தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். அந்த வகையில், லட்சக்கணக்கான முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். இந்த புதிய வாக்காளர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து நடத்தும் ‘ஜனநாயகத் திருவிழா’ எனும் ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 31) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குப்பதிவைச் செலுத்த வலியுறுத்தியும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்