புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ளஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் ஏவுதல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா ஊரடங்கால் கோளாறை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்