மாமல்லபுரம்: கடந்த 1980ம் ஆண்டு முதல் செப்டம்பர் 27ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது, புராதன சின்னங்கள் முன்பு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்பட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேளதாளம் முழங்க வரவேற்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு சங்கு மணி மாலை, சந்தன மாலை, பூ மாலை ஆகியவை அணிவித்து மரியாதை செய்வார்கள். இதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கரகத்தை தலையில் வைத்து நடனமாடுவர். கொரோனா, காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வரவில்லை. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா தினம் கொண்டாடவில்லை. மேலும், சுற்றுலா தினத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளே வந்ததால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் களையிழந்து காணப்பட்டன.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/2WoJSPY