கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், சுகாதார துறை துணை இயக்குநர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 20 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மணவிகளுக்கு மூக்கு கண்ணாடி ஆகியவற்றை  வழங்கினர்.  பின்னர், சிறப்பு  கொரோனா  தடுப்பூசி போடப்படும் முகாமினையும் பார்வையிட்டார். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் நந்திவரம் பெரிய தெருவில் குடியிருக்கும் மக்களிடம் சென்று ரத்தகொதிப்பு, சரக்கரை வியாதி மற்றும் கை, கால் செயலிழந்தவர்களுக்கு பிசியோதெரப்பி மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையினையும் இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர வி.எஸ்.ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர எம்.கே.டி.கார்த்திக் உட்பட ஏராளமானோர கலந்துகொண்டனர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3w2cHPj