திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ சிவகாமி வின்சென்ட்(65) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

பாமக சார்பில் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற சிவகாமி வின்சென்ட், பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். எனினும், 2006 தேர்தலில் அதிமுக சார்பில் அவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்