ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்கேஎம் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு சொந்தமான 11க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 27ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று 4வது நாளாக அந்நிறுவனத்திற்கு சொந்தமான, சோளாங்கபாளையத்தில் உள்ள முட்டை பவுடர் உற்பத்தி ஆலை, நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலை, பூர்ணா ஆயில் நிறுவனம், ஈரோடு சோலார் அருகே எஸ்கேஎம் தலைமை அலுவலகம் ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.200 கோடி மதிப்பிலான முக்கிய சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் எஸ்கேஎம் தலைவர் மயிலானந்தன், நிர்வாக இயக்குநர்கள் ஸ்ரீ சிவ்குமார், சந்திசேகர் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. இன்றும் சோதனை தொடர்கிறது.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/2ZGTlDC