சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் வெளியிட்ட அறிக்கை:  தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். பேரறிஞர் அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார்.எனவே நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என மாற்றிட, 1967 ஜூலை 18ம் நாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த ஜூலை 18ம் நாளை, ‘தமிழ்நாடு நாள்’ அன்று கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3ExDyGd