய்த சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்.  கடந்த  5 ஆண்டு ஆட்சியில் 1210 பேர் தற்காலிக பணியாளர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 200 முதல் 300 பேர் இந்த பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் அர்ச்சகர் முதல் கோயில் பணியாளர்கள் வரை யாரெல்லாம் பணிபுரிகிறார்களோ, அவர்கள் கட்சி பேதமின்றி  நிரந்தரமாக்கப்படுவார்கள். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல்வர் கையால் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.4 கோடி ஆவணம்டிஜிட்டல்கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களில் யாரெல்லாம் வாடகை தாரர்களாக இருக்கிறார்களோ அவர்களின் விவரங்களையும்  வெளியிடவுள்ளோம். 4 கோடி நிலங்களின் ஆவணங்களை முழுமையாக ஸ்கேன் செய்து அதை  டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம்.மாஜி அமைச்சரை காப்பாற்ற எடப்பாடி முயற்சிஅமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ‘‘40 ஆயிரம் பேருக்கு பணி வழங்குவதற்கான விவரங்கள் திரட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணியாளர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்க இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவர்களை அடையாளம் காட்டினால், பணியாளர்களாக ஏற்றுக்கொள்வோம். பணியாளர் நியமனத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது. தவறு வெளிப்படுமோ என்கிற அச்சத்தில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை காப்பாற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி முயற்சிக்கிறார். கோயில் பணியாளர் எண்ணிக்கை 1 லட்சம் தான் இருக்கும். நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் அவர் சொன்ன 40 ஆயிரம் பேர் எண்ணிக்கை கிடைக்கவில்லை. எனவே, எடப்பாடி கூறியது  உண்மைக்கு புறம்பான கருத்து. உண்மையிலேயே நடந்து இருந்தால் அவர்களின் பட்டியல் வெளியிட வேண்டும்’ என்றார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3jt90OG