கரோனா தொற்று பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான பல்வேறு வகை மலர் நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் குடில்கள் அமைத்து, மலர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பராமரிக்கப்படும் நாற்றுகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளும் வீடுகளில் வளர்க்க வாங்கி செல்வார்கள். குறிப்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு, நர்சரிகளில் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் அரியவகையான மூலிகைச் செடிகள், அலங்கார தோரணச் செடிகள், மலர் நாற்றுகள், மர நாற்றுகள், நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பழ நாற்றுகள் மற்றும் கற்றாழை செடிகளும் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்