சென்னை: அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில்ரூ.1000க்கு கீழ் மாத ஊதியம் பெறும் பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 4ம் தேதி சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது, ஒரு கால பூஜை நடைபெறும் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகைரூ.1000 வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியரர்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் தோறும் 5ம் தேதியன்று தலைமை அலுவலகத்தில் இருந்து தலாரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் மூலமாக நேரடியாக செலுத்தப்படும். பணியாளர்களின் சேமிப்பு கணக்கு எண் எஸ்பிஐ வங்கியில் இருத்தல் வேண்டும். கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர்ரூ.1000க்கும் கீழ் மாத தொகுப்பூதியம் பெறுவதாக அறியப்படுகிறது. இவ்வாறானா மாத ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிந்து வரும் பணியாளர்களின் விவரங்களை வரும் 2ம் தேதிக்குள் அனுப்பி வைகக வேண்டும். அதில்,ரூ.1000க்கு கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் பெயர், கோயில் பெயர், பணியிட பெயர், நிரந்தரம், தற்காலிகம், பணி, பணியாளர் பெறும்மாதவூதியம், வருகை பதிவேட்டினை ஒப்பு நோக்கி பணியாளருக்கு நாளது வரை மாத ஊதியம் வழங்கப்பட்டதற்கான சான்று உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3w3Kisv