திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியங்களில் உள்ள 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பிற்காக ஜெர்மனி அரசு, இந்தோ ஜெர்மன் நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து முககவசங்கள், சானிடைசர், தெர்மாமீட்டர், ஆக்சி மீட்டர் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம் கலந்துகண்டு முககவசங்கள், சானிடைசர், தெர்மாமீட்டர், ஆக்சி மீட்டர் ஆகியவற்றை வழங்கினார். அப்போது திருவள்ளுர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை செல்வி, சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமாயாசிரியர் முரளிதரன், மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் உள்பட 34 அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நா. பூபால முருகன், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன செயலாளர் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/2WqcB6O