சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மழை காலத்தில் பணிகளை கண்காணிக்க, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து துறைகளும், துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.அதன்படி திருவொற்றியூர் மண்டலத்திற்கு தமிழக பைபர்நெட் கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கமல் கிஷோர், மணலி  சாலை திட்டம், திட்ட இயக்குனர் பி.கணேசன், மாதவரம் சுற்றுலாத்துறை  இயக்குனர் சந்தீப் நந்தூரி, தண்டையார்பேட்டை நில அளவைத்துறை இயக்குனர் டி.ஜி.வினய், ராயபுரம்  பொதுப்பணித்துறை இணை செயலர் மகேஸ்வரி ரவிகுமார், திரு.வி.க.நகர் அமலாக்கத்துறை இணை கமிஷனர் நர்னாவர் மனிஷ் சங்கர்ராவ், அம்பத்தூர் சிறுபான்மை நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், அண்ணா நகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலர் எஸ்.பழனிசாமி, தேனாம்பேட்டை தமிழக உப்பு கழகம் நிர்வாக இயக்குனர் கே.ராஜாமணி, கோடம்பாக்கம் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை செயலர் எம்.விஜயலக்ஷ்மி, வளசரவாக்கம் வணிக வரித்துறை இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத் ஆலந்தூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், அடையாறு அறிவியல் நகரம்  துணை தலைவர் எஸ்.மலர்விழி, பெருங்குடி தமிழக சேமிப்பு கிடங்குகள் கழக நிர்வாக இயக்குனர் ஏ.சிவஞானம் மற்றும் சோழிங்கநல்லூர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் கே.வீரராகவராவ் ஆகிய 15 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.முன்னெச்சரிக்கை பணிகளுக்கு திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல், மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகுத்தல், போதிய அளவில் கையிருப்பில் வைத்திருத்தல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான இடத்திற்கு ராணுவம், கடற்படை, புவியியல் ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மீட்பு குழு உதவியை நாடுவது மேலும் மக்களுடன் இணைந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்கால பணிகளை இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3ie1J3N