சென்னை: வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாத ஊதியம் 2,00,000 முதல் 2,50,000 வரை சம்பளம் பெறுமானம் உள்ள  (டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண்)  300 முதல் 500 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்ட ஜிசிசி ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு  குவைத் நாட்டில் பணிபுரிய தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக 27,000 முதல் 34,500 வரை வழங்கப்படும். அரபு உணவு வகைகள் சமைக்க ஆண் சமையல்காரர்கள் தேவைப்படுகிறார்கள். சமையலருக்கு மாத ஊதியம் 37,000 வழங்கப்படும். குவைத் நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.  மாத ஊதியம் 29,640 முதல் 32,000  வரை வழங்கப்படும். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினிரியர், ஐடிஐ பிட்டர் தேர்ச்சி பெற்ற 22 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட Casting/Inspection/Machine-operator- பணிபுரிய ஓமன்நாட்டிற்கு தேவை பட்டியல் வந்துள்ளது. மாதஊதியம் 29,000 வழங்கப்படும். இந்த சம்பளம் சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், விமானப்பயணச்சீட்டு, ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் தனியாக வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com-ல் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது.   எனவே வெளிநாட்டில் வேலை செய்ய  விரும்புகிறவர்கள் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி (044-22505886/ 22502267) எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை 10,350 பேரை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3DyHF51