தூத்துக்குடி: இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தனது வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் அதற்கு ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மூன்று மாதம் அனுமதி அளித்தது.ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி இன்று முடிவடைகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேலும் 6 மாதம் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி இன்றுடன் முடிவடைவதால், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை நேற்றுடன் நிறுத்தியுள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3BYg1xv