சென்னை: அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தில் கோயில்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் கோயில்கள் பற்றிய பொதுவான விவரங்கள், சொத்து விவரங்கள், வரவு செலவு திட்டம், கேட்டு வசூல் நிலுவை மற்றும் இணையவழி சேவைகள் முதலியவற்றை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின்படி மென்பொருள் நிக் நிறுவனம் மூலம் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கோயில்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது, அது தொடர்பான அறிக்கைகள் பெறுவதில் இடர்பாடுகள், சிரமங்கள், சந்தேகங்கள் முதலியவற்றை தெளிவுபடுத்திடவும், கோயில் பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய உதவிடவும் ஒருங்கிணைப்பு குழு தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக வேலை நேரங்களில் ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தை பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்ேதகங்களை கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3fgQ96x