அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழு செலவையும் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.அய்யாதுரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகியுள்ள அரசு பள்ளிகளில் படித்த7 மாணவிகளின் 5 ஆண்டு படிப்புக்கான முழு செலவையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை - ஏ.வெங்டேஷ்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், திமுக வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவருமான எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழுப் செலவையும் ஏற்பதாக அய்யாதுரைப் பாண்டியன் நேற்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்