தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைத் தவிர 5 மாநில தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்தன. மின்னணு வாக்கு இயந்திரங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்