விழுப்புரம்:  ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி வலியுறுத்தினார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கண்ணகி, முருகேசன் சாதிய படுகொலை வழக்கின் தீர்ப்பை முன்நிறுத்தி, சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி பொது உரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை மாநில அரசே கொண்டு வரவேண்டும். அதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. மேலும் ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரவில்லை.  இதனை மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வரவேண்டும். இதற்காக ஒன்றிய அரசு இதுவரை முனைப்பையும், முயற்சியையும் காட்டவில்லை. ஒன்றிய அரசு விரும்பினால் அவர்களுக்கு வேண்டிய சட்டங்களை மட்டும் எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் 2 அவைகளிலும் சட்டத்தை கொண்டு வருவார்கள் என்றார்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3CCrMty