நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சண்முக சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த தீபக் அரோரா என்பவரின் மனைவி பிரியா அரோராவுக்கு சொந்தமான கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தை சட்டத்திற்கு உட்பட்டு கிரையம் செய்து இடம் வாங்கப்பட்டுள்ளது. இதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பார்க்கச் சென்ற சிலரை வேண்டுமென்றே சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் பிரியா அரோராவின் கணவரின் தூண்டுதல் பேரில் போலீசார் முறையாக விசாரிக்காமல் கைது செய்து பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் பெயர் சேர்க்கப்படவில்லை. இரு ஆண்டுகளாக தீபக் அரோரா மற்றும் பிரியா அரோரா இவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி தமமுகவுக்கும், எங்கள் தலைவர் ஜான்பாண்டியனுக்கும் களங்கத்தை ஏற்படுத்த போலீசார் காழ்ப்புணர்ச்சியோடு தவறான வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.  இப்பிரச்னையை சட்டப்படி தமமுக எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3kSOXJO