சென்னை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் (வயது 98), கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஜூன் 6ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது 100 சதவிகிதம் கொரோனோ நோயாளிகள் இல்லாத மருத்துவமனை. திலீப் குமாருக்கு கொரோனா தொற்று இல்லை. நுரையீரலில் ஏற்பட்டுள்ள நீர்க்கோர்ப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாக சிகிச்சை அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், திலீப் குமாருக்கு நேற்று கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இம்முறையும் அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடவில்லை.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3juDHTn